உதடு(Lips):-

எபி 13 : 15. ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/rSuHZkoOh1Q

நாம் யாவருக்கும் இருக்கிற ஒரு அவயம் உதடு. அந்த உதடுகளினால் நாம் என்ன செய்ய வேண்டும்; நாம் என்ன செய்ய கூடாதென்பதை கர்த்தர் வேதாகமத்தில் எழுதிக்கொடுத்திருக்கிறார்.

எத்தனை ஆயிரம் ஸ்தோத்திரபலிகளை நாம் தொலைக்காட்சியிலோ, இல்லை வாசித்தோ அறிந்தாலும், அதை நாம் நம்முடைய உதடுகளால் அறிக்கையிட்டு ஸ்தோத்திரபலிகளை ஏறெடுக்க வேண்டுமென்று கர்த்தர் விருப்பமுடையவராயிருக்கிறார். நம்முடைய வாழ்க்கையில் இயேசு செய்த நன்மைகளை நினைத்து உதடுகளினால் நன்றிபலிகளை ஏறெடுக்கவேண்டும்.

அடுத்ததாக நாம் நம்முடைய உதடுகளினால் பதறி ஆணையிடக்கூடாது என்று வேதம் எச்சரிக்கிறதாய் காணப்படுகிறது. யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை (யோபு 2 : 10 ). அநேக நேரங்களில் நாம் உதடுகளினால் மற்றவர்களை காயப்படுத்தி, நொறுக்கி பேசிவிடுகிறோம். ஏன் இயேசுவையே ஒருசில கூட்டம் அவரை நிந்தித்து உதட்டை பிதுக்கி, தலையை துலுக்குகிற கூட்டமாக இருந்தது. ஒருபோதும் தேவ ஜனங்கள் இயேசுவுக்கு விரோதமாக உதட்டை பிதுக்கிவிடக்கூடாது.

அவரவர் தங்கள் தோழரோடே பொய் பேசுகிறார்கள்; இச்சக உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள். இச்சகம்பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் கர்த்தர் அறுத்துப்போடுவார். அவர்கள்: எங்கள் நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையது; யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள் ( சங்கீதம் 12:2-4 ). இப்படிப்பட்ட உதடுகளையுடையவர்களாகவும் கர்த்தருடைய பிள்ளைகள் ஒருபோதும் இருந்துவிடக்கூடாது.

அந்நிய தேவர்களை உங்களுடைய உதடுகளால் உச்சரிக்க கூடாதென்றும், உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள்ளவேண்டுமென்றும், உதடுகளின் மாறுபாட்டை தூரப்படுத்தவேண்டுமென்றும், கர்த்தருடைய வசனம் எச்சரிக்கிறதாயிருக்கிறது. மாறாக, நம்முடைய உதடுகளை சங்கீதக்காரன் சொல்வதைப்போல என் உதடுகள் உம்மைத் துதிக்கும் என்றும், என் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும் என்றும், நான் பாடும்போது என் உதடுகளும், நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும் என்றும் சொல்வதை போல இயேசுவை துதித்து, அவரை உயர்த்துவதற்கு அதிகமாக பயன்படுத்துவீர்களென்றால், அதில் கர்த்தர் பிரியமுள்ளவராயிருப்பார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *