மீறுதலை மன்னிக்கிற தேவன்(The God who forgives the transgression):-

மீகா 7 : 18. தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபைசெய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/nnmN_eOucK8

துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய நம்முடைய தேவனுக்கு ஒப்பானவர் யார்? (யாத் 15:11 ). ஆகாயமண்டலத்தில் கர்த்தருக்கு நிகரானவர் யார்? பலவான்களின் புத்திரரில் கர்த்தருக்கு ஒப்பானவர் யார்? (சங் 89:6 ). பரிசுத்தத்தில் மகத்துவமுள்ள நம்முடைய தேவனுக்கு ஒப்பானவர் யார்? அதுபோல நம்முடைய மீறுதல்களை மன்னிக்கிற நம்முடைய தேவனுக்கு ஒப்பானவர் யார் ?

ஒருமுறை விபச்சாரத்தில் ஈடுபட்டு கையும் களவுமாக பிடிபட்ட விபச்சார ஸ்திரீயை பிடித்து இயேசுவுக்கு முன்பாக கொண்டுவந்தார்கள். சுற்றியிருந்த அத்தனை பேரும் அவள் மீது குற்றம் சாட்டி அவளை கல்லெறிந்து கொல்லவேண்டும் என்று சொன்னார்கள். தரையில் எழுதிக்கொண்டிருந்த இயேசு சொன்னார், உங்களில் யார் குற்றம்செய்யவில்லையோ அவர்கள் முதலாவது கல்லெறியக்கடவர்கள் என்று சொன்னார். அதை கேட்டவுடன் மனதில் குத்தப்பட்டவர்களாக, சிறியோர்கள், பெரியோர்கள் எல்லாரும் கடந்து சென்றுவிட்டார்கள். இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயை பார்த்து மகளே என்று அழைத்தார். உலகம் விபச்சார ஸ்திரி என்று அவளை நிந்தித்து. ஆனால் இயேசு அவளை மகளே என்று அழைத்து அவளுடைய பாவங்களை மன்னித்தார்.

சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த கள்ளனை ஆண்டவர் மன்னித்து, இன்று நீ என்னோடுகூட பரதீசியிலிருப்பாய் என்றார். இயேசு சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும்போது பிதாவை பார்த்து சொன்னார், பிதாவே, இவர்களுக்கு மன்னியும் என்று. அநேக கொள்ளைக்காரர்களும், வேசிமார்க்கத்தாரும் கர்த்தருடைய மன்னிப்பை பெற்றுக்கொண்டு இன்று வைராக்கியமாக ஊழியம் செய்யும் அநேகரை நாம் சரித்திரத்தில் பார்க்கமுடிகிறது.

உங்கள் ஒவ்வொருடைய பாவத்தையும் இயேசு மன்னிப்பார். அவர் மன்னிப்பதற்கு தயை பெருத்திருக்கிறார். இயேசு ஒவ்வொருவருடைய பாவங்களையும் மன்னித்து ஒவ்வொருவருக்கும் ரட்சிப்பை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அவர் ஒவ்வொருவருக்காகவும் சிலுவையில் மரணத்தை ருசிபார்த்தார்.

இயேசுவிடம் ஏராளமான கிருபைகளும், இறக்கங்களும், தயையும், மன்னிப்பும் உண்டு. இயேசுகிறிஸ்துவின் ரத்தம் சகல பாவங்களையும் மன்னித்து சுத்திகரிக்கும். பாவங்கள் மன்னிக்கப்பட அநேக கிலோமீட்டர் நடக்கவோ, உடலை வருத்திக்கொள்ளவோ தேவையில்லை. அப்படி செய்தாலும் ஒருவரும் ஒருவருடைய பாவத்தையும் மன்னிக்க முடியாது. பாவங்களை மன்னிப்பவர் இயேசு ஒருவர் மாத்திரமே. உங்கள் பாவங்களை இயேசுவிடம் அறிக்கை செய்யும்போது, அவர் நிச்சயமாகவே உங்களை மன்னிப்பார். ஆம் நம்முடைய பாவங்களை, நம்முடைய மீறுதல்களை, நம்முடைய அக்கிரமங்களை மன்னிப்பதில் அவருக்கு ஒப்பானவர் யாருமில்லை.

மேலே வானத்திலும் கீழே பூமியிலும் நம்முடைய தேவனுக்கு ஒப்பான தேவன் இல்லை (II நாளாகமம் 6:14 ).

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *