சிறுமையின் பாதை.

தேவன் தன் ஜனங்களை சில நேரங்களில் சிறுமையின் பாதையில் நடுத்துகிறார் . என் அப்படி நடுத்துகிறார்? என்று உபாகமம் 8ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட மூன்று வசனங்களை கவனிப்போம்

  1. சோதிக்கும் படி (To Test)

உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக. (உபா. 8:2).

ஒரு வகுப்பில் இருந்து மேல் வகுப்பிற்கு செல்வதற்கு தேர்வு வைப்பதை போல் தேவன் நம்மை சில நேரம் சிறுமைப்படுத்தி சோதித்து நம் இருதயம் எப்படி இருக்கிறது என்பதை நாம் அறியும்படி செய்கிறார்.

  1. கற்றுகொடுக்கும் படி (To Teach)

அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார் . (உபா. 8:3)

தாழ்வு காலத்தில் சிந்தனை செய் (Eccl 7:14) என்று வேதம் சொல்கிறது நாம் தேவனை அதிகமாய் சார்ந்து கொள்வதற்காகவும் அவருடைய பிரமாணங்களை கற்றுக்கொடுக்கும்படியாகவும் சில நேரங்களில் தேவன் சிறுமைப்படுத்துகிறார்.

  1. பின் நாட்களில் நன்மை செய்ய (To bless your future)

உன்னுடைய பின்நாட்களில் உனக்கு நன்மை செய்யும்பொருட்டு, உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைச் சோதித்து, கொள்ளிவாய்ச் சர்ப்பங்களும் தேள்களும், தண்ணீரில்லாத வறட்சியுமுள்ள பயங்கரமான பெரிய வனாந்தரவழியாய் உன்னை அழைத்துவந்தவரும், உனக்காகப் பாறையான கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணினவரும் (உபா. 8:15)
மேன்மைக்கு முன்னானது தாழ்மை (Prov 18:12) என்று வேதம் சொல்கிறது.

யோசேப்பு ஒரு அடிமையாக விற்கப்பட்டு, பின்பு சிறைச்சாலை கைதியாக சில ஆண்டுகள் இருக்கவேண்டியதாய் இருந்தது.பின்பு தேசத்தை ஆளும்படிக்கு தேவன் அவரை உயர்த்தினார். தன் ஜனங்களின் பின்நாட்களில் நன்மை செய்யும்படி தேவன் சில காலம் சிறுமையின் பாதையில் நடத்துகிறார்.

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக !

If you plan to build a tall house of virtues, you must first lay deep foundations of humility – Augustine.

Thivakar.B
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *