சோம்பல் பல விதங்களில் வெளிப்படும் . உதாரணமாக அதிகப்படியான தூக்கம் , ஓய்வு(Prov 6:9), ,வேலை செய்யாமல் இருப்பது, எதாவது சாக்குபோக்கு சொல்லி தள்ளி போடுவது (Prov 20:4), ஒரு வேலையை முடிக்காமல் விடுவது (Prov 12:27,19:24) ஒன்றும் செய்யாமல் இருப்பது (Mat 25:25,26)
சோம்பல் வறுமையை கொண்டு வரும், வாழ்கையை பாழாக்கும் (Prov 6:11) அடிமைத்தனத்திற்கு உட்படுத்தும் (Prov 12:24). தன் எஜமானருக்கு ,சோம்பேறி எரிச்சலை ஏற்படுத்துவான் (Pro 10:26).
சோம்பேறி ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது (Prov 13:4) சோம்பேறி அழிவை கொண்டுவருவான் (Prov 18:9) எல்லாவற்றிற்கும் மேலாக சோம்பல் ஒரு மனிதனை பரலோகத்தை இழக்கும் படி செய்துவிடும் (Mat 25:26)
தேவனுக்கு பிரியமான தாவீது, ராஜாக்கள் யுத்தம் செய்யும் காலத்தில் நித்திரை செய்து, மாலை நேரத்தில் மாடியில் உலாத்தி கொண்டிருந்தார். (2 Sam 11) தாவீது ஒரு சிறிய சோம்பலுக்கு இடம் கொடுத்ததால் பின்வரும் பாவங்களில் விழுந்தார்.
• ஒரு பெண்ணை இச்சையோடு பார்த்தார்
• ‘பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக’ என்ற பிரமாணத்தை மீறினார்.
• வேசித்தனம் செய்தார்
• தன் தவறுகளை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்
• தனக்கு உண்மையாய் ஊழியம் செய்த உரியவை சதி செய்து சாகும்படி செய்தார்
• தேவனை அசட்டை செய்தார்
• இவ்வளவு தவறுகள் செய்தபின்பும்,ஒரு குழந்தை பிறக்கும் வரை உணர்வை இழந்து, நாத்தான் தீர்க்கதரிசி கண்டித்த பின்பே உணர்வடைந்தார்
• சத்துருக்கள் தூஷிப்பதற்கு காரணமாய் இருந்தார்.
மேலும் இந்த பாவங்களின் நிமித்தம் பின் வரும் தீமைகள் நடந்தது
• தாவீதுக்கு பிறந்த குழந்தை இறந்தது.
• மற்றொரு மகனாகிய அம்னோன், மகளாகிய தாமாரிடம் தவறாய் நடந்தான்.
• அப்சலோம் அம்னோனை கொலை செய்தான்.
• மகனாகிய அப்சலோம் தாவீதின் மறுமனையாட்டிகளிடம் தவறாய் நடந்தான்.
• அப்சலோம் தாவீதை கொல்லும் படி துரத்தினான் .சொந்த மகனுக்கு பயந்து ஒளிந்து வாழவேண்டிய நிலைமை தாவீதுக்கு ஏற்பட்டது.
• தாவீதின் போர் சேவகர்கள் அப்சலோமை கொலை செய்தார்கள்
ஒரு வேளை தாவீது மாத்திரம் யுத்த காலத்தில் சோம்பலுக்கு இடம் கொடுக்கத்தாருந்தால் எவ்வளவு நன்றாய் இருந்திருக்கும்.
சோம்பலாய் இருக்கும் போது சத்துரு களைகளை விதைக்கிறான் (Mat13:25)
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக !
If you are idle in Christ’s work, you are active in the devil’s work. – CH Spurgeon
The devil visits idle men with his temptations. God visits industrious men with His favors – Matthew Henry
Thivakar.B
Word of God Church
Doha – Qatar
www.wogim.org