Minus

ஒரு சிறிய கற்பனை. பரலோகத்தில் தேவனுக்காக பூமியில் எதையாவது இழந்தவர்கள் சாட்சி சொல்ல வாய்ப்பு கொடுக்கப்பட்டபோது

முதலாவது மோசே எழும்பினார் “ நான் அநித்தியமான பாவ சந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு, இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினேன் “ (Heb 11:25,26) என்று சாட்சி கூறினார்.

பேதுரு கூறினார் “என் படகு நிரம்ப மீன்களை ஆண்டவர் தந்த பின்பும் அவர் அழைத்த போது எல்லாவற்றையும் விட்டு அவரை பின்பற்றினேன்” (Mat 19:27)

பவுல் “எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்கு நஷ்டமென்று எண்ணினேன். அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்” (Phil 3). என்று சாட்சி கூறினார்.

ஒரு வேளை நாம் இந்த கூட்டத்தில் இருந்தால் என்ன சாட்சி சொல்வது? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்காக எதை இழந்திருக்கிறோம்? தேவனுக்காக இழப்பதையும், அவமானப்படுவதையும், பாடுபடுவதையும் ஆதி சபை பாக்கியமாய் கொண்டிருந்தது.

நம்முடைய சுவாசத்தையும் எதிர்காலத்தையும் தன் கரங்களில் வைத்திருப்பருக்கு சரியான நேரத்தை கூட கொடுப்பதில்லையே!

ஓய்வு நாள் ஆராதனைகளில் கலந்துகொள்பவர்களில் காற்பங்கு கூட வார நாட்களில் நடக்கும் ஜெபத்திற்கு வருவதில்லையே!

Minister என்ற வார்த்தை Minus என்ற லத்தின் வார்த்தையில் இருந்து வந்தது. அதன் பொருள் சிறிய அல்லது குறைத்து கொள்ளுதல். தன்னை தாழ்த்துவதற்கும், குறைத்து கொள்வதற்கும், இழப்பதற்கும் ஆயத்தம் உள்ளவர்கள் மட்டுமே அவரை சேவிக்கமுடியும். நான் சிறுகினால் தான் கிறிஸ்து பெறுக முடியும்.

“கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள் “ Jos 24:15.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக !

People talk of the sacrifice I have made in spending so much of my life in Africa. It is emphatically no sacrifice. Say rather it is a privilege – David Livingstone.

Thivakar.B
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *