மத்தேயு 1 :1. ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/juCkHiFgDPw
யூதர்கள் பொதுவாக அவர்களுடைய வம்சத்தில் ஆண்களின் பெயர்களை மாத்திரம் போடுவது தான் வழக்கம். ஆனால் இயேசுவின் வம்ச வரலாற்றில் நான்கு பெண்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதை பார்க்கும்போது, இயேசு பெண்களின் அடிமைத்தனத்தை நீக்குமாறும், சமுதாயத்தில் பெண்கள் மீது இருக்கும் கண்ணோக்கத்தை மேலோங்கச்செய்வதின் நோக்கமாகவும் கூட இருக்கலாம். குறிப்பாக, இந்த நான்கு பெண்களின் சரித்திரம் பாவம் நிறைந்ததாக இருந்தது. இவற்றிலிருந்து நாம் அறிந்துகொள்வது இயேசு பாவிகளை இரட்சிக்க இந்த உலகத்தில் வந்தார் என்பதாக.
முதல் பெண்மணியின் பெயர் தாமார். தாமார் வேசித்தன வேடம் போட்டதினால் யூதாவின் மூலமாக பிள்ளை பெற்றெடுத்தாள். அதில் வந்த மகன் பெயர் பாரேஸ் (ஆதி 38 : 12 – 29 ). பாரேஸ் இயேசுவின் தாயாகிய மரியாளின் முன்னோராக இருந்தான். இந்த சம்பவம் நடக்கும்போது இயேசு பரலோகத்தில் இருந்தார்; இதை பார்த்த பிறகு அவர் இந்த பாவமுள்ள சந்ததியில் பிறக்க சித்தங்கொண்டார்.
இரண்டாவது பெண்மணியின் பெயர் ராகாப். இவள் எல்லாருக்கும் தெரிந்த பெயர்பெற்ற விபச்சாரியாக எரிகோ பட்டணத்தில் இருந்தாள் (யோசு 2 : 1 ). யூத குலத்தை சேர்ந்த சால்மன் என்பவன் இவளை திருமணம் செய்துகொண்டான். இவள் இயேசுவின் தாயாகிய மரியாளின் முன்னோராக இருந்தாள். இந்த விபச்சார சந்ததியில் பிறக்குமாறு இயேசு பரலோகத்தில் இதை பார்த்துக்கொண்டிருக்கும் போதே தீர்மானம் பண்ணினார்.
மூன்றாவது பெண்மணி ரூத். இவள் ஒரு மோவாபிய வம்சத்தை சேர்ந்தவள். முன்னோர்கள் மோவாபியர். லோத்தின் மூலமாக முறைகேடாக வந்த சந்ததிதான் இந்த மோவாப் (ஆதி 19 : 30 – 37 ). இவள் இயேசுவின் தாயாகிய மரியாளின் முன்னோராக இருந்தாள். இந்த சம்பவமும் நடைபெறுவதை இயேசு பரலோகத்திலிருந்து பார்த்து, இப்படிப்பட்ட வேசித்தன சந்ததியில் பிறக்க சித்தங்கொண்டார்.
நான்காவது பெண்மணி பத்சேபாள். இவள் உரியாவின் மனைவி. தாவீதின் மூலமாக தவறான பழக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவள். இவள் இயேசுவின் தகப்பனாகிய யோசேப்பின் முன்னோர் ஆவாள்.
ஏன் இயேசு இந்த உலகத்தில் பிறக்கும்போது அவர் பாவம் நிறைந்த குடும்ப வரிசையில் பிறக்கவேண்டும். காரணம் அவர் பாவிகளை இரட்சிக்க இந்த உலகத்தில் வந்தார் என்பதை விளக்குவதற்காக தான். நாம் பாவி என்று புறக்கணிக்காதவர் இயேசு. பாவிகளின் சிநேகிதன் என்று அழைக்கப்பட்டவர்.
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான் (மத் 1 : 21 ).
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org