சங் 3 : 5. நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார். சங் 4 : 8. சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/EyGCCxnWoOA
சங்கீதம் 3ம் அதிகாரத்தை தாவீது எழுதினதின் பின்னணி என்னவென்று பார்த்தால், அவன் தன்னுடைய குமாரனாகிய அப்சலோமுக்கு பயந்து ஓடிப்போகும்போது எழுதினாதாக காணப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அவன் கர்த்தர் மீது நம்பிக்கை வைக்கிறவனாக சொல்லுகிறான் ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர் என்பதாக. நாம் ஒருசிலர் நல்ல சௌவுரியம் நிறைந்த இடத்தில் மாத்திரம் துதித்து பாடுபவர்களாக காணப்படுகிறோம். ஆனால் தாவீது தன்னுடைய துன்பத்தின் பாதையில் அவன் பாடுபவனாக மாத்திரமல்ல அவன் நிம்மதியாக நித்திரை செய்து காலையில் எழுந்தான் என்று சொல்லுகிறான்.
சங்கீதம் 4ம் அதிகாரத்தில் நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. பழைய ஏற்பாட்டு காலத்தில் வாழ்ந்த ஜனங்கள் தங்கள் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவர்கள் தங்கள் படுக்கைக்கு நேராக சென்று தங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டிருப்பார்களாம். அப்படிப்பட்டதான கோபப்படுத்துகிற ஜனங்கள் மத்தியிலும் தாவீது சொல்லுகிறான் சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன் என்பதாக. நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது (எபே 4 : 26 ). சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் (எபே 4 : 31 – 32 ). அப்படி செய்யும் போது உங்கள் தூக்கம் இன்பமாய், சமாதானமாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வசனத்திற்கு புறம்பாய் குறுக்கு வழியில் வளரவேண்டுமென்று இருப்பவர்களுக்கு தூக்கம் சரியாக வருவதில்லை. அதிக பணத்தை தவறான வழியில் சம்பாதித்தவர்களுக்கு தூக்கம் வருவதில்லை. அநேக ஊழல் செய்கிற அரசியல்வாதிகள் மாத்திரை சாப்பிட்டால் தான் தூக்கம் வரும் என்ற நிலையில் இருக்கிறார்கள். ஆனால் நமக்கு தாவீதை போல எவ்வளவு நெருக்கங்கள், பாடுகள், உபத்திரவங்கள் வந்தாலும் நாம் சமாதானத்தோடு நித்திரை செய்யலாம்.
தாவீது காலையில் எழுந்தவுடன் சொல்லுகிறான் நான் படுத்து நித்திரை செய்தேன் என்பதாக. மாலையில் அவன் சொல்லுகிறான் சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன் என்பதாக. அப்படியாக உங்கள் தூக்கம் சமாதானமாய் இருக்கும்.
அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிறகாலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர் (சங் 4 : 7 ) என்ற வசனத்தின்படி கர்த்தர் உங்களுக்கு சந்தோஷத்தை தருவார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org