ஆத்தும ஆதாயம்:-

நீதிமொழிகள் 11:30 நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்.

ஆத்தும ஆதாயத்தை குறித்து தேவ மனிதர்கள் சொன்ன சில வார்த்தைகளை பார்க்கலாம்.

என் ஆத்துமா இந்த உலகத்திற்காக ஏங்கித் தொய்ந்துபோயிற்று; ஏராளமான ஆத்துமாக்களுக்காகப் பெருமூச்சு விட்டு விட்டேன்… ஜெபிப்பதில் என் வாழ்க்கையையே செலவழித்துவிடலாம் போல் தோன்றிற்று. – டேவிட் பிரெய்னார்ட்.

ஆண்டவரே, ஆத்துமாக்களை எனக்கு தாரும் அல்லது என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும். – ஜார்ஜ் வொயிட்பீல்டு.

தியாக வரிசையில் இருக்கவேண்டுமென்றால்.. ஆத்துமாக்கள் மேல் நமது அனுதாபம் தணியாத வாஞ்சையாக இருக்கவேண்டும், நமது மன்றாட்டு பெருமூச்சாக வேண்டும், நமது ஊழியம் இரதம் சிந்தி மரிப்பதாக இருக்கவேண்டும். – ஜான் ஹென்றி ஜோயட்.

பிதாவே, இந்த ஆத்துமாக்களை எனக்கு தாரும், இல்லாவிடில் நான் மரிக்கிறேன். – ஜான் ஹைடு.

ஆண்டவரே, ஸ்காட்லாந்தை எனக்குத் தாரும், இல்லையேல் நான் சாகிறேன். – ஜான் நாக்ஸ்.

எனக்காக மலையளவு வெள்ளியோ, பொன்னோ குவித்து வைப்பதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்காக ஒரே ஒரு ஆத்துமாவை ஆதாயம் செய்வதே அதிக மகிழ்ச்சி தரும் என்று எண்ணுகிறேன். -மாத்தியூ ஹென்றி.

வானத்தின் பேரிலும், பூமியின் நிமித்தமும், ஆண்களும் பெண்களும் கிருஸ்துவுக்கென ஆதாயம் பண்ணப்பட வேண்டும் என்ற தணிக்க முடியாத வேகம் ஆறிவிட ஒருபோதும் அனுமதிக்காதிருப்போமாக. – பால் S ரீஸ்.

அவர் என்னை உடைத்து நொறுக்கி ஆத்துமாக்களின் இரட்சிப்பிற்காக என்னை அழச் செய்வாரானால் எத்தனை நலமாயிருக்கும். – ஆஸ்வால்டு ஜே ஸ்மித்.

எனக்கு சொகுசு என்றாலே பயம்; பாவத்தை கண்டு அஞ்சுமளவிற்கு இதைக் கண்டு அஞ்சவில்லை என்றாலும் பாவத்திற்கு அடுத்தபடியாக எனக்கு பயமூட்டும் காரியம் இந்த சொகுசுத்தான். – டாக்டர் R A டோரி.

நாமெல்லாருக்கும் ஒரே வேலை இருக்கட்டும். நாம் இந்த ஒன்றுக்காகவே வாழ்கிறோம், நமது ஆத்துமாக்களையும், நம் பிரசங்கத்தை கேட்பவர்களின் ஆத்துமாக்களையும் இரட்சிப்பதற்காகவே. – ஜான் வெஸ்லி.

ஐயா சிலருடைய தணியாத வாஞ்சை பொன், இன்னும் சிலரின் தீராத ஆசை புகழ், என்னுடைய தீராத ஆசையோ ஆத்துமாக்கள். – வில்லியம் பூத்.

தங்கள் ஆத்துமாக்களில் பாலைவன போல் காணப்படும் கிருஸ்துவத் தலைவர்கள் ஜீவத்தண்ணீர் வெளியே புறப்பட்டு ஓடுவதைக் காணமுடியாது. – வெஸ்லி L டூயல்.

தேவனுடைய உள்ளதை உடைக்கும் காரியங்களால் என்னுடைய உள்ளம் உடைக்கப்படும். – Dr பாப் பியர்ஸ்.

தேவன் மட்டும் என் வாழ்க்கையிலிருந்து தம் கையை எடுத்துவிடுவார் என்றால், இந்த உதடுகள் களிமண்ணாலான உதடுகளாகி விடும். – பில்லி கிரஹாம்.

என் தேசம் இரட்சிக்கப்படாமல் இருக்கும் போது நான் எப்படித் தூங்கமுடியும். – ஜான் நாக்ஸ்.

நம்முடைய ஏக்கமெல்லாம் ஆத்தும ஆதாயமாக மாறவேண்டும் என்று ஜெபிப்போம்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *