ஆதி 2 : 3. தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/pjSrcqUKrfc
ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் தேவன் சிருஷ்டித்தார் (Created ) மற்றும் உண்டுபண்ணினார் (Made ) என்ற இரண்டு வெவ்வேறான வார்த்தைகளை பார்க்கலாம். ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் (Created – ஆதி 1 : 1 ) ஆனால், தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணினார் ( Made – ஆதி 1 : 7 ) என்று எழுதப்பட்டிருக்கிறது. அதேபோல தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார் (Created – ஆதி 1 : 27 ) ஆனால், தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார் (Made – ஆதி 1 : 25 ).
உண்டுபண்ணுவது (Made ) என்பது ஏற்கெனவே இருந்த ஒன்றை மீண்டுமாக புதுப்பித்தல் என்று அர்த்தம். சிருஷ்டிப்பு (Create ) என்பது இதுவரைக்கும் இல்லாத ஒன்றை உருவாக்குவது.
ஆதி 2 : 3ல் தேவன் சகலவற்றையும் சிருஷ்டித்து உண்டுபண்ணினார் என்று எழுதப்பட்டிருக்கிறது. அவருடைய சிருஷ்டிப்பில் மனிதனை தான் கடைசியாக சிருஷ்டித்தார். மனிதனை படைப்பதற்கு முன்பாகவே மற்ற எல்லாவற்றையும் சிருஷ்டித்து உண்டுபண்ணினார். சொல்லப்போனால் வயதில் மனிதன் மற்றெல்லாவற்றையும் விட இளையவன். ஒருவேளை ஆண்டவர் முதலில் சிருஷ்டித்த வானத்தையும் பூமியையும் பார்த்து நீங்கள் எல்லாவற்றையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி இருப்பாரென்றால் மனிதகுலம் எப்படி இருந்திருக்குமென்றே தெரியாது. ஆனால் கர்த்தர் தன்னுடைய சுவாசத்தை மனிதனுடைய நாசியில் ஊதி, தன்னுடைய சாயலில் சிருஷ்டித்ததினால் வயதில் சிறியவனான மனிதன் காண்கிற அனைத்தையும் ஆண்டுகொள்ளும்படி ஆண்டவர் மனிதனை ஆசிர்வதித்தார். பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார் (ஆதி 1 : 28 ).
தேவன் நம் ஒவ்வொருவரையும் சிருஷ்டித்ததின் உன்னத நோக்கம் ஆண்டுகொள்ளவேண்டுமென்று (Rule ). உங்கள் ஒவ்வொருவருக்கும் ஆண்டவர் அடிமைத்தனத்தின் ஆவியை அல்ல; அப்பா பிதாவே என்றழைக்கும் புத்திர சுவிகாரத்தின் ஆவியை கொடுத்திருக்கிறார். ஆகையால் ஆண்டுகொள்ளுங்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org