லூக்கா 8:16. ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினாலே மூடவுமாட்டான், கட்டிலின்கீழே வைக்கவுமாட்டான்; உள்ளே பிரவேசிக்கிறவர்கள் அதின் வெளிச்சத்தைக் காணும்படிக்கு அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/KZjGwVIuNE8
உங்கள் வீட்டிலிருக்கும் அறைக்கு வெளிச்சம் வேண்டுமென்றால், விளக்கை கொளுத்தி அதை ஒரு பாத்திரத்தினாலே மூடமாட்டிர்கள் அல்லது அந்த விளக்கை உங்கள் கட்டிலின் கீழே வைக்கமாட்டீர்கள். காரணம் அப்படி செய்தால் உங்கள் அறையில் வெளிச்சம் காணப்படாமல், இருளாக காணப்படும். ஆகையால் விளக்கை கொளுத்தி விளக்குத்தண்டின்மேல் வைப்பீர்கள்; அப்பொழுது அறை முழுவதும் வெளிச்சம் காணப்படும். அப்படிதான் நீங்கள் ஒவ்வொருவரும் ஆண்டவருக்காக வெளிச்சம் வீசும் பாத்திரங்களாக காணப்பட வேண்டுமென்று கர்த்தர் விருப்பமுடையவராய் காணப்படுகிறார்.
இந்திய தேசத்தில் பார்த்தால் அநேக வங்கிகள், அரசாங்க அலுவலகங்களில் அநேகர் தங்களுடைய தேவர்கள் என்று சொல்லக்கூடியதை போட்டுகொள்ளுவது வழக்கம். ஆனால் கர்த்தருடைய பிள்ளைகள் ஒரு வேத வசனத்தைக்கூட போடுவதற்க்கு அவர்கள் தயக்கம் காட்டுவார்கள் இல்லையென்றால் இழிவாக நினைப்பார்கள். காரணம் வேத வசனத்தை போட்டுக்கொண்டால் தங்களுக்கு பதவி உயர்வு இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் காணப்படும். இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம் (1 கொரி 15:19) என்று வசனம் சொல்லுகிறது.
லூக்கா 9ம் அதிகாரத்தில் இயேசு தன்னுடைய பன்னிரண்டு சீஷர்களையும் வரவழைத்து தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்து பிரசங்கிக்கும்படியாக அனுப்பினார். அப்பொழுது இயேசு ஒரு வார்த்தையை சொன்னார் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரன் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார் (லுக் 9:26) என்பதாக. அதேபோல அநேகமாயிரம் ஜனங்கள் ஒருவரையொருவர் மிதிக்கத்தக்கதாகக் கூடிவந்திருக்கையில், அவர் முதலாவது தம்முடைய சீஷரை நோக்கி சிலகாரியங்களை சொல்லி வரும்போது இயேசு சொன்னார் மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை மனுஷகுமாரனும் தேவதூதர் முன்பாக அறிக்கைபண்ணுவார். மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் தேவதூதர் முன்பாக மறுதலிக்கப்படுவான் (லுக் 12:8,9) என்பதாக.
இயேசுவை குறித்து பிரசங்கம் பண்ணுவதிலும், அவருடைய வார்த்தையை பிறருக்கு சொல்வதிலும் ஒருபோதும் வெட்க்கப்படாதிருங்கள். இயேசு உங்களுக்காக நிர்வாணமாக சிலுவையில் தொங்குவதற்கு அவர் வெட்கப்படவில்லை. ஆகையால் உலகத்திற்கு வெளிச்சம் வீசும் பாத்திரங்களாக, விளக்குத்தண்டின் மேல் இருக்கும் விளக்காக, மலைமேல் இருக்கும் பட்டணமாக, பூமிக்கு உப்பாக, உலகத்திற்கு வெளிச்சமாக இருங்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org