இடறுதற்கான கல்லா? மூலைக்கல்லா? Stumbling stone or Corner stone?

ரோம 9:33. இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/czcfJlH85wM

இஸ்ரவேல் ஜனங்கள் விசுவாசத்தினாலே அதைத் நீதியைத் தேடாமல் , நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள். இயேசுவின்மீது விசுவாசத்தை வைக்க தவறிவிட்டார்கள். அதினிமித்தமாக இரட்சிப்பு புறஜாதியாரிடத்திற்கு வந்தது.

இயேசுவோடு இருந்த சீஷர்களும்கூட இடறிவிழுந்தார்கள். இயேசு சிலுவைபாதையில் கடந்து செல்வதற்குமுன்பு பேதுரு சொன்னான் உமதுநிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் ஒருக்காலும் இடறலடையேன் என்றான். இயேசு சொன்னார் இந்த இராத்திரியிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்பதாக. மீண்டும் பேதுரு சொன்னான் இல்லை ஆண்டவரே நான் இடறி விழமாட்டேன். இயேசு சொன்னார் நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன் என்பதாக.

இன்றும் அநேகர் அநேகவிதமான சூழ்நிலைகளினிமித்தமாக இயேசுவை புறம்பே தள்ளுகிறவர்களாகவும், இயேசுவுக்கு கொடுக்கவேண்டிய முதலிடத்தை பணம் சம்பாதிப்பதிலும், சொத்து வாங்குவதிலும், நண்பர்களோடு சேர்ந்து சுற்றி திரிகிறவர்களாகவும் மாறி இடறுதற்கான கல்லில் முட்டி இடறி விழுகிறவர்களாக காணப்படுகிறார்கள். இயேசுவின் மீது விசுவாசத்தை வைப்பதை விட்டு இருக்கிற வருமானம் போதும் இன்னும் கர்த்தர் என்னையும் குடும்பத்தையும் நடத்துவார் என்ற விசுவாசத்தை விட்டு, மனம்போன போக்கில், சுய முயற்சியை எடுத்து இடறிவிழத்தக்க சூழ்நிலைக்குள்ளாக தள்ளப்படுகிறார்கள்.

ஆண்டவர் நமக்கு முன்பாக இரண்டு கல்லை சீயோனில் வைக்கிறார். ஒன்று இடறுதற்கான கல். மற்றொன்று அஸ்திபாரமுள்ள மூலைக்கல். வசனம் சொல்கிறது ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும்; விசுவாசிக்கிறவன் பதறான் (ஏசா 28:16) என்பதாக. எந்தக்கல்லை நீங்கள் தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள் என்ற விருப்பத்தை உங்கள் கையில் கொடுத்துவிட்டார். மூலைக்கல் பரீட்சிக்கப்பட்ட கல்; மூலைக்கல் விலையேறப்பெற்ற கல்; மூலைக்கல் திட அஸ்திபாரமுள்ள கல். வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று (சங் 118:22). அப்படியென்றால் யார் அந்த மூலைக்கல்? வீடு கட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர் (அப் 4:11). கிறிஸ்துவே அந்த அந்த மூலைக்கல்.

ரோம 9:33ன் பின்பகுதி சொல்லுகிறபடி இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருங்கள் அப்பொழுது நீங்கள் வெட்கப்படுவதில்லை.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh.R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *