உன் கரம் உன் சத்துருக்களுடைய பிடரியின்மேல் இருக்கும்(Your hand will be on the neck of your enemies).

யூதாவே, சகோதரரால் புகழப்படுபவன் நீயே, உன் கரம் உன் சத்துருக்களுடைய பிடரியின்மேல் இருக்கும், உன் தகப்பனுடைய புத்திரர்  உன்முன் பணிவார்கள்(ஆதி. 49:8).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/3fE_eB1yXeg

யாக்கோபு மரிப்பதற்கு முன்பு தன் குமாரர்கள் யாவரையும் அழைத்து, நீங்கள் கூடிவாருங்கள், கடைசி நாட்களில் உங்களுக்கு  சம்பவிப்பவைகளை அறிவிப்பேன் என்று கூறி தீர்க்கதரிசனமாக அறிவித்த  வார்த்தைகள் ஆதி. 49ம் அதிகாரத்தில் எழுதப்பட்டிருக்கிறது.  யூதாவைக் குறித்து அனேக ஆசீர்வாதங்களைக் கூறும்போது, உன் கரம் உன் சத்துருக்களின் பிடரியின் மேல் இருக்கும் என்றும் கூறி ஆசீர்வதித்தார். மோசேயும் அவன் மரிப்பதற்கு முன்பு  யூதா  கோத்திரத்தை ஆசீர்வதிக்கும் போது, அவன் கை பலக்கக்கடவது என்றும், அவனுடைய சத்துருக்களுக்கு அவனை நீங்கலாக்கி விடுவிக்கிற சகாயராயிரும் என்று உபா. 33:7ன் படிக்கு ஆசீர்வதித்தார்.  யூதாவின் ஜனங்கள் எதிரிகளை மேற்கொள்ளும் படிக்குத் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்.  கர்த்தரின் யுத்தங்களை முன்னின்று நடத்தினவர்கள். 

பென்யமீன் கோத்திரமான கிபியாவின் பட்டணத்தார் லேவியின் மறுமனையாட்டிக்கு துரோகம் செய்து அவமானப்படுத்தினதினால் அவள் மரித்தபோனாள். அப்போது பென்யமீன் கோத்திரத்திற்கு விரோதமாக யார் முந்தி யுத்தத்திற்குக் கடந்து செல்லவேண்டும் என்று கர்த்தரிடம் விசாரித்த வேளையில், யூதா முந்திப் போகவேண்டும் என்று கர்த்தர் கூறினார் (நியா. 20:18). யூதா முந்திப் போனாலும்,  யூதாவிற்காக எல்லா யுத்தங்களையும் செய்தவர் கர்த்தர் ஒருவரே. யோசபாத்தின் நாட்களில் யகாசியேலின் மேல் கர்த்தருடைய ஆவி இறங்கின வேளையில், அவன்  யூதா  கோத்திரத்தாரைப்  பார்த்து, யூதாவின் மனுஷரே, இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது என்று கூறினான். அப்படியே கர்த்தர் அவர்களுக்காக யுத்தம் செய்து, யூதாவின் கரங்கள் அவன் சத்துருக்களின் பிடரியின்  மேலிருக்கும்படிக்குச் செய்து, வெற்றியைக் கொடுத்து, அவர்களை  பெராக்காவில் கூடி தங்கள் சத்துருக்கள் மேல்  களிகூரும்படிக்குச்  செய்தார்.

யூதாவின் வம்சத்தில் தாவீது தோன்றினான். அவனுடைய நாட்களிலும் அவனுடைய கரங்கள் அவன் சத்துருக்களின் மேலிருந்தது. கோலியாத் துவங்கி அவனுக்கு விரோதமாய் எழும்பின எல்லோரையும்  மடங்கடித்தான். தாவீதின் குமாரனாக இயேசு பிறந்தார், அவர் யூதா கோத்திரத்துச் சிங்கம் என்றும் வேதம் கூறுகிறது. அவர் யுத்தத்தில் வல்லவர், அவருக்கு முன்பு எல்லா முழங்கால்களும் மண்டியிடும், ஒருவராலும் அவரை மேற்கொள்ளமுடியாது. அவருடைய நாமத்தின் மேல் விசுவாசம் வைக்கிற நாம் அத்தனை பேரும் அவருடைய பிள்ளைகளாகக் காணப்படுகிறோம். ஆகையால் நாமும் யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர்களே! அதனால் நம்முடைய கரங்களும் நம்முடைய சத்துருக்களின் பிடரியின்  மேலிருக்கும்படிக்குச்  செய்வார். பொல்லாத சத்துரு நமக்கு விரோதமாக யுத்தம் செய்வான், வெள்ளம் போலவும், கர்ச்சிக்கிற சிங்கத்தைப் போலவும் நம்மை வாரிக்கொள்ள முயல்வான். அவனால் ஏவப்பட்ட ஜனங்கள் நமக்கு விரோதமாகக் காரணமின்றி எழும்புவார்கள். ஊழியங்களுக்கு விரோதமாகவும், ஊழியர்களுக்கு விரோதமாகவும் எழும்புவார்கள். ஆனால் நம்முடைய கரங்கள் அவர்களுடைய பிடரியின்  மேலிருக்கும்படிக்கு கர்த்தர் செய்வார். கர்த்தருடைய பிள்ளைகள் நீங்கள் ஆளுகைச் செய்வீர்கள், உங்கள் காரியங்கள் ஜெயமாயிருக்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *