உங்களுக்கு ஆசீர்வாதத்தை அனுக்கிரகம் பண்ணுவார் (God will grant you a special blessing):-

லேவி 25:20-22: ஏழாம் வருஷத்தில் எதைப் புசிப்போம்? நாங்கள் விதைக்காமலும், விளைந்ததைச் சேர்க்காமலும் இருக்கவேண்டுமே! என்று சொல்வீர்களானால், நான் ஆறாம் வருஷத்தில் உங்களுக்கு ஆசீர்வாதத்தை அநுக்கிரகம்பண்ணுவேன்; அது உங்களுக்கு மூன்று வருஷத்தின் பலனைத் தரும். நீங்கள் எட்டாம் வருஷத்திலே விதைத்து, ஒன்பதாம் வருஷம்மட்டும் பழைய பலனிலே சாப்பிடுவீர்கள்; அதின் பலன் விளையும்வரைக்கும் பழைய பலனைச் சாப்பிடுவீர்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/smd4WdW273w

இஸ்ரவேல் ஜனங்கள் 7வது நாள், 7வது வருஷம் கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்திருந்து ஓய்வு நாளை ஆசரிக்கவேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டார். ஓய்வு நாளில் யாதொரு வேலையும் செய்யக்கூடாது. ஆறு வருஷம் முடிந்து ஏழாம் வருஷம் முழுவதுமாக எவ்வேலையும் செய்யாமல் ஓய்வு வருசமாக அனுசரிக்க வேண்டும். ஏழாம் வருஷத்திற்கு தேவையான பலன் மாத்திரமல்ல எட்டு, ஒன்பதாம் வருஷத்திற்கு தேவையான பலனையும் ஆறாம் வருஷத்திலே தருவதாக கர்த்தர் சொன்னார். அது தான் ஆசிர்வாதத்தை அனுக்கிரகம் பண்ணுவது என்று அர்த்தம். முன் கூட்டியே ஆசிர்வதிக்கிறவர். ஆங்கில வேதாகமத்தில் இதற்கான அர்த்தம் special blessing என்று எழுதப்பட்டிருக்கிறது. அநேகர் தங்களுடைய எதிகாலத்தை குறித்து என்ன நடக்குமோ, ஆகாரத்திற்கு என்ன செய்வது, பிள்ளைகளின் படிப்பு, திருமண காரியங்களுக்கு என்ன செய்யப்போகிறோம் என்று தெரியவில்லையே, எதிர்காலத்தில் எப்பொழுது நான் சொந்தமாக வீடு வாங்கப்போகிறேன் என்று தெரியவில்லையே என்று நினைப்பவர்களுக்கு கர்த்தர் சொல்லுகிறார் நான் ஆசிர்வாதத்தை முன்கூட்டியே அனுக்கிரகம் பண்ணுவேன் என்பதாக.

அப்படிப்பட்டதான ஆசிர்வாதத்தை எப்படி சுதந்தரித்து கொள்வது? நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்திருக்கும்போது, தேசம் கர்த்தருக்கென்று ஓய்வு கொண்டாடவேண்டும் (லேவி 25:2) என்று வசனம் சொல்லுகிறது. நாம் குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கி கர்த்தருடைய சமூகத்தில் முழுவதுமாக கர்த்தருக்கென்று செலவிட வேண்டும். வேலை, தொழில் என்று ஓடிக்கொண்டே இருக்காமல், கர்த்தருக்கென்று நாளை செலவிடாமல் நண்பர்களுடன் உல்லாசமாக இருப்பதை தவிர்த்து, நாளை கர்த்தருக்கென்று செலவிட வேண்டும். என் ஓய்வு நாளை பரிசுத்தமாக்குங்கள்; நாட்களை விசேஷித்துக்கொள்ளுங்கள் என்று வசனம் சொல்லுகிறது. எவ்வெளவுக்கு எவ்வெளவு நாட்களை கர்த்தருக்கென்று செலவழிக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு ஆண்டவர் உங்களுக்கு ஆசிர்வாதத்தை அனுக்கிரகம் (special blessing) பண்ணுவார். உங்கள் வேலையில் எல்லாரும் உதாரணத்திற்கு 10000 ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள் என்றால், உங்களுக்கு அதை காட்டிலும் அதிகமாக சம்பளத்தை தருவார். எல்லாரை காட்டிலும் அதிகமான ஊதிய உயர்வு உங்களுக்கு கிடைக்கும். எப்பொழுதென்றால், நீங்கள் நாட்களை கர்த்தருக்கென்று அனுசரிக்கும்போது, அப்பொழுது கர்த்தர் உங்களுக்கு ஆசிர்வாதத்தை அனுக்கிரகம் பண்ணுவார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *