எபேசியர் 1:13 நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.
விசுவாசம் கேள்வியினால் வரும். எப்பொழுது இரட்சிப்பின் சுவிஷேத்தை கேள்விப்பட்டு இயேசுகிறிஸ்துவை விசுவாசித்தீர்களோ அப்பொழுதே உடனடியாக வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவியால் முத்திரையிடப்பட்டீர்கள். இது என்ன ஆறுதலை உண்டாக்குகிறது? நாம் கிறிஸ்துவில் பாதுகாப்பாக இருக்கிறோம், பிதாவின் கரங்களில் நித்தியமாக பாதுகாப்பாக இருக்கிறோம். ஆவியானவரின் முத்திரை பாதுகாப்பாக உள்ளது மற்றும் உடைக்க முடியாது. கிறிஸ்துவை விசுவாசிக்கிற நீங்கள், தேவனுடைய ஆவியானவரால், மீட்பின் நாள்வரை அவரில் முத்திரையிடப்பட்டீர்கள்.
எபேசு பட்டணம் அன்றைய உலக வர்த்தக மையங்களில் ஒன்றாகும். கிழக்கிலிருந்து பொருட்கள் எபேசு பட்டணத்திற்கு வந்து, அங்கிருந்து கடல் வழியாக ரோம் மற்றும் ஐரோப்பாவின் பிற தலைநகரங்களுக்கு கொண்டு செல்லப்படும். இது பரபரப்பான வர்த்தக நகரமாக இருந்தது, மேலும் ரோம் மற்றும் பிற முக்கிய பகுதிகளிலிருந்து எப்போதும் வணிகர்களால் நிரம்பியிருந்தது. இந்த வணிகர்கள் தங்கள் பொருட்களை அங்கு வாங்குவார்கள், பின்னர் அவற்றை எபேசுவிலிருந்து மேற்கத்திய உலகிற்கு அனுப்புவார்கள். அவர்கள் பொருட்களை வாங்கும் போது, அவர்கள் அவற்றை ஏற்றுமதிக்காக பேக் செய்வார்கள். பின்னர் அவர்கள் அனுப்பப்பட வேண்டிய வணிகப் பொருட்களின் மீது உரிமையின் முத்திரையை வைப்பார்கள். முத்திரை உரிமையின் அடையாளமாக இருந்தது.
மற்றும் இந்த பொருட்கள் முத்திரை ஒட்டப்பட்ட உரிமையாளருக்கு சொந்தமானது. அதுபோலத்தான் நீங்கள் ஒவ்வொருவரும் முத்திரியிடப்பட்ட ஆவியானவருக்கு சொந்தமானவர்கள்.
எபேசில் பொருட்கள் வாங்கப்பட்டு உரிமையாளரால் சீல் வைக்கப்பட்டபோது, அது கப்பலில் வைக்கப்பட்டு பின்பு ரோமுக்கு கொண்டு செல்லப்படும். அது துறைமுகத்திற்கு வந்து முத்திரையால் அடையாளம் காணப்பட்டதும், அதன் உரிமையாளரால் உரிமை கோரப்படும். அப்படிதான் இப்பொழுது பரலோகத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் நீங்கள் ஆவியானவரால் முத்திரையிடப்பட்டிருக்கிறீர்கள். ஒரு நாள் வரும் அப்போது இயேசு, உரிமையாளராக, அந்த முத்திரையை பார்த்து உங்களை தன்னிடம் சேர்த்துக்கொள்ளுவர்.
இந்த வருடம் முழுவதும் எல்லா கொள்ளை நோய்க்கும், பயங்கரத்திற்கும், திகிலுக்கும் நீங்கலாக்கி உங்களை பாதுகாப்பாக வைத்துகொள்ளும்படி பரிசுத்த ஆவியானவர் உங்களை முத்திரையிட்டிருக்கிறார். மாத்திரமல்ல உங்கள் உரிமையாளர் இயேசு ஒருவர் மாத்திரமே. ஆகையால் வியாதிகளை கொண்டு வருகிற பொல்லாத ஆவிகளுக்கும், கொள்ளைநோய்களை பரப்புகின்ற பொல்லாத வலுசர்ப்பதின் ஆவிகளுக்கு நீங்கள் உரிமையானவர்கள் அல்ல. உங்களுக்கு இருக்கிற முத்திரை மிகவும் பாதுகாப்பானது.
ஆவியானவரின் முத்திரை உங்கள் ஒவ்வொருவருக்கும், உங்கள் குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், சபைக்கும் இருக்கும்படியாக ஜெபிக்கிறோம்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God church
Doha – Qatar
www.wogim.org