யெரொபெயாமின் பாவம் (Jeroboam’s sin)

இந்தக் காரியம் பாவமாயிற்று,  ஜனங்கள் இந்த ஒரு கன்றுக்குட்டிக்காகத் தாண்மட்டும் போவார்கள் (1 இரா.12:30).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/-X5eKB_pfiU

யெரொபெயாம் சாலொமோனுடைய வேலைக்காரன்,    அவன் யுத்தத்தில் பராக்கிரமசாலியும்,    வேலைகளில் காரிய சமர்த்தனுமாய் காணப்பட்டான். சாலொமோன் தன் கண்களுக்குப் பிரியமான ஸ்திரீகளை விவாகம் பண்ணிக்கொண்டிருந்ததால்,    அவர்கள் இவனுடைய இருதயத்தை அந்நிய தெய்வங்களுக்கு  நேராகச் சாயப்பண்ணினார்கள். கர்த்தருடைய எச்சரிப்பை மீறி,    அந்நிய தெய்வங்களுக்குப் பலிபீடங்களைக் கட்டி,    அவைகளை ஆராதித்துக் கொண்டிருந்தான். ஆகையால்  சாலொமோனுடைய ஆளுகையின் கீழ் காணப்பட்ட இஸ்ரவேலின் பத்து கோத்திரங்களை எடுத்து கர்த்தர்  யெரொபெயாமின் கரங்களில் கொடுக்க சித்தம் கொண்டார். சாதாரண  நபராகக்  காணப்பட்டவனைத் தெரிந்து கொண்டு,    அவனுக்கு  தாவீதுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தைப் போல நிலையான வீட்டைக் கட்டுவேன் என்று வாக்கு கொடுத்து,    அவனிடம் என் கட்டளைகளைக் கைக்கொண்டு,    என் வழிகளில் நடந்து,    என் பார்வைக்குச்  செம்மையானதைச் செய் என்ற ஆலோசனையையும் கொடுத்தார். சாலொமோனுடைய மரணத்திற்குப் பின்பு அவனுடைய குமாரன் ரெகொபெயாம் யூதாவையும்,    யெரொபெயாம் மற்ற பத்து கோத்திரங்களையும் ஆளுகிறவர்களாகக் காணப்பட்டார்கள்.

யெரொபெயாம் ஆட்சி செய்து கொண்டு வந்த நாட்களில்,    அவனுடைய மனதிலே ஒரு பொல்லாத சிந்தை வந்தது. அவனுடைய ஆட்சியின் கீழ்க் காணப்படுகிற ஜனங்கள்  யூதாவில்  காணப்படுகிற  எருசலேம்  தேவாலயத்தில் பலி செலுத்தும்படி பண்டிகைக் காலங்களில் போகும் போது அவர்களுடைய இருதயம் யூதாவின் ராஜா பட்சத்தில் சாய்ந்து,    என்னைக் கொன்று போடுவார்கள் என்று சிந்திக்க துவங்கினான். ஆகையால் ஜனங்கள் இஸ்ரவேலின் தேவனைத் தொழுது கொள்ளப் போவதைத் தடை செய்து,    உண்மையுள்ள  தேவனிடத்திலிருந்து  அவர்களைப் பிரித்து,    தன்னோடு காணப்படும் படிக்குச் செய்வது எப்படி என்று யோசிக்கத் துவங்கினான். ஆகையால் பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி,    ஜனங்களைப் பார்த்து அவர்கள் மேல் அதிக அக்கரையுள்ளவனாகத் தன்னை காண்பித்து,    நீங்கள் எருசலேமுக்குப் போகிறது உங்களுக்கு வருத்தம்,    இஸ்ரவேலரே,    உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின உங்கள் தேவர்கள் என்று சொல்லி,    அந்த பொன் கன்றுக்குட்டிகளில் ஒன்றைப் பெத்தேலிலும்,    ஒன்றைத் தாணிலும்  ஸ்தாபித்தான். இந்தக் காரியம் பாவமாயிற்று,    ஜனங்கள் இந்த ஒரு கன்றுக்குட்டிக்காக பெத்தேலுக்கும்,    தாணுக்கும் போவார்கள். இப்படி ஜனங்களை வழிதவறி போகும் படிக்கு ரெகொபெயாம்  செய்ததினால் அவனுடைய குடும்பம் முழுவதும் அழிக்கப்பட்டது,    அவன் தேவனுடைய கோபாக்கினையின் பாத்திரமானான். 

கர்த்தருடைய பிள்ளைகளே,    தேவனை விட்டு உங்களைப் பிரிக்கச் செய்யும் எதுவும் யெரொபெயாமின் பாவவழியைச் சார்ந்தது. ஊழியர்கள் தங்கள் நூதன உபதேசங்களின் மூலமும்,    புதுப்புது கண்டுபிடிப்புகளாகிய ஆராதனை முறைமைகளையும் காட்டி ஜனங்களை தங்கள் பட்சத்தில் வைக்கவேண்டும் என்று நினைப்பதும் இவ்வழியைச் சார்ந்தது. வேதவசனத்திற்கு ஒவ்வாத அற்புதங்களைச் செய்து தங்களைப் பெரிய ஊழியர்கள் போலவும்,    பொன் கன்றுக்குட்டிகள் போலவும் காட்ட முயற்சிப்பவர்களும்  யெரொபெயமின் வம்சத்தைச் சார்ந்தவர்கள். கிருபையின் உபதேசங்களையும்,    செழிப்பின் உபதேசங்களையும் கூறி,    ஜனங்களைக் கர்த்தருடைய சிலுவையின் பாதையிலிருந்து பிரிக்கிற அத்தனை ஊழியர்களும்,    ஜனங்களை  யெரொபெயாபமின்  பாவத்திற்குள்ளாக நடத்துகிறவர்களே. கர்த்தர் பேசாதிருந்தும் தங்களைத் தீர்க்கதரிசிகள் என்று கூறி,    கர்த்தருடைய  வார்த்தையைப்  புரட்டுகிற அத்தனைப்பேரும் இப்பாவத்தைச் செய்கிறவர்களே. உண்மையுள்ள தேவனை ஆராதிப்பதற்குச்  சரியான சபைகளையும்,    உங்கள் ஆத்துமாக்களுக்கு உத்தரவாதம் பண்ணுகிற மேய்ப்பர்களையும் தெரிந்தெடுக்காதபடிக்கு,    உங்கள் வசதிக்கேற்ப கண்ட இடங்களில் ஆராதிக்கக் கடந்து செல்லுகிற விசுவாசிகளும், துர்உபதேசம் என்பதை அறிந்திருந்தம் தங்கள் தலைவர்களை பிரியப்படுத்த கடந்து செல்லுகிறவர்களும்,   யெரொபெயாமின் பாவத்தைச் செய்கிறவர்கள். ஆகையால் யெரொபெயாமின் பாவத்தை யாரும் செய்துவிடாதிருங்கள்,    ஜனங்களை ஆண்டவரண்டைச் சேர்க்கிறவர்களாய் காணப்படுவதைத் தவிர,    ஒருநாளும் பிரித்துவிடாதிருங்கள். அது உங்கள் சந்ததிக்கு சாபத்தைக் கொண்டுவரும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *