பிலி 1:12. சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன்.
பவுல் சொல்லுகிறார் எனக்கு சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும் படிக்கு சம்பவித்தது என்று அவன் சொல்கிறதே நாம் பார்க்கிறோம். பவுல் சிறைச்சாலையில் இருந்ததினால் கர்த்தர் குறிப்பாக நமக்கு இந்த காரியங்களை நன்மைக்கு ஏதுவாக மாற்றிப் போட்டார். பவுல் தன்னுடைய ஊழியப் பாதையில் அனேக நாடுகளுக்கும், அனேக கிராமங்களுக்கும், பட்டங்களுக்கும் அவன் ஓடி சுவிசேஷம் செய்கிறவனாக காணப்பட்டான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கர்த்தர் இவன் கற்றுக்கொண்டவைகளை எல்லாம் எழுத வேண்டும் என்று சொல்லி தீர்மானம் செய்து அவனை சிறைச்சாலையில் கொண்டு செல்லும்படி அவரே அதற்கு அனுமதி அளிக்கிறவராக காணப்பட்டார். வசனம் சொல்கிறது அன்றியும் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக இருக்கிறது என்று. நம்முடைய வாழ்க்கையிலும் கூட ஏன் ஆண்டவர் எனக்கு இப்படிப்பட்டதான சூழ்நிலையை கொண்டு வருகிறார் என்று சொல்லி நாம் கேள்வி கேட்கிவர்களாக காணப்படுகிறோம். ஆனால் கர்த்தர் எல்லாவற்றையும் நன்மைக்கு ஏதுவாக மாற்றி போடுகிறது அவருடைய சித்தம்.
இரண்டாவதாக அவன் சொல்லும்போது சொல்கிறான் அரமனையெங்குமுள்ளவர்களுக்கும் மற்ற யாவருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவுக்குள்ளான கட்டுகளென்று வெளியரங்கமாய் இருக்கிறது என்று. அவன் கட்டுண்டவனாக இருக்கும்பொழுது அரண்மனையில் இருக்கும் எங்கும் உள்ளவர்களுக்கு எப்படி சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது. காரணம் அந்நாட்களில் சிறைச்சாலை கைதிகள், சிறையில் அடைபட்டு இருக்கும் பொழுது சிறைச்சாலையில் இருக்கும் அதிகாரிகளோடு கூட தங்களுடைய சங்கிலியால் கட்டப்பட்டு இருப்பார்கள். சிறை கைதிகள் தப்பி ஓடி விட கூடாது என்பதற்காக அவர்கள் அப்படி செய்கிறவர்களாக காணப்பட்டார்கள். அவ்வேளையில் ஒவ்வொரு சிறைச்சாலை தலைவனும் வேலை செய்யும் பொழுது பவுல் விடாமல் சுவிசேஷத்தை சொல்லுகிறவனாக காணப்பட்டு இருந்திருக்க கூடும். ஒவ்வொரு எட்டு மணி நேர ஷிப்ட் வேலை செய்யும் ஒவ்வொருவருக்கும் ஆண்டவருடைய சுவிசேஷத்தை அவன் விடாமல் சொல்லிக்கொண்டே இருந்தது நிமித்தமாக அநேக சிறைச்சாலை தலைவர்கள், பணிபுரிகிறவர்கள் இரட்சிக்கப்பட்டு அவர்கள் சுவிசேஷத்தை அரண்மனைக்கு எடுத்து செல்லுகிறவர்களாக காணப்பட்டார்கள். இப்படியாக சிறைச்சாலை அனுபவங்கள் எல்லாம் நன்மைக்கு ஏதுவாக முடியும் படியாக கர்த்தர் மாற்றிப் போட்டார். இதேபோலத்தான் நீங்கள் கர்த்தருக்காக எடுக்கின்ற ஒவ்வொரு பிரயாசங்களும், கடினமான சந்தர்ப்பங்களும், நன்மைக்கு ஏதுவாக முடியும்.
நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார். அவன் விழுந்தாலும் தள்ளுண்டுபோவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார் (சங் 37:23,24). ஊழியத்தில், வாழ்க்கை பாதையில் எந்த கடினமான சூழ்நிலையாக இருந்தாலும் உங்கள் நடைகள் கர்த்தரால் உறுதிப்படும்போது, அவைகள் எல்லாம் நன்மைக்கு ஏதுவாக இருக்கும்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org