ஏசா 48:18. ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.
ஒரு மிக பெரிய நடிகர் சொன்னார் நான் அநேக பணங்களை சம்பாதித்துவிட்டேன், என்னிடம் கோடி கணக்கில் பணம் உள்ளது. ஆனால் எனக்கு பத்து சதவீதம் கூட என் வாழ்க்கையில் சமாதானம் இல்லை என்பதாக. சமாதானத்தை தேடி அலைந்து திரிகிற ஜனங்கள் ஏராளம். குடும்பத்திலும், சமுதாயத்திலும் சமாதானம் இல்லாமல் அலைந்து திரிகிற ஜனங்கள் கோடி கணக்கில் உள்ளனர். சமாதானத்தை தேடி இங்கும் அங்குமாக அலைந்து திரிகிற ஜனங்கள் உண்டு. சமாதானத்திற்காக அநேக பணங்களை செலவளிக்கிற பெரும் முதலாளிகளும், செல்வந்தர்களும், அரசியல்வாதிகளும் அநேகர் உண்டு. சமாதானத்திற்காக ஜோசியக்காரர்களை, நாள் பார்க்கிறவர்களை தேடி அலைகிற ஜனங்கள் கோடிக்கணக்கில் உண்டு. ஆனால் உங்களுக்கோ, கற்பனைகளை கவனிக்கிறோ உங்களுக்கோ, சமாதானம் நதியை போல வரும். சமாதான பிரபு, சமாதான கர்த்தர் உங்களுக்கு நிரந்தரமான சமாதானத்தை தருவார். சமாதான தாபரங்களில் வாசம் செய்யும்படி செய்வார்.
மாத்திரமல்ல உங்கள் நீதி சமுத்திரத்தின் அலைகளை போல இருக்கும். எனக்கு நீதி கிடைக்கவில்லையே, துன்மார்க்கர்கள் எனக்கு விரோதமாக துன்மார்க்கமாக நீதி செய்கிறார்கள் என்று சொல்லுகிறீர்களா.? வசனம் சொல்லுகிறது என்னை நீதிமானாக்குகிறவர் சமீபமாயிருக்கிறார்; என்னோடே வழக்காடுகிறவன் யார்? ஏகமாய் நிற்போமாக, யார் எனக்கு எதிராளி? அவன் என்னிடத்தில் வரட்டும் (ஏசா 50:8). உங்களுக்கு சமீபமாக இருக்கிறவர் உங்களை நீதிமானாக்குகிறவர். பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; மெய்யாய் நீதிமானுக்குப் பலன் உண்டென்றும், மெய்யாய் பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனுஷன் சொல்லுவான் (சங் 58:10,11), தேவன் என் சத்துருக்களுக்கு வரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார் (சங் 59:10) என்பதாக. சமுத்திரத்தின் அலைகள் எப்படி பெரிதாக இருக்குமோ அப்படியாக உங்களுக்கு வரும் நீதி பெரிதாயிருக்கும். சமுத்திரத்தின் அலைகள் எப்படி ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து வருமோ, அதுபோல உங்கள் நீதி விடாமல் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து வரும். சமுத்திரத்தின் அலைகள் எப்படி வேகமாக பயணிக்கிறதோ, அதுபோல உங்களுக்கு வரும் நீதி வேகமாக வரும்.
கர்த்தருடைய கற்பனைகளை கவனிக்கிற உங்களுக்கு வரும் நன்மைகள் என்னவென்றால், உங்கள் சமாதானம் நதியைப்போலும், உங்கள் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
www.wogim.org
Doha, Qatar