ஆண்டவருக்குச் சித்தமானால்:-

யாக் 4:15. ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்.

எதை செய்தாலும் ஆண்டவருடைய சித்தத்தின்படி செய்ய நம்மை நாம் அர்ப்பணிக்க வேண்டும். குறிப்பாக சம்பாத்தியம் பண்ணுகிறவர்கள் ஆண்டருக்கு சித்தமானால் என்று சொல்லுகிறவர்களாக காணப்பட வேண்டும். அப்படி சொல்லாதவர்கள் அநேகர் தங்களுடைய புயபலத்தை நம்பியும், பிற மனிதனுடைய பலத்தை நம்பியும் ஓடுகிறவர்களாக காணப்படுவார்கள். இதற்கு முந்தய வசனங்களில் நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒருவருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம்பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள் என்று ஆண்டவர் சொல்லுகிறார். நமக்கு அநேக வேளைகளில் இப்படிப்பட்ட சிந்தைகள் வருகிறது. ஆண்டவருடைய சித்தத்தை அறியாமல் நான் லண்டன் போக வேண்டும், கனடா போக வேண்டும், அமெரிக்கா போக வேண்டும், ஆஸ்திரேலிய போக வேண்டும் என்று முயற்சிப்பார்கள். ஆண்டவருடைய சித்தத்தின் படி எந்த தேசத்திற்கு போனாலும் அது நன்று. மாறாக, அவர் சித்தமில்லாத இடம் ஏதுவாக இருந்தாலும் அங்கே கடந்து செல்லாமல் இருப்பது நல்லது. மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்பவர்கள் அநேகர் பணிக்காக கடந்து செல்லும்போது நான் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் தான் அங்கே இருப்பேன். பின்பு என் தாய் தேசத்திற்கு கடந்து சென்றுவிடுவேன். என் தங்கை, அக்காவின் திருமணம் முடிந்தவுடன் கடந்து சென்றுவிடுவேன் என்று அங்கே வேலைக்கு செல்வார்கள். கடைசியில் பல வருடங்கள் அங்கேயே தங்கி விடுவார்கள். ஆகையால் எதை செய்தாலும் ஆண்டவருடைய சித்தம் இருந்தால் என்று சொல்லி பழகுங்கள்.

நாளைக்கு என்ன சம்பவிக்கும் என்பதை நாம் அறியோம். நம்முடைய ஜீவன் கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே. ஆகையால் நாளைய தினத்தை குறித்து கலங்காமல் தேவனுடைய சித்தத்திற்கு அற்பணியுங்கள். என்னத்தை உண்போம் என்றும் என்னத்தை உடுப்போம் என்றும் கவலை படைத்திருங்கள். உங்களுக்கு இன்னது வேண்டும் என்று கர்த்தர் அறிவார். நம்முடைய நோக்கமெல்லாம் இன்ன பட்டணத்திற்கு போய் இன்ன சம்பாத்தியம் பண்ணவேண்டும் என்று இராமல், கர்த்தருடைய சித்தத்தின்படி எங்கே போனாலும் அவருடைய இராஜ்ஜியத்தை கட்டுவதே என் தலையாய கடமை என்று சொல்கிறவர்களாக காணப்பட வேண்டும். உங்கள் சம்பாத்தியம் பொத்தலான பையிலே போடுகிறதாய் காணப்படலாகாது. பொன்னும் பொருளும் அவருடையது. அவரை சார்ந்து சம்பாத்தியம் பண்ணுங்கள். நம்முடைய எதிர்காலத்தை குறித்து பேசும்போது எப்பொழுது ஆண்டவருக்கு சித்தமானால் என்று சொல்லபழுகுவோம். கர்த்தர் அதை கணம் பண்ணுவார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *