தேவன் பல வழிகளில் பேசுகிறார். சில சமயங்களில் நமக்கு தெளிவான புரிதலை வழங்குவதற்காக சூழ்நிலைகள் அல்லது சம்பவங்கள் மூலம் பேசுகிறார்.
எரேமியா 18 ஆம் அத்தியாயத்தில், தேவன் எரேமியா தீர்க்கதரிசியை குயவன் வீட்டிற்குச் செல்லும்படி கட்டளையிட்டார், அங்கே தேவன் அவருடைய வார்த்தையை வெளிப்படுத்தினார்.
எரேமியா குயவனின் வீட்டிற்குச் சென்று, ஒரு குயவன் சக்கரத்தில் வேலை செய்வதைக் கண்டான். ஆனால் அவர் களிமண்ணிலிருந்து வடிவமைத்துக்கொண்டிருந்த பானை அவரது கைகளில் சிதைந்தது; இருப்பினும், குயவன் அதை மீண்டும் மற்றொரு பாத்திரமாக மாற்றினான்.
அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு அருளப்பட்டது. “இஸ்ரவேலே, இந்தக் குயவன் செய்வதுபோல் என்னால் உனக்குச் செய்யக்கூடாதா? குயவன் கையில் களிமண் இருப்பது போல, இஸ்ரவேலே, நீ என் கையில் இருக்கிறாய்”
இங்கே தேவன் ஒரு குயவர் மூலம் எரேமியாவுக்கு ஒரு அழகான பாடத்தை எடுத்துரைத்தார்.
யோனா அத்தியாயம் 4 இல், தேவன் யோனாவுக்கு இரக்கமுள்ள கடவுள் என்பதைத் தெரிவிக்க விரும்பினார்.
யோனாவுடைய தலையின்மேல் நிழலுண்டாயிருக்கவும், அவனை அவனுடைய மனமடிவுக்கு நீங்கலாக்கவும் தேவனாகிய கர்த்தர் ஒரு ஆமணக்குச்செடியை முளைக்கக் கட்டளையிட்டு, அதை அவன்மேல் ஓங்கிவளரப்பண்ணினார்; அந்த ஆமணக்கின்மேல் யோனா மிகவும் சந்தோஷப்பட்டான்.
மறுநாளிலோ கிழக்குவெளுக்கும் நேரத்தில் தேவன் ஒரு பூச்சியைக் கட்டளையிட்டார், அது ஆமணக்குச்செடியை அரித்துப்போட்டடது; அதினால் அது காய்ந்துபோயிற்று.
சூரியன் உதித்தபோது தேவன் உஷ்ணமான கீழ்க்காற்றைக் கட்டளையிட்டார்; அப்பொழுது வெயில் யோனாவுடைய தலையில் படுகிறதினால் அவன் சோர்ந்துபோய், தனக்குள்ளே சாவை விரும்பி: நான் ஊயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.
அப்பொழுது தேவன் யோனாவை நோக்கி: நீ ஆமணக்கினிமித்தம் எரிச்சலாயிருக்கிறது நல்லதோ என்றார்; அதற்கு அவன்: நான் மரணபரியந்தமும் எரிச்சலாயிருக்கிறது நல்லதுதான் என்றான்.
அதற்குக் கர்த்தர்: நீ பிரயாசப்படாததும், நீ வளர்க்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரு இராத்திரியிலே அழிந்துபோனதுமான ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே.
வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்
மேற்கூறிய சம்பவத்தில் தேவன் ஒரு செடி, பூச்சி, கிழக்குக் காற்று மற்றும் சூரியன் ஆகியவற்றைப் பயன்படுத்தி யோனாவுக்கு கிருபையுள்ளவர் என்பதைக் கற்பித்தார்.
தேவனை நாம் மட்டுப்படுத்த முடியாது. நம்மிடம் பேசுவதற்கு சாதாரண விஷயங்களைக் கூட பயன்படுத்துவார்
ஒரு நாள் நான் நடந்து செல்லும் போது, ஒரு குடிகாரன் என் கையில் துப்பினான். நான் மிகவும் எரிச்சலடைந்தேன், கைகளை கழுவுவதற்காக என் அறைக்கு விரைந்தேன், நான் கழுவிக் கொண்டிருக்கும் போது, பரிசுத்த ஆவியானவர் எனக்கு நினைவூட்டினார்
“ஒரு குடிகாரன் உன் மேல் எச்சில் துப்பியது உனக்கு இவ்வளவு எரிச்சலை உண்டுபண்ணியதே! இயேசுவை நினைத்துப்பார், வேலைக்காரன் கூட அவர் முகத்தில் துப்பினான், ஆனால் அவர் உனக்காக பொறுமையாக சகித்தாரே”. உடனே, ஆண்டவர் இயேசுவுக்கு நன்றி சொன்னேன்.
ஒரு குடிகாரனைப் பயன்படுத்தி எனக்குக் கற்றுக் கொடுத்தார்.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக !
Thivakar.B
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

