கர்த்தருடைய சத்தத்திற்கு கீழ்ப்படிந்தால்?

கர்த்தருடைய பிள்ளைகள் தேவனுடைய சத்தத்திற்கு கீழ்ப்படிந்தால் என்ன நடக்கும்

  1. ஆண்டவர் நம் மருத்துவராக இருப்பார்.

நாம் தேவனுடைய குரலுக்கு கீழ்ப்படிந்தால் அவர் நமக்கு மருத்துவராக இருப்பார்.!!!

“உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவர் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, அவருடைய கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டால், எகிப்தியருக்கு நான் வரவழைத்த வியாதிகளில் ஒன்றையும் உன்மேல் சுமத்தமாட்டேன். நானே உன்னைக் குணமாக்கும் கர்த்தர்” (யாத்திராகமம் 15:26)

  1. நிலத்தின் நன்மையை உண்போம்.

நீங்கள் கீழ்ப்படிந்து நான் சொல்வதைக் கேட்டால், பூமியின் நன்மையைப் புசிப்பீர்கள் (ஏசாயா 1:19)

உங்களுக்கு வலிமை தராத உணவுக்கு உங்கள் பணத்தை ஏன் செலவிட வேண்டும்? உங்களுக்கு நன்மை செய்யாத உணவுக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும்? நான் சொல்வதைக் கேளுங்கள், நீங்கள் நல்லதைச் சாப்பிடுவீர்கள். நீங்கள் சிறந்த உணவை அனுபவிப்பீர்கள். (ஏசாயா 55:2)

  1. பாதுகாப்பு மற்றும் பயம் இல்லாத வாழ்க்கை
    எந்த சூழ்நிலையில் இருந்தாலும் பரவாயில்லை. தேவனுடைய குரலுக்கு செவிசாய்த்தால் பயமின்றி பாதுகாப்பாக வாழ்வோம்.

எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்; (நீதிமொழிகள் 1:33)

  1. ஆசீர்வாதங்கள் உங்களை மேற்கொள்ளும்.

கர்த்தர் தனது குழந்தைகளை ஆசீர்வதிக்க விரும்புகிறார். உபாகமம் 28 ஆம் அதிகாரத்தில் பல வாக்குறுதிகள் உள்ளன, ஆனால் ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே தேவனுடைய குரலுக்குக் கீழ்ப்படிவது. அவருடைய குரலுக்கு கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதங்கள் நம்மை மேற்கொள்ளும்.

  1. கர்த்தர் உங்கள் எதிரிகளை அடக்கி அவர்களுக்கு எதிராக போரிடுவார்.

கர்த்தர் நம் எதிரிகளை அடக்க விரும்புகிறார், ஆனால் நாம் அவருடைய குரலுக்கு செவிசாய்க்க விரும்புகிறார்.

“ஆ, என் ஜனம் எனக்குச் செவிகொடுத்து இஸ்ரவேல் என் வழிகளில் நடந்தால் நலமாயிருக்கும்!
நான் சீக்கிரத்தில் அவர்கள் எதிராளிகளைத் தாழ்த்தி, என் கையை அவர்கள் சத்துருக்களுக்கு விரோதமாகத் திருப்புவேன் (சங்கீதம் 8:13,14)

  1. ஆட்சியாளர்கள் தேவனுடைய வழிகளில் நடப்பார்கள்.

தேவனுடைய பிள்ளைகள் அவரின் குரலுக்கு கீழ்ப்படிந்தால், ஆட்சியாளர்கள் இறைவனைப் பின்பற்றுவார்கள்.

” நீங்கள் கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணாமல் கர்த்தருக்குப் பயந்து, அவரைச் சேவித்து, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்தால், நீங்களும் உங்களை ஆளுகிற ராஜாவும் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களாயிருப்பீர்கள்.” (1 சாமுவேல் 12:14)

சபை எப்படி செல்கிறதோ உலகம் அப்படியே செல்லும்!!

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக !

Thivakar.B
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *