….இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை. சங்கீதம் 15:5
சங்கீதம் 15 தாவீதின் சங்கீதம்.
கர்த்தருடைய சமூகத்தில் அங்கீகரிக்கப்படுகிறவருடைய சுபாபம் எப்படிப்பட்டதாக காணப்படவேண்டும் என்ற தியானத்தின் விளைவாக கிடைத்த பாடலாய் இந்த சங்கீதம் காணப்படுகிறது. கர்த்தருடைய ஆலயத்திற்கு போவது ஒன்று. கர்த்தரால் அங்கீகரிக்கப்படுவது இன்னொன்று. ஆலயத்திற்கு எல்லோரும் போகலாம். எல்லாரும் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் கர்த்தரால் ஏற்றுகொள்ளப்படுகிற பாத்திரம் பாக்கியமுள்ளது. காயினும், ஆபேலும் காணிக்கை செலுத்தி கர்த்தரை தொழுதுகொள்ளும்படி வந்தார்கள். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கீகரித்தார். காயீனையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கீகரிக்கவில்லை.
கர்த்தருடைய சமூகத்தில் அங்கீகரிக்கப்பட நாம் எப்படி காணப்படவேண்டும்.
-உத்தமனாய் நடக்கவேண்டும்
-நீதியை நடப்பிக்கவேண்டும்
-சத்தியத்தை, உண்மையை பேசவேண்டும்
-யாரையும் குறித்து புறங்கூறலாகாது
-யாருக்கும் தீங்குசெய்ய கூடாது
-அயலானை குறித்த நிந்தையான பேச்சிற்கு செவிசாய்க்கலாகாது
-நல்லொழுக்கமில்லாதவர்களை விட்டு விலகவேண்டும்
-கர்த்தருக்கு பயந்தவர்களை கனம்பண்ணவேண்டும்
-வாக்குகொடுத்ததில் நஷ்டம் வந்தாலும் சொல் தவறாமல் காணப்படவேண்டும்.
-வட்டிக்கு பணம் கொடுக்ககூடாது.
-பரிதானம் வாங்கலாகாது
இப்படி செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை. கொஞ்ச நாட்களுக்கு மாத்திரமல்ல, வாழ்நாள் முழுவதிலும் அசைக்கப்படுவதில்லை. சத்துரு, உலகத்தின் ஜனங்கள் நம்மை அசைத்து பார்ப்பதற்கு, தடுமாற பண்ணுவதற்கு, கலங்கப்பண்ணுவதற்கு பல சூழ்நிலைகளை கொண்டு வந்தாலும் நாம் அசைக்கப்படுவதில்லை. காரணம் நீ என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை என்று கர்த்தர் உங்களுக்கு வாக்குகொடுத்திருக்கிறார்.
கர்த்தர் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக!
Pastor. David
Word of God Church
Doha – Qatar
www.manna.today