நான் உனக்கு திறந்த வாசலை ஒருவனும் பூட்டமாட்டான்:-

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/7A5CkNLjUoA

வெளி 3:8. உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.

ஆண்டவர் சிமிர்னா மற்றும் பிலதெல்பியா சபைகளை பற்றி ஒரு குறையும் சொல்லவில்லை. ஆனால் இந்த இரண்டு சபைகளை தான் சாத்தானின் கூட்டத்தார் எதிர்த்து நின்றார்கள். இப்படியிருக்க வசனம் சொல்லுகிறது சரீரமாகிய சபையின் காலுக்கு கீழாக சாத்தானை நசுக்கும்படி தேவன் முன்குறித்திருக்கிறார் (ரோம 16:20) என்பதாக. பிலதெல்பியா சபைக்கு ஆவியானவர் கொடுத்த வாக்குத்தத்தங்கள் அநேகம்.

கர்த்தர் சொல்லுகிறார் உனக்கு முன்பாக திறந்த வாசலை வைத்திருக்கிறேன். யோனாவிற்கு ஆண்டவர் நினிவே பட்டணத்திற்கு செல்லவேண்டும் என்ற வாசலை திறந்தார்; ஆனால் சத்துரு அதை மாற்றி அவன் தர்ஷீசுக்கு போகும்படி செய்தான். கர்த்தர் மீனின் வாசலை திறந்து அவனை நினிவே பட்டணத்திற்கு செல்லும்படி செய்தார். கர்த்தர் நமக்கு திறந்த வாசலை, ஒரு சத்துருவாலும், ஒருபோதும் அடைக்க முடியாது. பெரிய பெரிய Shopping Complex , விமான நிலையம் போன்ற இடங்களுக்கு சென்றால் அங்கே Sliding door என்று சொல்லக்கூடிய தானியங்கி கதவு இருக்கும். அதன் அருகே நாம் செல்லும்போது அந்த கதவு தானாக திறக்கும். அதுபோலத்தான், நமக்கு கொஞ்ச பெலன் இருந்தும், அவருடைய நாமத்தை மறுதலிக்காமல், அவருடைய வசனத்தை கைக்கொண்டால், நாம் செல்லுகிற இடங்களில், கையிட்டு செய்யும் காரியங்களில் கர்த்தர் திறந்த வாசலை கொடுப்பார். அனுகூலமான வாசலை கர்த்தர் கொடுப்பார்.

மாத்திரமல்ல, ஆண்டவர் சொல்லுகிறார் நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை மற்றவர்கள் அறிந்துகொள்ளும்படி செய்வேன். இயேசு தன்னுடைய நீண்ட ஜெபத்தில் பிதாவிடம் சொன்னார், பிதாவே நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கு செய்யும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன் (யோவா 17:23) என்பதாக. யார் உங்களை எதிர்த்தார்களோ, யாருக்கு முன்பாக நீங்கள் அவமானப்பட்டீர்களோ, அவர்களுக்கு முன்பாக கர்த்தர் உங்களை மேன்மைப்படுத்தி, அவர் உங்கள் மேல் அன்பாய் இருப்பதை உலகம் அறிந்துகொள்ளும்படி செய்வார்.

இதோடில்லாமல், கர்த்தர் சொல்லுகிறார், பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைக்காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன் என்ற வாக்குத்தத்ததை கொடுக்கிறார். நாம் அனைவரும் சோதனை காலத்தை எதிர்நோக்கி இருக்கிறோம். உபத்திரவத்தின் நாட்களிலும் கூட ஆண்டவர் அனுமதியின்றி ஒருவரும் நம் தலையிலுள்ள ஒரு முடியை கூட தொட்டுவிட முடியாது. ஆகையால் சோதனைகளை குறித்து கவலைப்படாமல், ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, ஒருவருக்காக ஒருவர் ஜெபத்தில் தாங்கி, தேவ வசனத்தை கைக்கொண்டு, தேவனுடைய ஆலயத்தில் தூணாக இருக்கும்படி உங்களை ஒப்புக்கொடுங்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *