இயேசுவின் இரத்தத்தினால் உண்டான மீட்பு:-

எபேசியர் 1:7 அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/HUxq1BEf3c4

காணியாட்சிக்கு சொந்தமானவன் மரித்தால் அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் வம்சத்திலே அவனுக்குக் கிட்டின உறவின்முறையானுக்குக் சுதந்தரமாகக் கொடுக்கவேண்டும் என்பது நியாயவிதிப்பிரமாணமாய் இருந்து வந்தது (எண் 27:11). அதாவது மரித்தவனுடைய நிலத்தை நெருங்கிய உறவினன் சுதந்திரமாக மீட்டுக்கொள்ளலாம் என்பது நியாப்பிரமானம். ரூத் தன்னுடைய கணவனை இழந்த பிறகு, போவாஸின் வயலில் தானியத்தை பெற்று கொண்டு வந்தாள். அதை அறிந்த ரூத்தின் மாமியாகிய நகோமி சொன்னாள்: போவாஸ் நமக்கு நெருங்கின உறவின் முறையானும் நம்மை ஆதரிக்கிற சுதந்தரவாளிகளில் ஒருவனுமாய் இருக்கிறான் என்று. ஆகையால் நீ போய் போவாஸின் போர்வைக்குள் படுத்துக்கொள், அவன் உன்னை மீட்டெடுப்பான் என்று நகோமி சொன்னாள். ரூத்தும் தன் மாமி சொன்னதின்படி போவாஸிடம் சொன்னாள் நீ எண் சுதந்திரவாளி என்று. அப்பொழுது போவாஸ்: என்னிலும் கிட்டின சுதந்தரவாளி ஒருவன் இருக்கிறான்;அவன் உன்னைச் சுதந்தரமுறையாய் விவாகம்பண்ணச் சம்மதித்தால் நல்லது, அவன் விவாகம்பண்ணட்டும்; அவன் உன்னை விவாகம்பண்ண மனதில்லாதிருந்தானேயாகில், நான் உன்னைச் சுதந்தரமுறையாய் விவாகம்பண்ணுவேன் என்று சொன்னான். இவ்வேளையில் போவாசை காட்டிலும் கிட்டின சுதந்திரவாளி அதாவது கிட்டின உறவினன் ரூத்தை மீட்டெடுக்க முன்வரவில்லை. மாறாக, போவாசே ரூத்தை மீட்டெடுத்தான்.

அதுபோல தான், பாவத்தின் பிடியில் சிக்கி தவித்துக்கொண்டிருந்த நம்மை, நம்முடைய நெருங்கிய சுதந்திரவாளியான நியாப்பிரமணம் நம்மை மீட்டெடுக்கவில்லை. மாறாக, இயேசு சிலுவையில் நமக்காக தன் சொந்த இரத்தத்தை ஊற்றி கொடுத்தினால் இன்று இயேசு நமக்கு மிகவும் நெருங்கிய சுதந்திரவளியாக, சிநேகிதனாக, உறவினாக, தகப்பனாக இருக்கிறார். பரலோக போவாசாகிய இயேசுவின் இரத்தத்தினால் நாம் எல்லாரும் மீட்கப்பட்டிருக்கிறோம். இயேசுவின் இரத்தம் நமக்கும் பிதாவுக்கு இடையே இருந்த தடுப்பு சுவரை உடைத்திருக்கிறது. இயேசுவின் இரத்தம் இருத்திரத்தாரையும் ஒன்றாக்கியிருக்கிறது. காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே. மாறாக, நம்முடைய பாவங்கள் அனைத்தையும் சுத்திகரிப்பதற்கு இயேசுகிறிஸ்துவின் இரத்தம் போதுமானதாக காணப்படுகிறது. நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! (எபி 9:14) என்று வேதம் சொல்லுகிறதாய் காணப்படுகிறது. ஆம், நாம் நியாயப்பிரமானத்தினாலும், நம்முடைய சொந்த கிரியைகளினாலும் முயற்சியினாலும் மீட்கப்படவில்லை, மாறாக, இயேசுவின் இரத்தத்தினால் மீட்கப்பட்டிருக்கிறோம். இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு (சங் 130:7) என்று வசனம் சொல்லுகிறது. இயேசுவினிடத்தில் திரளான மீட்பு உண்டு. அவரிடத்தில் வந்துவிடுங்கள்; பரலோக போவாசிற்கு உங்களை சொந்தமாக்கிக்கொள்ளுங்கள். அவரே உங்கள் சுதந்திரவாளி. அவரே உங்கள் மீட்பும் இரட்சகருமாய் இருக்கிறார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *