நீதி 19:22. நன்மைசெய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை; பொய்யனைப் பார்க்கிலும் தரித்திரன் வாசி.
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/I0z6zcZoPBs
கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசித்துப்பார்க்க முடியும் என்பதை 1 பேதுரு 2:1 கூறுகிறது. எப்படி நமக்கு பிடித்த உணவை சுவைத்து சாப்பிடுகிறோமோ அதுபோல கர்த்தருடைய தயையை நம்முடைய வாழ்க்கையில் ருசிபார்க்கமுடியும். அதுபோல கர்த்தர் நமக்கு மனித தயவையும் கட்டளையிடுகிறவராக காணப்படுகிறார்.
எஸ்தர் இராஜாத்திக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற ஆசை இராஜாவுக்கு வந்தது. அவனுக்குள்ளாக ஏற்பட்ட அந்த ஆசை தான் எஸ்தருக்கு அவன் பாராட்டின தயவாய் காணப்படுகிறது. அதுபோல தான், உலகத்திலிருக்கும் உயர் அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள் கண்களில் தயவு கிடைக்கும்படி கர்த்தர் செய்வார். ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப்போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார் (நீதி 21:1) என்ற வசனத்தின்படி ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் இருக்கிறது. உங்கள் வேலை ஸ்தலத்தில் உங்கள் மேல் அதிகாரியின் இருதயம் கர்த்தருடைய கரத்தில் உள்ளது. அரசியல்வாதிகள், அரசாங்கங்களின் வேலை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய இருதயம் கர்த்தருடைய கரங்களில் இருக்கிறது. சிலர் சொல்லுவார்கள் என்னுடைய அதிகாரி மிகவும் கரடு முரடான நபர்; அவரை நெருங்கி பேசுவதே கடினம் என்று சொல்வார்கள். ஒன்றை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும் எப்பேர்ப்பட்ட கரடுமுரடான நபர்களாக இருந்தாலும் அவர்களுடைய இருதயம் கர்த்தருடைய கர்த்தர் கரத்தில் இருக்கிறது. கர்த்தருடைய ஊழியர்களுக்கு விரோதமாக யாராக இருந்தாலும் சரி, அவர்கள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் அவர்களுடைய இருதயம் கர்த்தருடைய கரத்தில் இருக்கிறது.
நாம் சில வேளைகளில் நினைப்பதுண்டு இந்த அதிகாரியின் மூலம் எனக்கு ஏதாவது தயவு உண்டாகுமா என்று. உங்களுக்கு அந்த நபர்களின் கண்களில் தயவு கிடைக்கும்படி, அதிகாரிகளின் இருதயத்தை ஆளுகை செய்கிறவர், அந்த நபர்களிடம் உணர்த்தி, உங்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற தீராத ஆசையை உண்டாக்கிவிடுவார். அதாவது, உங்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு மேலிருப்பவர்களுக்கு உண்டாகும்படி கர்த்தர் செய்வார். உதாரணத்திற்கு வேலைக்காக நேர்காணலில் (Interview), உங்களை கேள்வி கேட்பவர்கள் இருதயத்தில் உங்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற ஆசையை கர்த்தர் போடுவார். அதுதான் கர்த்தர் கட்டளையிடும் மனித தயவாய் காணப்படுகிறது. நீங்கள் போகிற வருகிற இடங்களில், சந்திக்கிற மனிதர்கள் இருதயத்தில் உங்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற ஆசையை கர்த்தர் போட்டு, அவர்கள் கண்களில் தயவு கிடைக்கும்படி கர்த்தர் செய்வார்.
ரூத் நகோமியைப் பார்த்து: நான் வயல்வெளிக்குப் போய், யாருடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்குமோ, அவர் பிறகே கதிர்களைப் பொறுக்கிக்கொண்டுவருகிறேன் என்றாள். போவாஸ் ரூத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்ற ஆவல் கொண்டான். அதனால் தான் ரூத் சொன்னாள் உம்முடைய கண்களில் தயவை எப்படி பெற்றுக்கொண்டேன் என்றும், நான் உம்முடைய வேலைக்காரிகளில் ஒருத்திக்கும் சமானமாயிராவிட்டாலும், நீர் எனக்கு ஆறுதல் சொல்லி உம்முடைய அடியாளோடே பட்சமாய்ப் பேசினீரே என்றும் சொன்னாள். அப்படிப்பட்ட நன்மை செய்யும் இருதயத்தையும், பட்சமாய் பேசும் உள்ளத்தையும் கர்த்தர் உங்கள் அதிகாரிகளுக்கு கொடுத்து, மனித தயவை கட்டளையிடுவார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org