சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகன் :-

நாகூ 1:15. இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது; யூதாவே, உன்பண்டிகைகளை ஆசரி; உன் பொருத்தனைகளைச் செலுத்து; துஷ்டன் இனி உன் வழியாய்க் கடந்துவருவதில்லை, அவன் முழுதும் சங்கரிக்கப்பட்டான்.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/uX0EM729XHs

கடந்த மாதத்தில் United Nations ஒரு பட்டியலை (Index) வெளியிட்டது. அவை 2023 ஆண்டின் சந்தோசமாக இருக்கும் நாடுகள் என்ற பட்டியலை வெளியிட்டது. ஆறு முக்கிய காரணிகளை (Factors) மையப்படுத்தி, உலக நாடுகள் கடந்த மூன்று ஆண்டுகளில் எப்படி இருந்தது என்பதை வைத்து இந்த பட்டியலை வெளியிட்டது. அந்த காரணிகள் சமூக சேவை, வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம், பெருந்தன்மை, மற்றும் ஊழல் இல்லாமை போன்றவைகள். இவற்றில் பின்லாந்து (Finland) முதலிடத்திலும், USA 15வது இடத்திலும், UK 19வது இடத்திலும், நம்முடைய தாய் நாடு இந்தியா 126வது இடத்திலும், கடைசி இடத்தில் ஆப்கானிஸ்தான் 137வது இடத்திலும் இடம்பெற்றிருக்கிறது. இதனால் கிறிஸ்துவர்களாகிய நம்முடைய கடமை என்னவாய் இருக்க வேண்டும் என்று மூத்த ஊழியக்காரர் அன்பு Bro.Stanly அவர்கள் மூன்று காரியங்களை சொன்னார். அவைகள், ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும் (சங் 46 :4 ) என்ற வசனத்தின்படி ஆவியானவர் நதியாய் தேசத்தில் ஊற்றப்பட வேண்டும். நான் மகிழ்ந்து, உங்களனைவரோடுங்கூடச் சந்தோஷப்படுவேன் (பிலி 2:17,18) என்ற வசனத்தின்படி எல்லாரும் சந்தோசமாய் இருக்க பிரயாசப்பட வேண்டும். மாத்திரமல்ல, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் (லுக் 2:10) என்ற வசனத்தின்படி நம் தேசங்களில் சுவிசேஷம் எப்பக்கமும் கடந்து செல்லவும் பிரயாசப்பட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

நாமெல்லாரும் இருக்கிற தேசங்களில் சமாதானத்தை கூறுகிற சுவிசேகர்களாக செயல்பட வேண்டும். சுவிசேஷம் எல்லா இடங்களிலும் பரவ அயராது உழைக்க வேண்டும். Father Berchmans பாடுவார், சுவிசேஷ பாரம் ஒன்றே என் சுமையாக மாற வேண்டும் என்று. அதுபோல நம்முடைய பாரங்களெல்லாம் உலக காரியங்களில் இல்லாமல் சுவிசேஷம் பரவவேண்டும் என்பதாய் மாற வேண்டும். அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பாரத்தை காட்டிலும், அதிக சொத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்ற பாரத்தை பார்க்கிலும், வேலையில் உயர்ந்த ஸ்தானத்தில் செல்வதே என் இலக்கு என்ற பாரத்தை காட்டிலும், சுவிசேஷ பாரமே மிகவும் நல்லது. சமாதானத்தை கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் அழகானவைகள் என்று வேதம் சொல்லுகிறது. நம்முடைய தேசங்கள் சுபிட்சமாகவும், சந்தோசமாகவும், சமாதானமாகவும் இருக்க வேண்டுமென்றால் எல்லா திசைகளிலும் சுவிசேஷம் கடந்து செல்ல வேண்டும். அப்படியென்றால் ஏதோ குறிப்பிட்ட ஊழியக்காரர்கள் மாத்திரம் உழைத்தால் போதாது. நாம் அனைவரும் இணைந்து எப்படியாவது சுவிசேஷம் வளர, காரணமாய் இருக்க வேண்டும். நம்முடைய சுவிசேஷத்தின் மையமும், நோக்கமும் சிலுவையிலறையப்பட்ட இயேசுவை ஜனங்களுக்கு காண்பிப்பதாக இருக்க வேண்டும். காரணம் இயேசுவே ஜனங்களுக்கு சமாதானத்தையும் சந்தோஷத்தையும் கொடுக்க முடியும். நம்முடைய நாடு சந்தோசமாக இருக்கும் பட்டியலில் முதலிடத்திற்கு வருவது சபையின் கரங்களில் தான் உள்ளது. இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையையும் நோக்கி: நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்ல தேசம் (எண் 14:7) என்று அழைக்கப்பட வேண்டுமென்றால், நாம் சுவிசேஷத்தை சொல்ல வேண்டும்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *