கசப்பான வேர்.

ஒருவனும் தேவனுடைய கிருபையை  இழந்துபோகாதபடிக்கு யாதொரு கசப்பான வேர்  முளைத்தெழும்பிக்  கலக்கமுண்டாக்குகிறதினால்  அநேகர் தட்டுப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் (எபி. 12:15).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/HTXtMkovuHo

நம் இருதயங்களில் மற்றவர்கள் மேல் காணப்படுகிற கசப்பு அவர்களிடம் விரோதம் கொள்ளும் படிக்குச் செய்யும்,     அவர்களை  தூஷிக்குப்படிக்குச்  செய்யும்,     எப்படியாவது பழிவாங்கும்  படிக்குத்  தூண்டும்,     தேவனுடைய கிருபையை இழக்கச் செய்து நம்மை தீட்டுப்படுத்தும். ஆகையால் தான் வேதம்,     சகலவிதமான கசப்பும்,     கோபமும்,     மூர்க்கமும்,     கூக்குரலும்,     தூஷணமும்,     மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களை விட்டு நீங்கக்கடவது (எபேசி. 4:31) என்று ஆலோசனை கூறுகிறது. தேவனுடைய ஜனங்கள் சந்தோஷத்தோடும்,     சமாதானத்தோடும்,     அன்போடும் காணப்படும் படிக்கு அழைக்கப்பட்டவர்கள்,     ஆகையால் எள்ளளவும் கசப்பான வேர்  முழைத்தெழும்புவதற்கு  இடம் கொடாதிருங்கள். கசப்பான வேரை வளர விடும்போது அது கசப்பான கனிகளைக் கொடுக்கும் படிக்குச் செய்யும்.

ராஜாக்கள் யுத்தம் செய்யும் காலத்தில்,     போர் முனையில் காணப்பட வேண்டிய தாவீது ராஜா,     தன் அரண்மனையின் உப்பரிகையின் மேல் உலாவிக் கொண்டிருந்தான். அப்போது ஸநானம்பண்ணுகிற ஒரு அழகிய ஸ்திரீயைக் கண்டு அவளை இச்சித்தான். அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான், அவள் எலியாமின் குமாரத்தியும்,     ஏத்தியனான  உரியாவின்  மனைவியுமாகிய  பத்சேபாள்  என்றார்கள். எலியாமும்,     உரியாவும்  தாவீதோடு  காணப்பட்ட  முப்பத்திஏழு  பராக்கிரமசாலிகளில்  இருவராய் காணப்பட்டார்கள்.   அகித்தோப்பேல் எலியாமுடைய தகப்பன்,     அவன் தாவீதின் ஆலோசனைக் காரனாகக் காணப்பட்டான். அவனுடைய வாக்கு தேவனுடைய வாக்கைப் போல தாவீதுக்கு காணப்பட்டது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தாவீதை சேவித்தும்,     தாவீது  நன்றியறியாதவனாய்,      அந்த குடும்பத்தின் ஸ்திரீயாகிய பத்சேபாளை இச்சித்து,     தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி,     அவளை  அபகரித்துக்  கொண்டான்.  அவளைத்  திருமணம்  செய்வதற்கு தடையாகக் காணப்பட்ட அவள் புருஷனாகிய  உரியாவையும் போர் முனையில் முன்னிறுத்தி,     உடன் காணப்பட்ட சேவகர்களைப் பின்வாங்கும் படிக்குச் செய்து,     அவனை எதிரிகளின் கையில் ஒப்புக்கொடுத்து,     உத்தமமான ஒரு வீரன் மடிவதற்கும் காரணமாகி விட்டான். 

அகித்தோப்பேலின் இருதயத்தில் இவையெல்லாம் கசப்பான வேராக ஆழமாக வளர்ந்து கொண்டிருந்தது. அவன் தாவீதை பழிவாங்குவதற்கு ஒரு தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான். தாவீதின் குமாரனாகிய அப்சலோம் தாவீதுக்கு எதிராக எழும்பி ஆட்சியைக் கைப்பற்றிய உடன் அகித்தோப்பேல் அந்த தருணத்தைப் பயன்படுத்தி இவனும் அப்சலோமோடு சேர்ந்து கொண்டான். தாவீது எருசலேமை விட்டு தன் உயிரைக் காத்துக் கொள்ளும் படிக்குத் தப்பிச் சென்ற வேளையில்,     அப்சலோம்  அகித்தோப்பேலைப்  பார்த்து,     நாங்கள் செய்யவேண்டியது  இன்னதென்று ஆலோசனை சொல்லும் என்றான். அப்பொழுது அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: வீட்டைக் காக்க உம்முடைய தகப்பன்  முன்வைத்த  அவருடைய  மறுமனையாட்டிகளிடத்தில்  பிறவேசியும். அப்பொழுது உம்முடைய தகப்பனுக்கு  நாற்றமாய்ப்போனீர் என்பதை  இஸ்ரவேலர்  எல்லாரும் கேள்விப்பட்டு  உம்மோடிருக்கிற  எல்லாருடைய கைகளும் பலக்கும் என்றான். அப்சலோம் அப்படிச் செய்து அவன் தகப்பனாகிய தாவீதோடு இனி ஒப்புரவு ஆக முடியாத பெரும் தவற்றைச் செய்தான்,     அதற்கு  அகித்தோப்பேல்  காரணமாயிருந்தான். அகித்தோப்பேலுக்குள்ளாய் காணப்பட்ட கசப்பு தாவீதை பழிவாங்கும் படிக்கும்,     அவனை அவமானப்படுத்தும் படிக்கும் செய்தது. 

கர்த்தருடைய பிள்ளைகளே,     கசப்பை வளரவிடாதிருங்கள். அது உங்களை ஆண்டவரை விட்டுப் பிரித்து விடும்,     உங்களுக்கு வருகிற ஆசீர்வாதங்களைத் தடுத்துவிடும்,     நீங்கள் பரலோகம் செல்லுவதைக் கூட தடைசெய்துவிடும். மற்றவர்கள் உங்கள் மேல் கசப்புடன் காணப்பட்டாலும்,     நீங்கள் ஒருநாளும் அப்படிப்பட்டவர்களாய் காணப்படாதிருங்கள். பழிவாங்குதல் எனக்குரியது என்றும்,     நான் உங்களுக்காக யுத்தம் பண்ணுவேன் என்றும் கூறிய ஆண்டவரிடம் உங்கள் எதிரிகளை விட்டுவிடுங்கள்,     அவர் பார்த்துக் கொள்ளுவார். நீங்கள் ஆண்டவரில் இளைப்பாறி,     மகிழ்ச்சியோடு காணப்படுங்கள். பிசாசு கசப்பை  நம் எண்ணங்களில் விதைக்க முயற்சிப்பான்,     ஆனால் கர்த்தர் தயையுள்ளவரென்பதை ருசித்த நாம்,     சகல துர்க்குணத்தையும்,     சகலவித கபடத்தையும்,     வஞ்சகங்களையும்,     பொறாமைகளையும்,     சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு,      வளரும்படி,     புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல,     திருவ சனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருந்து,     இயேசுவின் அன்பிலும்,     மன்னிப்பிலும் அவருடைய சாயலிலும் வளர கர்த்தர்  உதவிசெய்வார். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *