கிடைத்த மன்னிப்பு ரத்து செய்யப்பட வாய்ப்புண்டு:-

மத் 18:34,35 அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான். நீங்களும் அவனவன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/oqlXVL8y0_s

நமது நாடுகளில் நீதித்துறையில் சில படிநிலைகள் காணப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் District Court இருக்கும், அதற்குமேலாக High Court காணப்படும், அதற்குமேலாக Supreme Court காணப்படும். நீதியரசர்கள் வழங்கிய நீதி மற்றவர்களுக்கு உடன்பாடு இல்லையென்றால், அதை மேல்முறையீடு செய்து, அடுத்த நிலையிலுள்ள நீதிமன்றங்களுக்கு எடுத்து செல்லுவார்கள். High Court மற்றும் Supreme Courtக்கு முன்பு கூறப்பட்ட நீதியை இரத்து செய்ய அதிகாரம் உண்டு. அதுபோலத்தான் நம்முடைய நடவடிக்கைகள் கர்த்தருக்கு பிரியமில்லாமல் இருக்குமென்றால் கொடுக்கப்பட்ட மன்னிப்பு ரத்தாக வாய்ப்புண்டு என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். ஆண்டவர் மன்னிப்பதில் தயை பெருத்திருக்கிறார். அவரிடத்தில் ஏராளமான மன்னிப்புண்டு. அதேவேளையில், கொடுத்த மன்னிப்பிற்கு நாம் பாத்திரவான்களாக செயல்படவில்லையென்றால், ஆண்டவர் கொடுத்த மன்னிப்பை ரத்து செய்வார்.

ஒரு எஜமானிடம் வேலைக்காரன் ஒருவன் 10,000 தாலந்து (Talent) கடன்பட்டிருந்தான். 1 தாலந்து என்பது 36kg எடையாக காணப்படுகிறது. 36kg வெள்ளி என்பது இந்நாட்களில் இந்திய மதிப்பின்படி சுமார் 26 லட்சம் ரூபாய். அப்படியாக 10,000 தாலந்து என்றால் 26 லட்சத்தோடு 10,000ஐ பெருக்கிக்கொள்ளுங்கள். அந்நாட்களில் இந்த பணம் ஒருவன் சுமார் 15 வருடங்களுக்கு மேலாக சம்பாதிக்கும் தினக்கூலிக்கு சமம். இவ்வளவு பெரிய தொகையை வாங்கிய வேலைக்காரனுக்கு எஜமான் எல்லா கடனையும் மன்னித்துவிட்டான். அதேவேளையில் இந்த வேலைக்காரனிடம் 100 வெள்ளிப்பணம் கடன் பெற்ற மற்றொரு வேலைக்காரனை கொடுமையாக நடத்தி அவனை மன்னிக்க மனதில்லாதவனாய் காணப்பட்டான். 100 வெள்ளிப்பணம் என்பது அந்நாட்களில் 100 நாட்களுக்கு சமமான தினக்கூலி. இதை அறிந்த எஜமான் கோபமடைந்து அந்த வேலைக்காரனுக்கு கொடுத்த மன்னிப்பை ரத்து செய்து அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.

எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை மன்னியும் என்று வெறும் வாயினால் மாத்திரம் நாம் ஜெபிக்கலாகாது. உங்களுக்கு விரோதமாக பேசியவர்கள், புறம்கூறியவர்கள், அடித்தவர்கள் எல்லாரையும் மன்னியுங்கள். இயேசு சொன்னார் நீங்கள் மற்றவர்களை ஏழெழுபது முறை மன்னிக்கவேண்டும் என்று. மன்னியுங்கள் உங்களுக்கும் மன்னிக்கப்படும் என்று இயேசு சொன்னார். ஆகையால் யாரிடமும் கசப்போடு வாழவேண்டாம். உற்றார் உறவினர்கள், நண்பர்கள், கூட வேலைசெய்பவர்கள் எல்லாரையும் மன்னியுங்கள். அப்பொழுது கர்த்தர் உங்கள் தப்பிதங்களையும் மன்னிப்பார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *