ஆதியாகமம் 30:27 அப்பொழுது லாபான்: உன் கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால் நீ இரு; உன் நிமித்தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்று குறிப்பினால் அறிந்தேன்.
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/fV5aEO0x6Vk
ஆபிரகாமின் வேண்டுதலினிமித்தம் கர்த்தர் லோத்து அவன் குடும்பத்தை அழிக்காமல் சோதோம் கொமோரா பட்டணங்களை அழித்தார். ஒரு தனி மனிதனுடைய வேண்டுதலினிமித்தம் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். மோசே என்ற தனி மனிதனின் ஜெபத்தினிமித்தம் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை நடத்தி அவர்களுக்கு முன்பாக அவருடைய சமூகம் கடந்து செல்லும்படி செய்தார். அதுபோல யாக்கோபினிமித்தம் கர்த்தர் லாபனை ஆசிர்வதித்தார். லாபான் யாக்கோபின் மாமனார். அவன் யாக்கோபினுடைய சம்பளத்தை பத்து முறை மாற்றி ஏமாற்றியிருந்தும், யாக்கோபினிமித்தம் லாபான் ஆசிர்வதிக்கப்பட்டான். மாத்திரமல்ல, யாக்கோபினிமித்தம் கர்த்தர் தன்னை ஆசீர்வதிக்கிறார் என்பதையும் அறிந்துகொண்டான், அதை ஒப்புக்கொள்ளுகிறவனாகவும் காணப்பட்டான். இந்நாட்களில் சிலர் மற்றவர்கள் மூலமாக கர்த்தர் அவர்களை ஆசீர்வதிக்கிறார் என்பதை ஒப்புக்கொள்ள மனதற்றவர்களாக காணப்படுகிறார்கள். வேலைஸ்தலத்தில் பணிபுரியும் ஒரு தேவபிள்ளையினிமித்தம் கர்த்தர் அந்த தொழிலை ஆசிர்வதித்து வந்தார். அதை கண்ட எஜமான், இதை நாம் எல்லார் முன்னிலையிலும் ஒப்புக்கொண்டால், இவன் எனக்கு மேலாக வந்துவிடுவான் என்று அஞ்சி அதை ஒப்புக்கொள்ளாமல் தன்னுடைய இருதயத்திலே பூட்டிவைத்தான். இப்படிப்பட்ட ஜனங்களும் இந்நாட்களில் காணப்படுகிறார்கள். பின்னாட்களில் அந்த எஜமான் வேலையை விட்டு கடந்து செல்லும்போது தான், குறிப்பிட்ட தேவபிள்ளையின் நிமித்தம் அவன் வணங்கும் ஆண்டவர் என்னையும் என்னுடைய பணியையும் ஆசிர்வதித்தார் என்று சொன்னார். கர்த்தர் உங்கள் மூலமாக மற்றவர்களை ஆசிர்வதிக்கும்போது, அதை அவர்கள் அறிந்து ஒப்புக்கொள்ளும்படியாகவும் கர்த்தர் செய்வார். யாக்கோபை காட்டிலும் லாபான் மூத்தவன்; இருந்தாலும் அவன் சொல்லுகிறான் கர்த்தர் யாக்கோபினிமித்தம் என்னை ஆசிர்வதித்தார் என்று. உங்களை காட்டிலும் மற்றவர்கள் வயதில் மூத்தவர்களாக இருந்தாலும் அவர்கள் வாயிலிருந்து உங்கள் மூலம் கர்த்தர் அவர்களை ஆசிர்வதித்தார் என்று சொல்லுவதை நீங்கள் கேட்பீர்கள்.
யோசேப்பின் நிமித்தம் கர்த்தர் பார்வோனையும் எகிப்தையும் ஆசிர்வதித்தார். அதுபோல உங்கள் நிமித்தம் கர்த்தர் மற்றவர்களை ஆசீர்வதிப்பார் என்றால் அது எவ்வளவு பெரிய பாக்கியமாய் காணப்படுகிறது. பார்வோன் தேசத்தின் அதிபதி, அவன் ஒரு நாட்டிற்கே இராஜாவாக இருந்தாலும் அடிமையாக விற்கப்பட்ட யோசேப்பினிமித்தம் தானும் தன்னுடைய குடிகளும் வருகிற பஞ்சத்திற்கு தப்புவிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து யோசேப்பை உயர்த்திவைத்தான். அதுபோல தான் தேசத்தின் அதிகாரிகளுக்கு நீங்கள் ஆசிர்வாதத்தை வாய்க்காலாக இருப்பீர்கள். தொய்ந்துபோனவர்களுடைய வாழ்க்கையில் நீங்கள் மற்றவர்களுக்கு ஆறுதலாக இருப்பீர்கள். நீங்கள் கிருபையுள்ள வார்த்தைகளை பேசும்படி உங்கள் வார்த்தையில் அபிஷேகம் இருக்கும்படி கர்த்தர் செய்வார். வேலை இல்லாதவர்களுக்கு வேலை ஆயத்தம் பண்ணும்படியாகவும், சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடத்தில் சுவிசேஷம் அறிவிக்கும்படியாகவும், குடி விபச்சாரம் போன்ற பாவத்தில் சிக்கி தவிக்கும் வாலிப பிள்ளைகளுக்கு நல்ல ஆலோசனையை வழங்கவும், உத்தம விதைவைகளை விசாரிக்கும்படியாகவும், கடினமான பாதையில் செல்பவர்களுக்காக திறப்பிலே நின்று ஜெபிக்கிறவர்களாகவும் நீங்கள் இருப்பீர்கள். கர்த்தர் சீயோனிலிருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார், அதோடு, உங்கள் மூலம் கர்த்தர் மற்றவர்களையும் ஆசீர்வதிப்பார். ஆசிர்வாதத்தின் வாய்க்காலாக நீங்கள் இருப்பீர்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org