காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள் (Redeem the Time).

நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள் (எபே. 5:16).

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/xA6e2Rsn68E

ஒரு நாளில் காணப்படுகிற இருபத்து நான்கு மணி நேரத்தில் உள்ள  ஆயிரத்து நானூற்று நாற்பது நிமிடங்களில்,       ஒரு நிமிடத்தை வீணடித்தாலும் அது திரும்பி வருவதில்லை. ஆகையால் கர்த்தருடைய ஜனங்கள் காலத்தை  பிரயோஜனப்படுத்துகிறவர்களாய்  காணப்படுங்கள். உலகத்தில் காணப்படுகிற ஜனங்கள் “நேரம் தான் பணம்” என்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பிசாசு அவனுக்குக் கொஞ்சக் காலம்தான் உண்டு என்று அறிந்து நேரத்தை உபயோகப்படுத்தி ஜனங்களுக்குள் பாவத்தை விதைத்து பாதாளத்திற்கு நேராய் நடத்துகிறான். நாம் நமக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தை உபயோகப் படுத்துகிறவர்களாய் காணப்படுகிறோமா? தேவன்,       எல்லாவற்றிற்கும் ஒரு காலத்தை வைத்திருக்கிறார்.  அதினதின் காரியங்களை,        அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்கிறவர் அவர்.   கானாவூர் கலியாண வீட்டில் அவருடைய வேளை வந்த உடன் தண்ணீரை ரசமாக மாற்றினார். அதுபோல அவருடைய வேளையில் உங்கள் வாழ்க்கையில் அற்புதங்களைச் செய்து உங்களை மகிழப்பண்ணுவார். 

இயேசு,       எருசலேமின் பட்டணத்தின் குடிகளுக்கு ஒரு சந்திக்கும் காலத்தை வைத்திருந்தார்,       அவர்கள் அதை அசட்டைச் செய்ததின் நிமித்தம்,       அவாக்களுக்காகக் கண்ணீர் விட்டு அழுதார். அதுபோல நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கு ஒரு நாளை கர்த்தர் வைத்திருக்கிறார்,       அந்த நாள் இந்த நாளாய் காணப்படுகிறது. இதுவே அனுக்கிரகக் காலம்,       இன்றே இரட்சண்ய நாள் என்று கர்த்தர் கூறினார். ஆகையால்  இரட்சிக்கப்படுவதற்குக் காலதாமதம் செய்து விடாதிருங்கள். எரிகோவின் வீதிகளில் இயேசு வருகிறார் என்பதை அறிந்த குருடன்,       அந்த வேளையைத் தவறவிட்டால்,       பார்வை அடைவதற்கு வேறு ஒரு தருணம் கிடைப்பதில்லை என்பதை உணர்ந்து,       தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான்,       பார்வையையும் பெற்றான். நாம் கர்த்தரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கும்  ஒரு காலத்தை வைத்திருக்கிறார்,       அவரை கண்டடையத் தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள் என்று வேதம் கூறுகிறது,       அப்படி அவரை நீங்கள் தேடினால்,       அவர் நிச்சயமாய் உங்களுக்கு வெளிப்படுவார். ஆனால் தேவனைத் தேடுவதற்கு உணர்வுள்ளவன் உண்டோ என்று கர்த்தருடைய கண்கள் உங்களை நோக்கிப் பார்க்கிறது.

கர்த்தர் கிருபையாய் கொடுத்த இந்த நாட்களை நாம் சரியாய் பயன்படுத்தினால் இளைப்பாறுகிற ஒருக் காலத்தையும் கர்த்தர் நமக்காய் வைத்திருக்கிறார் (எபி. 4:9). அதுபோல,       தீர்க்கதரிசிகளாகிய அவருடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் அவருடைய நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும் ஒரு காலத்தைக் கர்த்தர் வைத்திருக்கிறார்(வெளி.11:18) என்று வேதம் கூறுகிறது. கர்த்தருடைய பிள்ளைகளே,       கர்த்தர் நம்மைச் சந்திக்கும் காலத்தில் சந்திக்கப்பட்டு,        இரட்சண்யக் காலத்தில் இரட்சிக்பட்டு,       அவரைத் தேடுகிற காலத்தில் அவரைத் தேடி,       அறுப்பின் காலத்தில் ஆத்தும அறுவடைச் செய்தால்,       அவர் உங்களுக்குப் பலனளிக்கிற காலத்தில் நேர்த்தியாய் பலனளித்து,       இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கிற காலத்தில் மகிமையில் சேர்த்து,       உங்களைக் கனப்படுத்தி,       உயத்தி ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *