கொலோ 1:13. இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/lEw2H11za2M
சாத்தான் நாம் வாழ்கிற பூமியை ஆக்கிரமித்து இருளின் இராஜ்யத்தை ஸ்தாபிக்க தொடர்ந்து முயற்சிக்கிறான். சாத்தான் உலகமனைத்தையும் மோசம் போக்குகிற பிசாசு என்று வசனம் சொல்லுகிறது. மாத்திரமல்ல நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம் என்றும் 1 யோவான் 5:19ல் வாசிக்கிறோம்.
சத்துரு தன்னுடைய இருளின் இராஜ்யத்தை தீரு, பெர்சிய போன்ற தேசங்களில் ஸ்தாபித்ததுபோல, இன்று நம்முடைய தேசங்களின் மீது தன்னுடைய இராஜ்யத்தை ஸ்தாபிக்க எத்தனிக்கிறதை நாம் காணமுடிகிறது. உலகத்தில் பல தேசங்கள் சத்துருவின் மாய வலைக்குள் சிக்கி தவிக்கிறதை தேவ ஜனங்கள் அறிந்து அதற்காக ஜெபிக்கிறவர்களாக காணப்பட வேண்டும்.
இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத் தானே விரோதமாய் பிரிந்திருக்கிற எந்த பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது (மத் 12:25) என்ற வசனத்தின்படி குறிப்பிட்ட பட்டணங்களிலும், வீடுகளிலும் இருளின் இராஜ்யத்தை ஸ்தாபிக்கிறான். தேசங்களில் குறிப்பிட்ட வகுப்பை சேர்ந்த ஜனங்களின் மீது இருளின் இராஜ்யத்தை ஸ்தாபிக்கிறான். இரண்டாயிரம் வருடங்களாக நமது தேசங்களில் சுவிசேஷம் அறிவித்து வந்தாலும், ஜனங்கள் இன்னும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு காரணம், அது சத்துருவின் இராஜ்யம் அவர்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது என்பதை தேவ ஜனங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
தேவபிள்ளைகளின் குடும்ப வாழ்க்கையிலும் சமாதானத்தை குலைக்க பல பொய்யான ஆவிகள், சந்தேக ஆவிகளை செயல்பட வைக்கிறான். அதுபோல சில சபைக்குள்ளும் ஒற்றுமையை சீர்குலைக்க, மேட்டிமைகளை, கள்ள உபதேசங்களை விதைக்கிறவனாக காணப்படுகிறான். கள்ள அப்போஸ்தலர்களை, கள்ள ஊழியர்களை, இப்படித்தான் ஆண்டவரை தொழுதுகொள்ள வேண்டும் என்பதற்கு பதிலாக எப்படியும் அவரை தொழுதுகொள்ளலாம் என்ற மனப்பான்மையையும் அவன் விதைக்கிறான்.
இப்படி இருளில் வாழும் ஜனங்களை மீட்டெடுப்பதற்காகவே இயேசு வெளிப்பட்டார். இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்றும்; அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை என்றும் வசனம் கூறுகிறது. நாம் வாழ்கிற தேசம், பட்டணம், எல்லா வகுப்பை சேர்ந்தவர்களும் மெய்யானை ஒளியான இயேசுவை அறிந்துகொள்ள ஜெபத்தை ஏறெடுங்கள். சில சந்தர்ப்பங்களில் நம்முடைய தேசங்களுக்காக, ஜனங்களுக்காக சில நாட்கள் ஜெபிப்போம், பின்பு, அதை தொடராமல் தங்களுக்கே ஜெபத்தை ஏறெடுக்கிறவர்களாய் மாறிவிடுவோம். அப்படியாக இல்லாமல், இன்னும் பாரத்தோடு, இருளின் இராஜ்யம் கட்டப்பட, பரிசுத்த ஆவியானவருடைய பெலத்தோடும் வல்லமையோடும் ஜெபத்தை கூட்டுங்கள். அப்பொழுது நம்முடைய ஜனங்கள் இருளின் இராஜ்யத்திலிருந்து விடுதலை அடைவார்கள். அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுவார்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org