எஸ்றா 1:2. பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Sf4n2PdbbjU
முதலாவது ஆண்டவர் சொன்னது கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஆலயத்தை கட்டும்படி ஏவினார்(1:1). அதுபோல எவர்கள் ஆவியை தேவன் ஏவினாரோ அவர்கள் எல்லாரும் ஆலயத்தை கட்ட எழும்பினார்கள்(1:5). கர்த்தருடைய ஆலயத்தை கட்டுவது என்பது முதலாவது கர்த்தரே நம்முடைய உள்ளங்களில் ஏவுகிறார். தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் நமக்குள் உண்டாக்குகிறவராய் இருக்கிறார்(பிலி 2:13).
முதலாவது, ஏன் ஆண்டவர் கோரேசின் ஆவியை ஏவினார்? அவன் கர்த்தரை பற்றி அறியாத புறஜாதியான். அப்படியிருக்க ஏன், எப்படி, எதற்காக ஆண்டவர் கோரேசின் ஆவியை ஏவினார்? இதற்கான பதிலை நாம் ஏசா 44:28-45:6 வரை வாசிக்கும் போது நாம் அறிந்துகொள்ளலாம். சுமார் கோரேசு பிறப்பதற்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாக ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக ஆண்டவர் அவன் மூலம் தன்னுடைய ஆலயத்தை கட்டும்படி தெரிந்துகொண்டார். கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது: நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன். உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு, வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும், உனக்கு நாமம் தரித்தேன் என்று கர்த்தர் சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே சொல்லிவிட்டார்.
நாம் ஆராதிக்கிற தேவன் எவ்வளவு மகத்துவமுள்ளவர். தாயின் கருவில் உருவாகுமுன்னே நம்மை தெரிந்தெடுக்கிறவர், கோரேசு பிறப்பதற்கு பத்து மாதங்களுக்கு முன்பாக அவனை தெரிந்துகொள்ளவில்லை. மாறாக, இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே அவன் தன் ஆலயத்தை கட்டும்படி தெரிந்துகொண்டார். இன்றும் கர்த்தருடைய ஆலயத்தை கட்டுப்படியான வாஞ்சையை யார் யார் உள்ளத்தில் தேவன் ஏவுகிறாரோ அவர்களெல்லாம் அவர்கள் பிறப்பதற்கு முன்பாகவே கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்.
கோரேசின் காலத்தில் தானியேல் தீர்க்கதரிசியும் வாழ்ந்துகொண்டிருந்தான். ஒருவேளை, ஏசாயா மூலம் அவனைக்குறித்து முன்னறிவிக்கப்பட்ட கர்த்தருடைய தீர்க்கதரிசன வார்த்தையை கோரேசிற்கு தானியேல் எடுத்துக்கூறியிருக்கலாம். கர்த்தர் தம்மை குறித்து இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாக சொன்ன தீர்க்கதரிசன வார்த்தையினிமித்தம், கோரேசின் உள்ளம் உற்ச்சாகம் அடைந்திருக்கும், அவன் உள்ளம் ஆலயத்தை கட்டும்படி கொழுந்துவிட்டு எறிந்திருக்கக்கூடும். கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் ஒவ்வொருவருவருக்கும் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், கர்த்தருடைய ஆலயத்தை கட்டுப்படியான உற்சாகமும், விருப்பமும் உங்கள் உள்ளத்தில் வருகிறதா? அப்படியென்றால் கோரேசை இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாக தெரிந்துகொண்டவர், உங்களையும் நீங்கள் பிறப்பதற்கு முன்பாகவே தெரிந்துகொண்டார். ஆகையால் உற்சாகத்துடன் கர்த்தருடைய காரியத்தை நடப்பியுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org