கலப்புள்ள சாராயம் (Mixed Wine).

நீதி 23:29, 30. ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்? மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/SNbJJ6OR6WE

கலப்புள்ள சாராயம் (Mixed Wine) இல்லையென்றால் கள்ளசாராயத்தை நாடி தேடுகிறவர்களுக்கு வருகிற நிந்தைகள் என்ன என்பதை மேற்குறிப்பிட்ட வசனங்களில் இருக்கிற ஆறு கேள்விகளில் தெரிகிறது. சாராயத்தை நாடி தேடுகிறவர்களின் எண்ணிக்கை தேசங்களில் பெருகிவிட்டது. சிறியோர் முதல் பெரியோர் வரை சாராயத்தை நாடுகிறவர்கள் அநேகம். பள்ளிகள் துவக்கி, கல்லூரி வேலைஸ்தலங்களிலும் சாராயத்திற்கு அடிபணிந்தோரின் எண்ணிக்கை கடற்கரை மணலை போல இந்நாட்களில் காணப்படுகிறது. பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. சாராயத்தின் மூலம் பணத்தை சம்பாரிக்க நினைக்கிற அரசியல்வாதிகள், எப்பொழுதும் குடித்துக்கொண்டே இருக்கிற ஜனங்கள் என்று தேசமே சாபத்தீடாக இருக்கிறதை நாம் பார்க்கமுடிகிறது.

சாராயம் இருக்கிற பாத்திரம் பளபளப்பாய் தோன்றும், ஆனால் அதின் முடிவோ வேதனை. இளமை பருவத்தில் சாராயத்தை குடிக்கும்போது ஒன்றும் நேரிடுவதில்லை; ஆனால் காலப்போக்கில் அது கொடுக்கும் வேதனை பாம்பு கடிப்பதற்கு சமமாய் காணப்படும். சாராயத்தினால் சாகிறவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் கூடுகிறது. அதன்மூலம் பாதிக்கப்படுகிற குடும்பங்கள் ஏராளம் ஏராளம். சாராயத்தை குடித்து வாகனம் ஓட்டும்போது வருகிற மரணங்கள், அதன்மூலம் நுரையீரல், இருதயம் போன்றவை பாதிக்கப்படுவது, மிக சீக்கிரத்தில் சந்திக்கிற மரணங்கள் எல்லாம் நம் கண் முன்பாக பார்க்கமுடிகிறது. சாராயம் முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

இந்திய தேசத்தில் மாத்திரம் ஒரு நாளைக்கு 25,000க்கும் அதிகமானோர் சாராயத்தினால் மரணத்தை சந்திக்கிறார்கள் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. அவைகளல்லாமல், சாராயத்தினால் வருகிற வறுமை, பற்றாக்குறை, சந்தேகம், கற்பழிப்பு, சாபம், சண்டைகள், விபத்துகள் என்று அநேக காரியங்கள் தேசங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இவைகளையெல்லாம் அறிந்து தேசங்களில் சாராயம் முற்றிலும் அழிக்கப்பட தேவஜனங்கள் ஜெபிக்க வேண்டும். வேல்ஸ் தேசத்தில் எழுப்புதல் நடந்தபோது அங்குள்ள பட்டணங்களிலுள்ள மதுபான கடைகள் மூடப்பட்டன. சில பட்டணங்களில் சினிமா திரையரங்குகளும் மூடப்பட்டன. அப்படி எழுப்புதல் நம்முடைய தேசங்களில் ஊற்றப்படும்போது மதுபான கடைகளும் சினிமா திரையரங்குகளுக்கு மூடப்படும் நாட்களை நினைக்கும்போது உள்ளத்தில் பெரிய மகிழ்ச்சி வருகிறது. அங்கே கடந்து செல்கிற ஜனங்கள் எல்லாரும் சபையை நோக்கி ஓடிவருவார்கள். அப்படிப்பட்ட நாட்களுக்காக ஜெபிப்போம். நம்முடைய தேசங்களில் கள்ளச்சாராயங்கள் முற்றிலும் ஒழிக்கப்பட ஜெபிப்போம். சாபகட்டுகளில் இருக்கும் நமது தேசங்களை மீட்டெடுப்போம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *