எல்லாவற்றிலும் முதல்வர் (Head among all)

கொலோ 1:18. அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/WRzCr4NskGM

இந்த உலகத்தில் தொழிலில், அரசியலில், வேலையில், ஊழியர்களில் அநேக முதல்வர்கள் காணப்படலாம். ஆனால் நம்மெல்லாருக்கும் தலைசிறந்த முதல்வர் இயேசுகிறிஸ்து மாத்திரமே. அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது, அவரை நாம் எல்லாக்காரியங்களிலும் முதல்வராய் வைத்திருக்க வேண்டும் என்பதே. தகப்பனையும் தாயையும் கனம் பண்ண வேண்டும், உயர் அதிகாரிகளை, பெரியோர்களை மதிக்கவேண்டும். ஆனால் அவர்கள் யாரும் இயேசுவின் இடத்தை உங்கள் உள்ளத்தில் பிடிக்க அனுமதிக்க கூடாது.

இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் எடுக்க, பெற்றோர்கள் என்ன சொல்வார்களோ என்று கேட்கிற அநேகர் உண்டு. ஆவிக்குரிய காரியங்களில் ஒவ்வொருவரும் தனித்தனியே தேவனுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். இயேசு இறுதிவரை பெற்றோரை கனப்படுத்தினார். இதேவேளையில், அவர் பிதாவுக்கு அடுத்த காரியங்களில் ஈடுபட்டபோது, நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா என்றார் (லுக் 2:49). இப்படிப்பட்ட காரியங்களில் சரியான தீர்மானம் எடுத்து இயேசுவை உங்கள் வாழ்க்கையில் முதல்வராக வைத்துக்கொள்ளுங்கள்.

இயேசுவை ஏற்றுக்கொள்ளாத பெற்றோர்கள், திருமணமாகாத கர்த்தரை ஏற்றுக்கொண்ட தம்பதிக்கு துனையை தேடும்போது, அவர்கள் அவிசுவாசியான நபரை தான் தேடுவார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தேவபிள்ளைகள் சரியான தீர்மான எடுக்க வேண்டும். விசுவாசி அவிசுவாசியிடம் பிணைக்கப்படலாகாது என்பது கர்த்தருடைய வார்த்தை. இவற்றிலும் பெற்றோர்கள் சொல்லுவதை காட்டிலும் இயேசுவை முதன்மையாக வைத்துக்கொள்ளுங்கள்.

ஆண்டவருக்கும் உங்களுக்கும் நடுவில் விரிசல்கள் வரும்படியாக உங்கள் நெருங்கிய நண்பர்கள் செயல்படுவார்களென்றால், அந்த நட்பை உடனே துண்டித்துக்கொள்ளுங்கள். உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையை பாதிப்பதாக இருக்கும் எந்த நபராக இருந்தாலும் அந்த நட்பை அறுத்தெறிய சிறிதேனும் காலம் தாழ்த்தக்கூடாது. எல்லாவற்றிலும் இயேசுவே முதல்வராக இருக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கும் ஆண்டவருக்கு இடைவெளியை கொண்டுவருகிறவர்கள், உங்கள் கண்களை போலவும், உங்கள் கையை போலவும் மிகவும் முக்கியமானதாக இருந்தாலும், அதனிடம் இரக்கம் காட்டி, கர்த்தருக்கு கொடுக்க வேண்டிய முதலிடத்தை கொடுக்க அலட்சியம் காட்டாதிருங்கள்.

அதுபோல உங்கள் குடும்பம், பிள்ளைகள், வேலை, முக்கியமாக இந்நாட்களில் தொலைபேசி போன்ற எந்த காரியங்களும் உங்களுக்கு முதல்வராக இருக்க வேண்டாம். உங்கள் பதவி, உங்கள் செல்வம், உங்கள் படிப்பு உங்களுக்கு முதல்வராக இருக்க வேண்டாம். எல்லாக்காரியங்களிலும் இயேசுவே உங்கள் முதல்வராக இருக்க அனுமதியுங்கள். அப்பொழுது அவர் உங்களை ஆண்டு வழிநடத்துவார். நீங்கள் இடறிப்போவதில்லை.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *