இயேசுவை அறிவித்த பில்லி கிரஹாம் (Billy Graham who preached Jesus)

1 கொரி 2:2 இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/B-jEnY_ZXKw

பில்லி கிரஹாம் என்ற தேவ மனிதர் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை குறித்து சொல்லுவதே தன்னுடைய பிரசங்கத்தின் மையமாக கொண்டார். ஒருவர் ஒருமுறை பில்லி கிரஹாமிடம் கேட்டார், கிரஹாம் அவர்களே, வேறெவரையும்விட இவ்வளவு அதிகமாய் தேவன் உங்களை பயன்படுத்தவதேன்? என்பதாக. அதற்கு பில்லி கிரஹாம் சொன்னார், தேவனை நான் பரலோகில் சந்திக்கும்போது நான் கேட்கும் முதல் கேள்வி இதுவாகத்தான் இருக்கும். என்னை பொறுத்தவரை, நான் நிற்பது தேவ கிருபை என்றே சொல்லுவேன் என்பதாக சொன்னார். இன்னொருவர் அவரிடம் கேட்டார் நீங்கள் அமெரிக்கராயிரத்திருந்தால், இவ்வளவு பிரபலமாயிருப்பீர்களா என்பதாக. அதற்கும் கிரஹாம் சொன்னார் நான் நிற்பது தேவ கிருபை என்று. இப்படியாக தேவனுடைய கிருபையை சார்ந்து வாழ்ந்த மிகப்பெரிய சுவிசேஷகர் தான் பில்லி கிரஹாம்.

பில்லி கிரஹாம் பிரசங்க பலிபீடத்தில் அடிக்கடி சொன்ன வார்த்தை Bible Says அதாவது வேதம் சொல்லுவதாவது என்று வசனத்தை அதிகமாக முக்கியப்படுத்தினார். அவர் பிரசங்கிக்கும் மேடையில் எப்பொழுதும் தொங்கவிடப்பட்டிருக்கும் வார்த்தை, நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்ற வசனம் தான். அவர் ஆப்பிரிக்காவில் வாழும் வனவாசிகளுக்கும், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கும் ஒரே செய்தியை தான் முக்கியப்படுத்துவார். அது சிலுவையிலறையப்பட்ட இயேசுகிறிஸ்து. அமெரிக்க முன்னால் அதிபர் ஜார்ஜ் புஷ், பில்லி கிரஹாமை பற்றி சொல்லும்போது கிறிஸ்துமீதுள்ள அவரது அன்பும் மென்மையான அவரது மனப்பான்மையும் திருவார்த்தைக்கு மக்களது இதயங்களை திறந்துவிடுகிறது , அதில் நானும் ஒருவன் என்பதாக சொன்னார். அமெரிக்காவில் மிகவும் விரும்பப்படுபவர் பட்டியலில் எலிசபெத் ராணி 49 தடவையும், பில்லி கிரஹாம் 61 தடவையும் இடம்பிடித்தார்கள். அமெரிக்க அதிபராவதற்கு போட்டியிடுங்கள், நீங்கள் போட்டியிட்டால் எவரும் உங்களை எதிர்த்து போட்டியிடமாட்டார்கள் என்று கிரஹாமின் நல்ல நண்பன் ஒரு ஆலோசனையை வழங்கினார். அப்பொழுது பில்லி கிரஹாம் சொன்னார், நான் பெரிய வேலையை செய்கிறேன்; நான் இறங்கி வரக்கூடாது என்பதாக.

அமெரிக்காவில் 13 அதிபர்களுடன் நெருங்கி பழகினார். அவர் அதிபர்களுக்கு ஆயர் என்று அழைக்கப்பட்டார். நாட்டின் உயர்மட்டத்திலிருப்பவர்கள் அவரின் ஆலோசனைக்காகவும், ஜெபத்திற்காகவும் அவரை நாடுவார்கள். ஆனால் ஒருமுறை கூட அவர்களது உதவிக்காக பில்லி கிரஹாம் அவர்களை நாடவில்லை.

பில்லி கிரஹாம் 400க்கும் மேற்பட்ட பெருங்கூட்டத்தில் சுமார் 21 கோடி ஜனங்களுக்கு சிலுவையிலறையப்பட்ட இயேசுவை சுவிசேஷமாக சொல்லி இருக்கிறார். அவர் கூட்டம் நடைபெற்ற நாட்கள் கழித்து உள்ளூர் சபைகளில் எழுப்புதல் தீ பற்றி எரித்துவிடும்.பில்லி கிரஹாம் சொன்னார், இந்த உலகமே எனக்கு விளைநிலம் என்பதாக. உமது இராஜ்யம் வருவதாக என்பதே தன் வாழ்நாளில் அதிகமாக பயன்படுத்திய அவருடைய ஜெபமாக இருந்தது. 1918 வது வருடம் பிறந்த பில்லி கிரஹாம், 2018 பிப்ரவரி 21 அதிகாலையில் ஒரு சத்தத்தை கேட்டார். பில்லி கிரஹாமே, நல்லது, உத்தமமும் உண்மையான ஊழியக்காரனே, உனது எஜமானின் சந்தோசத்திற்குள் பிரவேசி என்ற வார்த்தைகளுடன் தேவ இராஜ்யத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். ஒருவேளை பில்லி கிரஹாமை வரவேற்க இயேசுவே எழுந்து நின்றிருக்க கூடும். இப்படிப்பட்ட தேவ மனிதனை கர்த்தர் எழுப்பியதுபோல உங்களையும் அவருடைய இராஜ்ஜியத்திற்கென்று பயன்படுத்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *