எருசலேமிலிருந்து எம்மாவு (Jerusalem to Emmaus).

லுக் 24:13. அன்றையத்தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டு மைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/zCB0MQhUCgk

எருசலேம் என்றால் வாக்குத்தத்தத்தை சுதந்தரிக்கும் இடம். எம்மாவு என்றால் அருவருப்பு என்று அர்த்தம். தேவனுடைய சபையில் நாட்டப்பட்டு, ஐக்கியப்பட்டிருக்கும்போது நாம் வாக்குத்தத்தத்தை சுதந்தரிப்போம். நீங்கள் எருசலேமில் தரித்திருந்து நான் வாக்குத்தத்தம் பண்ணின ஆவியானவரை பெற்றுக்கொள்ள காத்திருங்கள் என்று இயேசு தன் சீஷர்களுக்கு சொல்லியிருந்தார். ஆனால் இரண்டு பேர் வாக்குத்தத்தத்தை வெகு சீக்கிரத்தில் மறந்து எருசலேமிலிருந்து அருவருப்பிற்கு நேராக கடந்து சென்றார்கள்.

ஆண்டவர் எத்தனையோ வாக்குத்தத்தங்களை நம் வாழ்வில் கொடுத்திருக்கிறார். ஆண்டவரிடம் இருந்து காத்திருந்து, புதுவருடத்திற்கு வாக்குத்தத்தத்தை பெற்றுக்கொள்ளுகிறோம், பிறந்தநாளுக்கு வாக்குத்தத்தத்தை பெற்றுக்கொள்ளுகிறோம், திருமண நாளுக்கு வாக்குத்தத்தத்தை பெற்றுக்கொள்ளுகிறோம், பிள்ளைகளுடைய எதிர்காலங்களுக்கு வாக்குத்தத்தத்தை பெற்றுக்கொள்ளுகிறோம், வீட்டில் வாக்குத்தத்தம் நிறைந்த வசனங்களை சுவரில் மாட்டிக்கொள்ளுகிறோம், ஆனால் எதாவது ஒரு சிறு பிரச்சனை வந்தவுடன் ஆண்டவர் கொடுத்த வாக்குத்தங்கள் எல்லாம் மறந்து, சூழ்நிலைகள் மேல் கவனத்தை செலுத்துகிறவர்களாய் மாறிவிடுகிறோம். எருசலேமை மறந்து எம்மாவை நோக்கி பயணம் செய்கிறவர்களாய் மாறிவிடுகிறோம்.

எம்மாவுக்கு நேராக பயணம் செய்தவர்கள் துக்க முகமுடையவர்களாய் நடந்து சென்றார்கள். ஏன் சீஷர்களின் முகம் துக்கமடைந்ததாய் காணப்பட்டது? ஏன் அவர்கள் முகத்தில் சந்தோசம் இல்லை? இரட்சிப்பின் சந்தோசத்தை தொலைத்தவர்களை போல ஏன் காணப்பட்டார்கள்? காரணம், எருசலேமை விட்டு வெளியே போனதது தான் காரணம். இதுபோல தான் இன்றைக்கு அநேக விசுவாசிகள் நல்ல ஆவிக்குரிய சபைக்கு வந்து, ஏதோவொரு நொண்டி சாக்குப்போக்கை சொல்லி, சபைக்கு வெளியே கடந்து செல்லுகிறார்கள். இப்படிப்பட்ட ஜனங்கள் வாக்குத்தத்தை தொலைத்து அருவருப்பிற்கு நேராக கடந்துசெல்லுகிறார்கள் என்பதை தேவ ஜனங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

எருசலேமில் மேல்வீட்டறையில் 120 பேர் வாக்குத்தத்தம் பண்ணின ஆவியானவரை பெற்றுக்கொள்ள காத்திருந்தாலும், இயேசு பின்மாற்றத்தில் சென்ற இந்த இரண்டு பேரை சந்திக்க வந்தார். நம்முடைய ஆண்டவர் காணாமற் போன ஒரு ஆட்டை தேடி பல மயில்கள் தூரம் கடந்து செல்லுகிறவர். இப்படி வாக்குத்தத்தை தொலைத்தது போல, எம்மாவு என்னும் அருவருப்பான சூழ்நிலையில் நீங்கள் ஒருவேளை இருப்பீர்கள் என்றால், இயேசு உங்களை இன்று சந்திக்கிறார். மீண்டும் எருசலேமுக்கு வந்துவிடுங்கள். மீண்டும் சபைக்கு வந்துவிடுங்கள். இழந்து போன வாக்குத்தத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *