கண்களின் இச்சை (Lust of the eyes)

பிர 2:10. என் கண்கள் இச்சித்தவைகளில் ஒன்றையும் நான் அவைகளுக்குத் தடைபண்ணவில்லை; என் இருதயத்துக்கு ஒரு சந்தோஷத்தையும் நான் வேண்டாமென்று விலக்கவில்லை; நான் செய்த முயற்சிகளிலெல்லாம் என் மனம் மகிழ்ச்சிகொண்டிருந்தது, இதுவே என் பிரயாசங்கள் எல்லாவற்றினாலும் எனக்கு வந்த பலன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/AWIE2ojRzY4

இந்த உலகத்தில் வாழும் தேவ ஜனங்களாகிய நாம் மேற்கொள்ள வேண்டிய அதிமுக்கியமான மூன்று இச்சைகளில் ,இரண்டாவது கண்களின் இச்சையாய் காணப்படுகிறது (1 யோவா 2:16). சாலொமோன், காண்கிற அனைத்தையும் கண்களால் இச்சித்தான், கடைசியில் அவன் வீழ்ந்துபோனான். தாவீது ஸ்நானம் பண்ணுகிற ஸ்திரீயை கண்டான், பாவத்தில் வீழ்ந்தான்(1 சாமு 11:2). சிம்சோன் பெலிஸ்தியர்களில் ஒரு குமாரத்தியை கண்டான். அவள் தான் வேண்டும் என்றும் அடம்பிடித்தான். கடைசியில் அவன் கண்கள் பிடுங்கப்பட்டவனாக மாறிவிட்டான். இப்படி பற்பல இச்சைகளால் சிக்குண்டு அலைகிறவர்களாய் நாம் காணப்படலாகாது.

கடையில் பார்க்கிற எல்லா பொருள்களையும் வாங்கவேண்டும் என்றும், மற்றவர்கள் வைத்திருக்கிற பொருளை, தானும் வாங்க வேண்டும் என்று நினைப்பதும் கண்களின் இச்சையாய் காணப்படுகிறது. நாம் எப்பொழுதும், ‘விரும்புகிற’ அனைத்தையும் வாங்க வேண்டும் என்று இல்லாமல், ‘வேண்டியவைகள்’ மாத்திரம் தான் வாங்க வேண்டும் என்ற மன நிலையில் இருக்க வேண்டும். போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம். ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள் (1 தீமோ 6:9). கண்கள் சரீரத்தின் விளக்கு. இந்த கண்கள் கறைபட்டால், சரீரம் முழுவதும் கறைபட்டுவிடும். ஒரு வீட்டிற்குள் நுழையும்போது, முதலாவது வாசற்படிகள் இருப்பதுபோல, நம்முடைய சரீரத்திற்கு வாசல், கண்களாய் காணப்படுகிறது. நாம் காண்கிற தீயதான, பாவமான காரியங்கள், முதலாவது கண்கள் வழியாக போகிறது, பின்பு நமது மனது அறிவு உணர்ச்சிகளை பாதிக்கிறது.

ராஜாதி ராஜாவாகிய இயேசுவை மகிமை பொருந்தியவராகிய பார்க்க வேண்டிய நம்முடைய கண்கள், பிறனுடையதை பார்த்து இச்சிக்கலாமா ? நாம் பாவம் நிறைந்த உலகில் இருப்பதால், முதலாவது பார்வையில் இச்சிக்க கூடிய காரியங்கள் நம்முடைய கண்களில் தென்பட்டால், உடனே கண்களை அதிலிருந்து விலக்கிவிடுங்கள், இல்லையென்றால் கண்களை மூடிவிடுங்கள். இரண்டாவது பார்வை அங்கே செல்லுமென்றால், அது கண்களின் இச்சையை கொண்டு வரும், அது பாவத்தை பிறப்பிக்கும், அந்த பாவம் மரணத்தை பிறப்பிக்கும். கண்களோடு உடன்படிக்கை செய்தவர்களாக நாம் காணப்படுவோம், அப்பொழுது நம்முடைய சரீரம் முழுவதும் வெளிச்சமாய் இருக்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *