இது என்ன? What is it?

இஸ்ரவேல் புத்திரர் அதைக் கண்டு,      அது இன்னது என்று அறியாதிருந்து,      ஒருவரை ஒருவர் பார்த்து,      இது என்ன என்றார்கள், அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: இது கர்த்தர் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பம் என்றான் (யாத்.16:15).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/vYnhQUwBV2E

மன்னா என்ற எபிரேய வார்த்தைக்கு “இது என்ன” என்பது அர்த்தம். அதின் இரசாயன கலவை என்ன என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அது கொத்துமல்லி அளவாயும் வெண்மைநிறமாயும் இருந்தது,      அதின் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஓப்பாயிருந்தது என்று வேதம் கூறுகிறது. சங். 78:24,     25ல் மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாக வருஷிக்கப்பண்ணி,      வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.  தூதர்களின் அப்பத்தை மனுஷன் சாப்பிட்டான்,       அவர்களுக்கு அது பூரணமான ஆகாரமாயிருந்தது. இந்த பூமியில் புசிக்கிற எந்த ஆகாரமும் பூரணமானதல்ல. பல அளவு விகிதங்களில் எல்லாவித சத்துப் பொருளும் அடங்கிய உணவைக்  கணக்குப் பார்த்துப் புசிக்கிறவர்களும் பலவிதமான வியாதிகளினால் வாதிக்கப்பட்டு பலகீனமாய் காணப்படுகிறார்கள். ஆனால் கர்த்தருடைய உணவாகிய மன்னாவைப் புசித்தவர்களில் ஒருவர் கூட பலவீனப்படவில்லை. காண்டாமிருகத்திற்கு ஒத்த பெலனுடையவர்களாய் காணப்பட்டார்கள்.  இஸ்ரவேல் சபை நாற்பது வருடங்கள் இந்த மன்னாவை வனாந்தரத்தில் புசித்தார்கள். அப்பத்திற்கும் இறைச்சிக்கும் விரும்பின அவர்களுக்கு மன்னாவையும்,      காடைகளையும் கர்த்தர் திரளாய் கொடுத்தார். அவர்கள் கானானுக்குள் பிரவேசித்து,      கானான்  தேசத்தின்  தானியத்தைப் புசித்த மறுநாளிலே மன்னா பெய்யாமல் ஒழிந்தது என்று  யோசுவா 5:12 கூறுகிறது. இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் பத்து முறை கர்த்தரைச் சோதித்து கோபமூட்டின பின்பும்,      அவருடைய மாறாத அன்பு நாற்பது வருடங்கள் அவர்களுக்கு ஒரு குறைவும் இல்லாதபடி நடத்தியது. நாமும் இஸ்ரவேல் ஜனங்களைப் போல நன்றியறிதாவர்களாய்  காணப்பட்டிருந்தும் கர்த்தர் நம்மை அனுதினமும் போஷித்துப் பராமரித்து நடத்துவது அவருடைய மாறாத அன்பின் வெளிப்பாடாய் காணப்படுகிறது.

 இயேசு வானத்திலிருந்து வந்த மன்னாவாய் நமக்குக் காணப்படுகிறார். தேவனுடைய வார்த்தை என்பதும்,      ஜீவவார்த்தை என்பதும் அவருடைய நாமங்களாய் காணப்படுகிறது. ஜீவ அப்பம் நானே.  உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள். இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே. நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்,      இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்,      நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்று இயேசு கூறினார் (யோவான் 6:49,     50). வனாந்திர மன்னா நம் முற்பிதாக்களுக்கு சரீரத்திற்கு ஆகாரமாய் காணப்பட்டது. ஆனால் கர்த்தருடைய வார்த்தை என்னும் மன்னா நம்முடைய ஆத்துமாவிற்கு மன்னாவாய் காணப்படுகிறது. இஸ்ரவேல்  ஜனங்கள் ஒவ்வொரு நாளும் அன்றைய தினத்திற்குரிய மன்னாவைச்  சேகரித்ததைப் போல நாமும் அனுதினமும் கர்த்தருடைய வார்த்தையை வாசித்து,      தியானிக்கிறவர்களாய் காணப்பட வேண்டும். அப்போது நம்முடைய உள்ளான மனுஷன் பலப்படுவான். கர்த்தருடைய வார்த்தையை நீங்கள் வாசித்துத் தியானிக்கும் போது நீங்கள் பாக்கியவான்களாய் மாறுவீர்கள்,      நீங்கள் செய்கிற காரியங்கள் வாய்க்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *