சிங்க முகமும்,     வெளிமான் வேகமும் (Faces like lions, swift like  gazelles).

காத்தியரில் பரிசையும் ஈட்டியும் பிடித்து,     சிங்க முகம்போன்ற முகமும்,     மலைகளிலிருக்கிற வெளிமான் வேகம் போன்ற  வேகமுமுள்ளவர்களாயிருந்து,     யுத்தசேவகரான பராக்கிரமசாலிகள் சிலரும் வனாந்தரத்திலுள்ள அரணான இடத்தில் இருக்கிற தாவீது பட்சமாய்ச் சேர்ந்தார்கள் (1 நாளா. 12:8).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/vBuNB3vxWKo

சவுலுக்குப் பயந்து தாவீது சிக்லாகில் மறைந்து காணப்பட்ட நாட்களில் அனேகர் தாவீதின் பட்சமாய் வந்தார்கள். அவர்களில் காத்  கோத்திரத்தைச் சேர்ந்தவர்களும் காணப்பட்டார்கள். அவர்கள்  சிங்க முகம்போன்ற முகமும்,       வெளிமான் வேகம் போன்ற  வேகமுள்ளவர்களாய் காணப்பட்டார்கள். சிங்கம் எதற்கும் அஞ்சாத தைரியமான மிருகம்,     அது எதிரிகளுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தும். தாவீதோடு சேர்ந்த காத்தியர்களும் அப்படிப்பட்டவர்களாய் காணப்பட்டார்கள். பரலோக தாவீதாகிய இயேசுவின் சேனையில்  காணப்படுகிற நாம் இப்படிப்பட்டவர்களாய் காணப்பட வேண்டும். பயந்தவர்களையும் கோழைகளையும் வைத்து கர்த்தரால் ஒன்றும் செய்ய முடியாது. கிதியோனின் சேனையில் முப்பத்திரண்டாயிரம் பேர் காணப்பட்டார்கள். அவர்களில் பயமும் திகிலும் உள்ளவர்கள் திரும்பி,     விரைவாய் ஓடிப்போகக்கடவர்கள் என்று பிரசித்தப்படுத்தின வேளையில் ஜனத்தில் இருபத்தீராயிரம் பேர் திரும்பிப் போய்விட்டார்கள்,     பதினாயிரம் பேர் மீதியாயிருந்தார்கள். அவர்களைத் தண்ணீரண்டைக்கு  இறங்கிப்போகப்பண்ணிப் பரிட்சித்த வேளையில் முந்நூறு பேரைத் தவிர மற்றவர்கள் தோற்றுப் போனார்கள். அந்த சிறு கூட்டத்தை வைத்து இஸ்ரவேலருக்கு மீதியானியரின் கைகளிலிருந்து கர்த்தர் இரட்சிப்பைக் கட்டளையிட்டார். கொஞ்சம் பேரைக் கொண்டாகிலும்,     அதிகம் பேரைக் கொண்டாகிலும்,     ஜெயத்தைத் தருவது கர்த்தருக்கு லேசான காரியம்.

அடுத்ததாக,     காத் புத்திரர் மலைகளிலிருக்கிற வெளிமான் வேகம் போன்ற வேகமுள்ளவர்களாய் காணப்பட்டார்கள். கர்த்தருக்காகத் துரிதமாகச் செயல்படுகிறவர்களைக் கர்த்தருடைய கண்கள் நோக்கிப் பார்க்கிறது. காலம் தாழ்த்த பண்ணுவது,     பிசாசின் தந்திரமாய் காணப்படுகிறது. மனம் திரும்புவதற்கு,     இரட்சிக்கப்படுவதற்கு,     ஞானஸ்நானம் எடுப்பதற்குப் பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று ஒருநாளும் தள்ளிப் போடாதிருங்கள். சுவிஷேசப் பணிக்காக விதைப்பதற்கும் காலம் தாழ்த்தாதிருங்கள். நாளைய தினம் நம்முடையது அல்ல. சமாதானத்தைக் கூறி,     நற்காரியங்களைச்  சுவிசேஷமாய் அறிவித்து,     இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரீகம் பண்ணுகிறாரென்று சியோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன என்று வேதம் கூறுகிறது. கர்த்தருடைய  சுவிஷேம் பரம்பிச் செல்வதற்குக் கர்த்தருடைய பிள்ளைகள் துரிதமாய் செயல்படுங்கள். ஆத்துமாக்களை ஆதாயம் செய்கிற பணியில் துரிதமாய் செயல்படுங்கள். நாம் காலம் தாழ்த்துவதின் நிமித்தம்,     பாதாளம் அனேகரை வாரிக் கொள்ளுகிறது என்பதை மறந்து விடாதிருங்கள். நீங்கள் தைரியத்தோடும்,     வேகமாகவும் செயல்படும் போது பரலோக தாவீதின் போர்ச் சேவகர்களாய் காணப்படுவீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *