உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன்(I will betroth you to me forever).

நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன். உண்மையாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீ கர்த்தரை அறிந்து கொள்ளுவாய். ஓசியா 2:19,20.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/pSalCwhvoiA

கர்த்தர் உண்மையுள்ளவர். அவருடைய அன்பு மாறாதது, மாயமற்றது,  என்றும் நிலையானது. ஆகையால் இஸ்ரவேல் ஜனங்களைப்பார்த்துச் சொல்லுகிறார், நான் உங்களை நித்தியமாய் எனக்கென்று நியமித்துக்கொள்ளுவேன் என்பதாக. ஒரு நிலையான திருமணத்திற்கு அடையாளமாய் உங்களை எனக்கென்று நியமித்துக்கொள்ளுவேன் என்பதாக.  கர்த்தருடைய பிள்ளைகளாகிய நம்மையும், நித்தியமாய் தனக்கென்று நியமித்திருக்கிறார். முறிந்துபோகாத, முடிந்துபோகாத அன்பு கர்த்தருடைய அன்பு. நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க  நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவ வைராக்கியமான  வைராக்கியங்கொண்டிருக்கிறேன் (2 கொரி.11:2) என்று அப்போஸ்தலனாகிய பவுலும் அறிக்கையிடுகிறார்.

 ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் உண்மையற்றவர்களாய், நம்பத்தகாதவர்களாய், சோரம்போனவர்களாய், நிலையற்றவர்களாய் காணப்பட்டார்கள். ஒரு மனைவி தன் புருஷனுக்குத் துரோகம் செய்வதுபோல, இஸ்ரவேல் வம்சத்தாராகிய நீங்கள் எனக்குத் துரோகம் செய்தது மெய் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமியா 3:20). அவர்களைப்போல இந்நாட்களிலும் கர்த்தருடைய ஜனங்களை அன்பற்றவர்களாய், ஸ்திரமற்றவர்களாய், சோரம்போனவர்களாய் காணப்படுகிறார்கள்.  மரணம் நம்மைப் பிரிக்கும் வரைக்கும் வாழ்விலும் தாழ்விலும் என்று பல அறிக்கைகள் செய்து   குடும்ப வாழ்க்கைகளுக்குள்ளாய் பிரவேசித்த அனேகக் கிறிஸ்தவக் குடும்பங்கள் பாதியிலே நின்று போனவர்களாய், பிரிந்துபோனவர்களாய், அன்பற்றவர்களாய், மன்னிக்காதவர்களாய், ஒருவருக்கொருவர் விட்டுகொடாதவர்களாய் காணப்படுகிறார்கள். அக்கிரமங்கள் அதிகமானதினால் அனேகருடைய அன்பு தணிந்துபோய்விட்டது.   உண்மையும், உத்தமும், கத்தருக்குப் பயப்படும் பயமும் எங்கும் குறைந்துபோய்விட்டது.

ஆனாலும், உண்மையில்லாதவர்களாய்  காணப்பட்ட போதிலும், உன்னை எனக்காய் நியமித்துக் கொள்ளுவேன் என்று கர்த்தர் வாக்களிக்கிறார். நியமித்துக் கொள்ளுவேன் என்ற வார்த்ததை மூன்று முறை இந்த இரண்டு வசனங்களிலும் வருகிறதிலிருந்து உண்மையாய் நம்மை அவருக்காக நியமித்துக்கொண்ட கர்த்தர் அவர். நீ கர்த்தரை அறிந்து கொள்ளுவாய் என்று ஓசியா 2:20ன் பின்பகுதியில் எழுதப்பட்டிருப்பது, அந்த வார்த்தை ஆதாம் ஏவாளை அறிந்தான் (ஆதி.4:1) என்ற வார்த்தையைப்  போன்றது. ஆழமான குடும்ப வாழ்க்கையின் அன்பை (Intimacy) வெளிப்படுத்துகிறது.  ஓசியாவின் மனைவியாகிய  கோமேர் அவனைவிட்டுப் பிரிந்து வேறு நேசர்களுக்குப் பின்னால் போன பின்பும், ஓசியா அவளை சேர்த்துக்கொண்டதுபோல, தேவ ஜனம் கர்த்தரைவிட்டு சோரம்போனப்பின்பு கூட உண்மையாய் உங்களை நேசித்து, அன்புகூர்ந்து சேர்த்துக்கொள்ளுகிற தேவன் அவர். அவருடைய அன்பு தியாகமானது, தன்னலம் கருதாத அன்பு. என்றும் கைவிடாத அன்பு.   தூரம் சென்றாலும் இயேசு வண்டை திரும்பிவரும் போது, இளையகுமாரனை தகப்பன் நேசித்து ஏற்றுக்கொண்டதுபோல, சேர்த்துக்கொள்ளுகிற அன்பு. உங்களை, தன்னுடன் நித்திய விவாகத்திற்கென்று நியமித்துக்கொண்ட கர்த்தர் அவர். வெளி.19:7 கூறுகிறது, “நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதி செலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம் பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன்” என்பதாக. 

நித்திய விவாகத்திற்கு நியமிக்கப்பட்ட உங்களைக் கர்த்தர் தாமே கறைதிரை இல்லாதவர்களாய், மாசற்றவர்களாய் காத்துக்கொள்ளுவாராக. ஆமென். 

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar
https://www.wogim.org

Enmanala Enpiriyarae, Uthamiyae Vol.3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *