சகலத்தையும் நேர்த்தியாகச் செய்திருக்கிறார் (Made everything beautiful in His time).

பிர 3:11. அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/b5f7ylN1dk0

தேவனுடைய வழிநடத்துதல் ஒவ்வொரு தனி மனிதருக்கும் ஒவ்வொருவிதமாக வேறுபடும். அதுபோல அவருடைய வழிநடத்துதல் காலத்திற்கு காலம், நேரத்திற்கு நேரம் மாறுபடும். இப்படித்தான் அவர் வழிநடத்துவார் என்று கணக்கில் வரும் சூத்திரம் போலவும், வேதியியலில் வரும் சமன்பாடு (Equation) போலவும் கூற முடியாது. ஆகையால் தான் மேற்குறிப்பிட்ட வசனத்தின் பின்பகுதி சொல்லுகிறது தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான் என்று கூறுகிறது.

தாவீது யுத்தம் செய்ய போகும்போது ஒவ்வொருமுறையும் ஆண்டவரிடம் கேட்டு யுத்தம் செய்யும் பழக்கமுடையவனாக இருந்தான். ஒருமுறை தாவீது பெலிஸ்தியர்களுக்கு விரோதமாக யுத்தம் செய்யபோகும்போது, நேரே அவர்களுக்கு விரோதமாக போகும்படி சொன்னார் (2 சாமு 5:19), மற்றொருமுறை ஆண்டவர் அவர்களுக்கு பின்னால் சுற்றி போகும்படி சொல்லுவார் (2 சாமு 5:22,23). மற்றொரு எடுத்துக்காட்டு, ஆண்டவர் ஆகாரிடம் முதல்முறை தன்னுடைய எஜமாட்டியாகிய சாராளிடம் கடந்துபோக சொல்லுவார். மற்றொருமுறை, ஆகாரை அனுப்பிவிடும்படி தேவனே ஆபிரகாமிடம் கூறுவார். இப்படி காலத்திற்கு காலம், சமயத்திற்கு சமயம், நபருக்கு நபர் பல விதங்களில் அவருடைய சித்தத்தை வெளிப்படுத்துகிறார், செய்கிறார்.

அதுபோல, இந்த வருஷம் முழுவதும் கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார். உங்கள் வாழ்க்கையில் அவர் செய்த எல்லா காரியங்களும் நன்மைக்கேதுவானவைகள் மாத்திரமே என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். ஆண்டவர் எல்லாவற்றையும் நேர்த்தியாய் செய்வதில் கைதேர்ந்தவர். தேவன் எல்லாவற்றையும் படைத்து, அதை கண்டு, எல்லாம் மிகவும் நன்றாய் இருந்தது என்று சொன்னார். ஒரு குருடன் இயேசுவிடம் வந்தபோது உனக்கு ஏதாவது தெரிகிறதா? என்று கேட்டார். நம்முடைய ஆண்டவர் எதையும் அரைகுறையாக செய்து விட்டுவிடுவதில்லை. எல்லாவற்றையும் பரிபூரணமாக செய்துமுடிப்பவர். பிலி 1:5 கூறுகிறது, உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவார் என்பதாக.

ஆகையால் உங்கள் வாழ்க்கையில் இந்த வருஷத்தில் கர்த்தர் எல்லாவற்றையும் நேர்த்தியாக செய்திருக்கிறார். அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாகவே நடக்கும். உங்களுக்கும் அப்படியே நன்மையாகவே நடந்திருக்கிறது. ஆகையால் ஆண்டவருக்கு நன்றி செலுத்த துவங்குங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *