நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார் (ஆதி. 50:20).
யோசேப்பு தன் சொந்த சகோதரர்களால் வெறுக்கப்பட்டு அடிமையாக விற்கப்பட்டார். மேலும் அடிமையாய் இருந்த போத்திப்பார் வீட்டில் பொய்யாய் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து பல ஆண்டுகள் தீமையை அனுபவித்த போது ஒருநாள் தேவன்
யோசேப்பு வாழ்க்கையை மாற்றினார்.
ராஜாவிற்கு அடுத்த பதவியில் இருந்தபோது தன் சகோதரர்களை பார்த்து யோசேப்பு சொன்ன வார்த்தை “நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள், தேவனோ …. அதை நன்மையாக முடியப்பண்ணினார் “
ஆம் நம்முடைய தேவன் தீமையை நன்மையாய் மாற்றுகிறவர்.
John bunyan என்ற ஊழியர் , கர்த்தரின் பணி நிமித்தமாக 12 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார் . அந்த சூழல் தான் மோட்ச பிரயாணம் (Pilgrim progress) என்கிற புத்தகம் எழுதுவதற்கு ஏதுவாக அமைந்தது.
உலக அளவில் அதிகம் விற்கப்பட்ட புத்தகங்களில் மோட்ச பிரயாணமும் ஓன்று.
ஒரு போதகர் நடந்து செல்லும் போது ஒரு குடிகாரன் போதையில் கல்லால் அவரை தாக்கியதால் போதகரின் வாயில் காயம் ஏற்பட்டு பேச முடியாமல் போனது. எனவே பிரசங்க ஊழியத்தை விட்டு புத்தகம் எழுத ஆரம்பித்தார். அவரின் புத்தகம் ஜனங்களுக்குள் ஒரு தாக்கத்தை உண்டாக்கிது. இதனால் தேவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு ஸ்தோத்திரக்கூட்டம் (Thanks giving) ஏற்பாடு செய்யப்பட்டது. போதகரின் மனைவி சொன்னார்கள் “அன்றைக்கு ஒருவன் கல்லால் அடிக்காவிட்டால் இந்த புத்தகம் வந்திருக்காது (No brick No book)”
இது போன்று அநேக சாட்சிகள் உண்டு.
நம்முடைய வாழ்க்கையிலும் தொடர்ந்து எல்லா சூழ்நிலைகளிலும் நாம் தேவனை நேசித்து அவரின் ராஜ்ஜியத்தின் காரியத்தில் கவனம் செலுத்தினால் தேவன் அனைத்தையும் நன்மையாக மாறப்பண்ணுவார்
“அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” – ரோமர் 8:28.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Thivagar
Word of God Church
Doha – Qatar
https://www.wogim.org