எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷம் (Great joy for all the people).

தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார் (லூக். 2:10,11).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/t5hNyydiZlM

இயேசுவின் பிறப்பானது உலகத்தின் எல்லா ஜனங்களுக்கும் மிகுந்த சந்தோஷத்தைக் கொண்டு வந்தது. யூதனென்றும் கிரேக்கனென்றும் இல்லை, வெள்ளையர்கள் கறுப்பர்கள் என்று இல்லை, ஆசியாவைச் சேர்ந்தவனென்றும் அமெரிக்கனென்றும் இல்லை, ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை, ஐசுவரிய வான் தரித்திரன் என்று இல்லை, படித்தவன் படிக்காதவன் என்று இல்லை, அது எல்லாவிதமான ஜனங்களுக்கும் மகிழ்ச்சியின் செய்தியாய் காணப்படுகிறது. இன்றைக்கும் அவருடைய பிறப்பை நினைவு கூறுகிற இந்நாட்களில், அவருடைய பிறப்பின் செய்தி மிகுந்த மகிழ்ச்சியை நமக்குத் தருகிறது. இயேசு பிறந்த வேளையில், அவருடைய பிறப்பின் செய்தியானது முதன்முதலாகச் சாதாரண மேய்ப்பர்களுக்கு அறிவிக்கப்பட்டது. தேவ தூதன் அவர்களிடத்தில் வந்து மேசியாவின் பிறப்பைக் குறித்து அறிவித்தான். முதன்முதலாய் நற்செய்தியை ஜனங்களுக்கு அறிவித்தவர்கள் தேவதூதர்களாய் காணப்பட்டார்கள், இந்நாட்களில் நாம்தான் சேனைகளுடைய கர்த்தருடைய தூதர்களாய் காணப்படுகிறோம், நற்செய்தியை அறிவிப்பது நம்மேல் விழுந்த கடமையாய் காணப்படுகிறது. உடனே மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி, தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள். பின்பு அவர்கள் மிகுந்த சந்தோஷத்துடன் கர்த்தரைத் துதித்துக் கொண்டு திரும்பிச் சென்றார்கள்.  யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,  யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்று, நட்சத்திரம் முன்செல்ல  பெத்லகேமுக்கு வந்தார்கள். அவர்கள் இயேசுவைக் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து பணிந்தபின்பு, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்.  வயோதிபர்களாய் காணப்பட்ட சிமியோனுக்கும், அன்னாளுக்கும் கூட மேசியாவின் பிறப்பு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது, நமக்கும் மிகுந்த சந்தோஷமாய் காணப்படுகிறது.

கர்த்தருடைய பிள்ளைகளே, இந்த பண்டிகைக் காலங்களில் ஒருவேளை நீங்கள் பலவிதமான பாடுகள் மத்தியில் கடந்து செல்லக் கூடும், பலவீனங்களும் வியாதிகளும் காணப்படலாம், பல நன்மைகளுக்காய் காத்திருந்து இந்த வருஷமும் கடந்து போகப்போகிறதே என்ற ஏக்கங்கள் உங்களுக்குள்ளாய் காணப்படலாம், வேலை ஸ்தலங்களில் நெருக்கங்களும் கஷ்டங்களும் காணப்படலாம், சிறுமைகளும் வெறுமைகளும் காணப்படலாம், ஊழியங்களில் அடைபட்டுப் போன வாசல்கள் காணப்படலாம், நம்மைச் சுற்றி நடக்கிற யுத்தங்களும் கலவரங்களும் நமக்குள் கலக்கத்தை ஏற்படுத்தலாம்,  பயப்படாதிருங்கள்,  உங்களுக்குச் சமாதானம் என்று கர்த்தர் கூறுகிறார். இயேசு இந்த பூமியில் ஊழியம் செய்த நாட்களில் அவரிடம் வந்த அத்தனை பேருக்கும் அற்புதங்களைச் செய்து மகிழப்பண்ணினார், உங்கள் வாழ்க்கையிலும் ஒரு அற்புதத்தைச் செய்து   உங்களை மகிழப்பண்ணுவார். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *