நாகூம் 1:15. இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது; யூதாவே, உன்பண்டிகைகளை ஆசரி; உன் பொருத்தனைகளைச் செலுத்து; துஷ்டன் இனி உன் வழியாய்க் கடந்துவருவதில்லை, அவன் முழுதும் சங்கரிக்கப்பட்டான்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/wGUdZZDbAh8
பண்டிகை என்றால் சந்தோசம் மகிழ்ச்சி குதூகலமாய் காணப்படுகிறது. ஆண்டவர் பண்டிகையை ஆசரித்து நாம் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்றே விருப்பமுடையவராய் இருக்கிறார். பழைய ஏற்பாட்டில் ஆண்டவர் ஏழு முக்கிய பண்டிகைகளை இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்தார். பஸ்கா பண்டிகை, வாரங்களின் பண்டிகை, எக்காள பண்டிகை, பாவநிவாரணபலி பண்டிகை, கூடாரபண்டிகை, ஆலய பிரதிஷ்டை பண்டிகை, பூரிம்பண்டிகை. இவற்றில் எக்காள பண்டிகை என்பது ஏழாம் மாதத்தின் முதலாம் நாள் கொண்டாடப்படுகிற பண்டிகை. ஒவ்வொரு புத்தாண்டை துவக்க எக்காளம் ஊதும் நாள். நாமும் ஒரு புத்தாண்டை துவக்க ஆயத்தமாய் இருக்கிறோம். உலகத்தில் எழுப்புகிற வானவேடிக்கை என்னும் எக்காள சத்தத்தால் அல்ல; துதி என்னும் எக்காள சத்தத்துடன் வருகிற வருடத்தை துவக்கி பண்டிகைகளை ஆசாரிக்க வேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார். இதுவே கர்த்தருக்கு சுகந்த வாசனை. எக்காளம் ஊதுவது என்பது ஒரு வெற்றி முழக்கம் இடுவதற்கு அடையாளமாய் காணப்படுகிறது.
ஒவ்வொரு புத்தாண்டையும் ஆண்டவர் எதற்காக நமக்கு கொடுக்கிறார்? நாம் புதிய வருஷத்தில் இன்னும் பரம ஈவை அறிந்துகொள்ளவும், நாம் இன்னும் ஆண்டவரை கிட்டி சேரவும், நாம் இன்னும் நட்சத்திரங்களாக பிரகாசிக்கவும், நாம் இன்னும் ஆண்டவருடைய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளவும், நாம் இன்னும் ஆண்டவருக்கென்று கனிகொடுக்கவும் கர்த்தர் கொடுக்கிற ஈவாய் காணப்படுகிறது. ஒரு திருமணம் நடத்த அநேக மாதங்கள் ஆயத்தமாகிறோம், ஒரு வேலைக்கு செல்ல அநேக காரியங்களை கற்று ஆயத்தமாகிறோம், ஒரு ஊருக்கு கடந்து செல்லவும் அநேக காரியங்களை எடுத்து வைத்து ஆயத்தமாகிறோம். அதுபோல தான் தேவன் கொடுக்கும் புதிய வருஷத்தில் நுழையும் முன்பாக நாம் நம்மை ஆயத்தமாக்கிக்கொள்ளுவோம். பண்டிகைகளை ஆசரிப்போம். எக்காளம் என்னும் பண்டிகையை ஆச்சரிப்போம். துதி என்னும் எக்காள சத்தத்தை தொனிக்க பண்ணுவோம். ஆண்டவருடைய நாமங்களையெல்லாம் சொல்லி கர்த்தரை துதியுங்கள். அவருடைய செய்கையின் மகத்துவங்களை சொல்லி துதிப்பலியை ஏறெடுங்கள். கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து நன்றி பலிகளை செலுத்துங்கள். தாவீது சொல்லுகிறான், வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது. வனாந்தர தாபரங்களிலும் பொழிகிறது; மேடுகள் சுற்றிலும் பூரிப்பாயிருக்கிறது. மேய்ச்சலுள்ள வெளிகளில் ஆடுகள் நிறைந்திருக்கிறது; பள்ளத்தாக்குகள் தானியத்தால் மூடியிருக்கிறது; அவைகள் கெம்பீரித்துப் பாடுகிறது (சங் 65 1-3) என்பதாக. மேடுகள் பள்ளத்தாக்குகள் என்று குறிப்பிடுகிறான், அதாவது வாழ்க்கையில் வரும் ஏற்ற தாழ்வுகள் அனைத்தையும் நன்மையினால் கர்த்தர் முடிசூட்டுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org