மாற் 16:17,18 விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/stH3LfUduYY
நாம் தேவபிள்ளைகளாகும்படி நமக்கு அதிகாரத்தை கர்த்தர் கொடுக்கிறார்; அதுபோல வல்லமையையும் கர்த்தர் நமக்கு கொடுக்கிறார். அதிகாரம், அதாவது, ஆங்கிலத்தில் Authority என்பது விசுவாசிகளாகிய எல்லாருக்கும் கர்த்தர் கொடுக்கிறார். வல்லமை, அதாவது, ஆங்கிலத்தில் Power என்பது நபர்களுக்கு நபர் அது வேறுபடும். நம் எல்லாருக்கும் ஆண்டவர் பிசாசுகளை துரத்தும் அதிகாரத்தை கொடுத்திருக்கிறார். முதலாவது ஆண்டவர் தனது 12 சீஷர்களுக்கு பிசாசுகளை துரத்தும் அதிகாரத்தை கொடுத்தார் (மத் 10:1), பிறகு 70 சீஷர்களுக்கு பிசாசுகளை துரத்தும் அதிகாரத்தை கொடுத்தார் (லுக் 10:1). இன்று நம் ஒவ்வொருவருக்கும் மத் 16:17ன் படி விசுவாசிக்கிற ஒவ்வொருவருக்கும் பிசாசுகளை துரத்தும் அதிகாரத்தை கொடுத்திருக்கிறார். பிசாசுகளை துரத்துவது என்பது வரமல்ல, அது விசுவாசிகளாகிய நம் ஒவ்வொருவருடைய உரிமை என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
வார்த்தையின் மூலமாக பிசாசுகளை துரத்துங்கள். இயேசு அந்த ஆவிகளை வார்த்தையினால் துரத்தினார்(மத் 8:16) என்று வசனம் கூறுகிறது. ஆவியின் பட்டயம் ஒவ்வொரு விசுவாசிக்கும் உரியது. அந்த பட்டயத்தை (எபே 6:17) எடுத்து பிசாசை வீழ்த்துங்கள். ஆகையால் பிசாசு பிடித்தவர்களை ஒருக்காலும் முடியை பிடித்து இழுத்து, தலையில் அடித்து, நெற்றியில் கை வைத்து கீழே தள்ளி அவர்களை துன்பப்படுத்தாதிருங்கள். சிலர் பிசாசுபிடித்தவர்களின் கண்ணை குத்துகிறார்கள். ஏற்கெனவே, பிசாசினால் கஷ்டப்படுகிறவர்களை மேலும் மேலும் கஷ்டப்படுத்திருங்கள். மாறாக, வார்த்தையினால் பிசாசை துரத்துங்கள். அவர்கள் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினாலும், சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள் என்று வசனம் கூறுகிறது. அதுபோல, பிசாசிடம் அதிகமாக பேசாதிருங்கள். சிலருக்கு அந்த பிசாசு எந்த ஊரு, என்ன பேரு என்ற கேட்க ஆரம்பித்து, நீண்ட நேரம் சம்பாஷணை பண்ணி, கடைசியில் பிசாசு அவர்களை வஞ்சிக்க இடம் கொடுத்துவிடுவார்கள். பிசாசிடம் நீண்ட நேரம் பேசி உங்கள் நேரத்தை வீணடிக்காதிருங்கள். இயேசு அவைகள் பேசாதபடி அதட்டினார் என்று லுக் 4:41 கூறுகிறது. எதையும் வாக்குப்பண்ண பிசாசிடம் கேட்காதிருங்கள். காரணம், அவன் பொய்யன், பொய்க்கு தந்தை என்று யோவான் 8:44 கூறுகிறது.
நீங்கள் உண்மையாகவே இயேசுவை ஏற்றுக்கொண்டு அவரை விசுவாசிப்பீர்களென்றால், உங்களால் பிசாசை துரத்த முடியும். காரணம், இயேசுவை விசுவாசித்தவர்கள் அவரை காட்டிலும் அதிகமானவைகளை செய்வார்கள் என்று இயேசுவே கூறியிருக்கிறார். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் அவன் உங்களை விட்டு ஓடிப்போவான்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org