வழுவாதபடி காக்க தேவன் வல்லவர் (God is able to keep from falling).

யூதா 24,25 வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும், தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/35gB_vNvxBM

ஈரமான தரையில் கவனக்குறைவாக நடக்கும்போது, வழுக்கி விழுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதுபோல தான் நம்முடைய வாழ்க்கையில் நாம் வழுக்கி விழவேண்டும் என்றே பிசாசானவன் அதிகமாக முயற்சி செய்துகொண்டு இருக்கிறான். பிசாசு ஒரு பொய்யன், அவன் பொய்க்கு பிதா என்று அவனை குறித்து வேதம் கூறுகிறது. அவன் சொல்வதெல்லாம் நீ இரட்சிக்கப்படமுடியாத பாவி என்று சொல்லுவான்; அந்த நேரத்தில் நாம் சொல்லவேண்டும் என்னை தள்ளமுடியாத அளவு என் தேவன் என் மேல் இறக்கமுள்ளவர் என்பதாக. நீ இந்த உலகத்தில் பரிசுத்தமாக வாழமுடியாது என்று பிசாசு சொல்லுவான்; அந்த நேரத்தில் சொல்லவேண்டும் என் பாவங்கள் சிவேரென்று இருந்தாலும் அது பஞ்சை போல மாறும், என் கர்த்தர் பரிசுத்தர் ஆகையால் அவர் என்னை பரிசுத்த பாதையில் நடத்த வல்லமையுள்ளவர் என்பதாக. நீ ஜெயமுள்ள வாழ்க்கையை ஓடி முடிக்க முடியாது என்றெல்லாம் பிசாசு சொல்லி வஞ்சிக்கிறவனாய் காணப்படுவான்; அந்த நேரத்தில் நாம் சொல்லவேண்டும் என்தேவனின் நாமங்களில் ஒன்று யெகோவா நிசி, அவர் எனக்கு ஜெயத்தை கொடுப்பார் என்பதாக சொல்ல வேண்டும்.

இயேசு சொன்னார், என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது (யோவா 10:28,29) என்பதாக. அப்படியென்றால், நாம் இயேசுவின் கையிலும், பிதாவின் கையிலும் இருக்கிறோம், அவர் கரத்திற்குள் நாம் இருக்கும்போது ஒரு கவலையும் நம்மை மேற்கொள்ளாது. நாம் வழுவாமல் நம்முடைய பயணத்தை முடிக்க அவர் கரத்திற்குள் இருக்கிறோம். மாத்திரமல்ல, இயேசு சொன்னார், நம்மை ஒருவனாலும் அவர் கரத்திலிருந்து பறித்துக்கொள்ள முடியாது என்பதாக. செடியிலிருக்கும் பூவை பறித்துக்கொள்ளுவதுபோல நம்மை பறித்துக்கொள்ளம் என்று பிசாசு நினைத்தாலும், அவனால் ஒன்றும் செய்யமுடியாது. காரணம், ஏசா 49:16ன் படி, உங்களை அவர் உள்ளங்கையில் வரைந்திருக்கிறார். சக 2:8ல் கூறுகிறார், நீங்கள் என் கண்மணி என்று. இப்படி வாக்குத்தங்களை கொடுத்தவர், நாம் வழுவிப்போகும்படி எப்படி அனுமதிப்பார்?. நம்முடைய பாதைகளை ஸ்திரப்படுத்துகிறவர், முடிவுப்பரியந்தம் இரட்சிப்பார். காரணம் இயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். நீங்கள் வழுவிப்போகாதபடி காக்க அவர் வல்லமையுள்ளவர்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *