கர்த்தரின் பிரியம் (Delight of God).

அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார்; வீரனுடைய கால்களில் பிரியப்படார். தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்(சங்கீதம் 147 : 10,11).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/mhnHmOeioDo

இந்த இரண்டு வசனங்களை வாசிக்கும் போது கர்த்தர் யாரிடம் பிரியமாயிருக்கிறார், யாரிடம் பிரயமில்லாமல் இருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. எகிப்து தேசத்தின் பார்வோன், அவனையும், அவன் குதிரையையும், அவன் சேனைகளையும் நம்பியிருந்தான். மோசே கர்த்தரை நம்பியிருந்தான். மோசே சாந்த குணமுள்ளவன் என்றும் வசனம் சொல்லுகிறது. சிவந்த சமுத்திரத்தில் பார்வோனின் தலைமையில் திரளான படைகளும், மோசேயின் தலைமையில் இஸ்ரேல் ஜனங்களும் கடந்து போகையில், கர்த்தர் பார்வோன் சேனைகளை கவிழ்த்துப்போட்டார் என்று வாசிக்கிறோம்.

நேபுகாத்நேச்சாரை குறித்து வாசிக்கும் போது தானியேல் 5 : 20. அவருடைய இருதயம் மேட்டிமையாகி, அவருடைய ஆவி கர்வத்தினாலே கடினப்பட்டபோது, அவர் தமது சிங்காசனத்திலிருந்து தள்ளப்பட்டார்; அவருடைய மகிமை அவரைவிட்டு அகன்றுபோயிற்று. அவனுடய பையன் பெல்ஷாத்சாரும் ஆயிரம் பேருக்கு முன்பாக திராட்சரசம் குடிக்கிறவனாகவும், எருசலேமிலிருந்து கொண்டு வந்த பொன், வெள்ளி பாத்திரங்களில் குடிக்கிறவனாகவும், விக்கிரகங்களை புகழுகிறவனுமாகவும் இருந்தான். இதுவே அவனுடைய பெலன் என்று நம்பிக்கொண்டு இருக்கையில், கர்த்தருடைய பிரியம் அவனை விட்டு கடந்து சென்று, அவனுடைய ராஜ்யத்திற்கு கர்த்தர் ஒரு முடிவை கொண்டு வந்தார். கடைசியில் அவன் கொலைசெய்ய பட்டான் என்று வேதத்தை வாசிக்கும் போது அறிந்துகொள்கிறோம்.

மாறாக, கர்த்தர் தமக்கு பயந்து, தம்முடைய கிருபைக்கு காத்திருந்தவர்கள் மேல் பிரியமாயிருக்கிறார். கிருபைக்கு காத்திருப்பது என்றால் என்ன?  அவர் தாழ்மையுள்ளவனுக்கு கிருபை அளிக்கிறார் என்றும், ஸ்தோத்திரம் செலுத்துகிறதினால் கிருபை பெருகும் என்றும் வேதத்தில் நாம் வாசிக்க முடியும். நீங்கள் ஒவ்வொரு நாளும் தாழ்மையோடும், ஸ்தோத்திரத்தோடும் இருக்க வாஞ்சிப்பீர்கள் என்றால், நீங்கள் கிருபைக்கு காத்திருப்பவர்கள். II தீமோத்தேயு 2:1 சொல்லுகிறது, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு. சங்கீதக்காரனாகிய தாவீது உயர்ந்ததற்கு காரணம் அவன் கர்த்தருடைய கிருபையை வாஞ்சிதத்தினால் தான். தாவீது சொல்லும் போது , சங்கீதம் 25:7 என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும்; கர்த்தாவே, உம்முடைய தயவினிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும், என்றும், சங்கீதம் 51:1 தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும், என்றும் வாசிக்கிறோம்.

அவன் கர்த்தரின் கிருபையை சார்ந்து இருந்ததினால், தாவீதின் மேல் கர்த்தர் பிரியமாயிருந்தார்.கர்த்தர் தாவீதை குறித்து சொல்லும் போது இவன் என் இருதயத்துக்கு ஏற்றவன் என்று சொல்கிறார். கர்த்தருக்கு பயந்து, அவருடைய கிருபைக்கு காத்திருங்கள்; உங்களுடைய செல்வம், உயர்வு, பதவி, சொத்து, ஐஸ்வரியம், படிப்பு, மேன்மை, புகழ் என்று குதிரையின் பலத்தில் சார்ந்து கொள்ளாதிருங்கள். இவையெல்லாம் ஒரு நாளில் காணாமல் போய்விடும். ஒரு நாள் இவை எல்லாவற்றையும் இழந்தீர்களென்றால், உடனே உலகம் உங்களை பகைக்கும்; சொந்த பந்தங்கள் பரியாசம் பண்ண நேரிடும்; நண்பர்கள் உங்களை விட்டு கடந்து சென்றுவிடுவார்கள்; எல்லாவற்றிற்கும் மேலாக கர்த்தரின் பிரியம் உங்களை விட்டு போய்விடும்.

மாறாக, கர்த்தருக்கு பயந்து, அவருடைய சத்தத்திற்கு செவி கொடுத்து, அவருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, அவர் சொல்வதின் படி செய்து, தாழ்மையோடு , ஸ்தோத்திரத்தோடு அவருடைய கிருபைக்கு காத்திருப்பீர்கள் என்றால், கர்த்தரின் பிரியம் உங்கள் மேல் இருக்கும்; நீங்கள் ஆசிர்வதிக்க பட்டு உயர்த்த படுவீர்கள். ஒரு நாள் வரும் அப்பொழுது சொல்வீர்கள், ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும்(சங்கீதம் 63:3) என்று. சங்கீதம் 66:20 என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக என்று.

கர்த்தரின் பிரியம்  உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadish
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *