உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும். சங்கீதம் 119 : 18.
பரிசுத்த வேதாகமம் பரிசுத்த ஆவியால் கொடுக்கப்பட்டது. 2 தீமோத்தேயு 3 : 16. வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது.
ஸ்பானிய தேசத்து இளவரசன் கர்த்தருடைய வேதத்தின் மீது அதிக ஆசை கொண்டதால், சிறைபிடிக்க பட்டான். அவன் சிறையில் இருந்த போது நான்கு சுவர்களிலும் வேதத்தில் எத்தனை முறை கர்த்தர் என்ற வார்த்தை வருகிறது, எத்தனை முறை இயேசு என்று வார்த்தை வருகின்றது போன்ற அநேக ஆராய்ச்சிகளை எழுதி வைத்திருந்தார். அவர் சிறை சாலையிலே மரித்தபோது, அவருக்கு பிடித்த வாக்குத்தத்தம் என்று ஒரு வசனத்தை எழுதி வைத்திருந்தார். சங்கீதம் 37 : 4. கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். எல்லாருக்கும் ஒரே ஆச்சர்யம், சிறைச்சாலையில் இருக்கும் போது அவர் மனமகிழ்ச்சியாக இருந்தார் என்றால் காரணம் வேதாகமம் தான் என்று.
ஒரு செல்வந்தர் கப்பல் பிரயாணம் செல்லும்போது, பிரயாணம் ஆறு மாதம் என்பதால் கிட்டத்தட்ட 66 புத்தகங்களை எடுத்துக்கொண்டு சென்றாராம். ஒவ்வொரு புத்தகத்தை படித்து முடித்தவுடன், அந்த புத்தகத்தை கடலில் எறிந்துவிடுவாராம். இப்படியாக 65 புத்தகங்களை எறிந்துவிட்டாராம். கடைசில் வேதகமத்தையும் படித்து முடித்துவிட்டார், ஆனால் வேதகமத்தை அவரால் தூக்கி எரிய முடியவில்லை. மாறாக திரும்ப திரும்ப படித்தார். காரணம் பரிசுத்த வேதாகமம் தேனிலும் தெளி தேனிலும் மதுரமானது.
இங்கிலாந்து தேசத்தில் பட்டமளிப்பு விழாவில் 3 காரியங்கள் கொடுக்கப்படுமாம்; ராஜமோதிரம், செங்கோல் மற்றும் பரிசுத்த வேதாகமம். காரணம் பரிசுத்த வேதாகமம் ஒரு நாட்டை ஆட்சி செய்வதற்கு மிகவும் அவசியமானது.
வேதாகமம் கனத்துக்குரிய புத்தகம் என்பதை முன்னோர்களும், தேசத்து அதிபதிகளும் இவ்வாறு கூறினார்கள்.
ஆபிரகாம் லிங்கன்: மனிதவர்கத்திற்கு தேவன் அளித்த மகா உன்னத பரிசு பரிசுத்த வேதாகமம்.
ஜார்ஜ் வாஷிங்டன்: பரிசுத்த வேதாகமமும், தேவனும் இல்லாமல் தேசத்தை சரியாக ஆட்சி செய்ய இயலாது.
கோத்தே: நான் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு என்னோடு ஒரே ஒரு புத்தகத்தை மாத்திரம் வைத்துக்கொள்ள அனுமதி கிடைக்குமானால் நிச்சயமாக நான் வேத புத்தகத்தையே தெரிந்துகொள்வேன்.
மார்ட்டின் லூதர்: வேதம் பழமையானதுமல்ல; புதுமையானதுமல்ல; அது நித்தியமானது.
ஸ்பர்ஜன்: நான் நூறாவது முறை வேதாகமத்தை வாசிக்கிற இந்த வேளையில் முதலாவது முறை வாசித்ததை காட்டிலும் இனிமையாக இருக்கிறது.
உலகில் 1000 புத்தகங்கள் வரலாம், போகலாம்; ஆனால் என்றும் அழியாத நித்தியமான புத்தகம் என்ன என்று கேட்டால் எளிதாக சொல்லிவிடலாம் அது பரிசுத்த வேதாகமம் என்று. காரணம் எத்தனையோ நாடுகள், ராஜாக்கள், மனிதர்கள் வேதாகமம் மக்களின் கரத்திற்கு சென்று விடாமல் தடுத்து விட வேண்டும் என்று கிழித்து, எரித்தும், கடலில் தூக்கியும் போட்டார்கள். சத்துரு வேதாகமத்தை தடுத்துவிட வேண்டும் என்று எத்தனையோ சதி திட்டங்களை தீட்டினான். பல நாடுகள் வேதகமத்திற்கு தடை விதித்தது. எல்லாவற்றையும் தாண்டி, இன்றைக்கு அதிகமான புத்தகம் விற்பனை செய்யப்படுவதும், பல மொழிகளில் அச்சடிக்கப்படவதும் பரிசுத்த வேதாகமம். பரிசுத்த வேதாகமமும் எத்தனையோ தேவ மனிதர்கள் வேதாகமம் நம் கையில் வர வேண்டும் என்று ரத்த சாட்சிகளாக மரித்துள்ளார்கள். இந்த நாளிலும் வேதாகமத்தின் மேன்மையை உணர்ந்தவர்களாக உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும் என்று கேட்போம். நீங்கள் பாக்யவான்களாக இருப்பீர்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadish .R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org