அவர் போதகம்பண்ணி முடித்த பின்பு சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார். அதற்குச் சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை, ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான். லூக்கா 5:4,5.
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/P3O07xHhCRA
இயேசு தன் ஊழியத்தின் நாட்களில், கெனேசரேத்துக் கடலருகே காணப்பட்டபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்தார்கள். அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார். அப்பொழுது அந்தப் படவுகளில் ஒன்றில் ஏறினார், அது சீமோனுடையதாயிருந்தது; அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படவில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார். அவருடைய போதகத்தை கேட்ட நபர்களில் சீமோன் பேதுருவும் ஒருவராயிருந்தார். அவர் போதகம்பண்ணி முடித்த பின்பு சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்று கூறினார். அதற்குச் சீமோன் பேதுரு, ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை. ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன், என்று சொல்லி வலைகிழிந்து போகத்தக்கதாக மிகுதியான மீன்களைப்பிடித்தார்கள். பேதுரு, தன் தொழிலில் அதிக அனுபவம் உள்ளவனாய் காணப்பட்டிருந்தும், மீன்கள் எங்கே எப்பொழுது கிடைக்கும் என்பதை அறிந்தவனாயிருந்தும், சூழ்நிலைகளைப் பார்க்காமல், சற்றும் சந்தேகப்படாமல் ஆண்டவருடைய வார்த்தையின்படியே வலையைப் போட்டதினால் திரளான மீன்களைப் பிடித்தான்.
கப்பர்நகூமில் ஊழியம் செய்துகொண்டு வந்த நாட்களிலும், வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டபோது, அவன், செலுத்துகிறார் என்ற சொன்னான். அந்தவேளையில் இயேசு அவனிடம், நீ கடலுக்குப் போய், தூண்டில்போடு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார், ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார். பேதுரு கீழ்ப்படிந்து, அவருடைய வார்த்தையின்பபடியே செய்தான், வரிப்பணமும் செலுத்தினான்.
இயேசு உயிர்த்தெழுந்தபின்பு, திபேரியா கடற்கரையிலே சீஷருக்குத் தம்மை வெளிப்படுத்தினார்; சீமோன்பேதுரு மற்ற சீஷர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை. விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்று, பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றுமில்லை என்றார்கள். அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அவருடைய வார்த்தைக்கு அப்படியே கீழ்படிந்து, அவர்கள் வலையைப் வலதுபுறமாகப் போட்டு, அவர்கள் இழுக்கக்கூடாத அளவு திரளான மீன்களை பிடித்தார்கள்.
கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் வாழ்க்கையை வேதவார்த்தைகளின்படி கட்டுங்கள், உங்கள் எதிர்காலம் சிறப்பாகக் காணப்படும். வேதவார்த்தைகளின் அடிப்படையில் குடும்ப வாழ்க்கையை கட்டுங்கள். உங்கள் குடும்பம் சமாதானத்தாலும், சந்தோஷத்தாலும் நிரம்பியிருக்கும். அவருடைய வார்த்தைகளின்படி ஊழியங்களைக் கட்டுங்கள், அது அனேகருக்கு என்றும் ஆசீர்வாதமாகக் காணப்படும். நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு. இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏன்னென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார் (மத்தேயு 7:24-27). என் ஆடுகள் என் சத்தத்தை அறியும் என்பது கர்த்தருடைய வார்த்தை. அவருடைய சத்தத்தைக் கேட்டு, அதன்படிச் செய்கிற புத்தியுள்ள மனுஷர்களாகக் கர்த்தர் உங்களை மாற்றட்டும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar
https://www.wogim.org