தற்போதைய சூழ்நிலைகள் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள ஆயத்தப்படுத்தும் (Current circumstances will prepare us to face future challenges)

நீ காலாட்களோடே ஓடும்போதே உன்னை இளைக்கப்பண்ணினார்களானால், குதிரைகளோடே எப்படிச் சேர்ந்து ஓடுவாய்? சமாதானமுள்ள தேசத்திலேயே நீ அடைக்கலம் தேடினால், யோர்தான் பிரவாகித்து வரும்போது நீ என்னசெய்வாய்? (எரே. 12:5)

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/sCSEllw7uNk

எரேமியா தீர்க்கதரிசியைப் பார்த்து ஆண்டவர் கேட்ட கேள்விகளாய் மேற்குறிப்பிடப்பட்ட வசனம் காணப்படுகிறது.  எரேமியா ஆனதோத் ஊரைச் சார்ந்தவன். பென்யமீன்  தேசத்திலுள்ள ஆனதோத் ஊரிலிருந்த ஆசாரியர்களில் ஒருவனாகிய இல்க்கியாவின்  குமாரன் எரேமியாவினுடைய வசனங்கள் என்று எரே. 1:1 கூறுகிறது. அவனுடைய ஊரைச் சேர்ந்தவர்களே அவனை கொல்லும் படிக்கு முயற்சி செய்தார்கள், நீ எங்கள் கையினாலே சாகாதபடிக்குக் கர்த்தருடைய நாமத்தினாலே தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று சொன்னார்கள் என்று எரே. 11:21 கூறுகிறது. தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீன மடையான் என்று இயேசு சொன்ன வார்த்தை எரேமியாவிற்கும் பொருந்துகிறதாய் காணப்பட்டது. ஆகையால் எரேமியா ஆண்டவரைப் பார்த்துப் பல கேள்விகளைக் கேட்டான். ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன?  துரோகஞ்செய்துவருகிற  அனைவரும் சுகித்திருக்கிறதென்ன? நீர் அவர்களை நாட்டுகிறீா, வேர்பற்றி கனி கொடுக்கிறார்கள் என்று எரேமியா புலம்புகிறவனாய் காணப்பட்டான். அதற்கு ஆண்டவர் அவனைப் பார்த்து, நீ இப்போது காலாட்களோடு மெதுவாய் ஓடுகிறாய், சமாதானமுள்ள தேசத்தில்  காணப்படுகிறாய். இந்நாட்களிலேயே நீ இளைத்துப் போனவனாய், அடைக்கலம் தேடுகிறவனாய் காணப்பட்டால் இனி வருகிற நாட்களில் சம்பவிக்கப் போகிற பாடுகளையும், சோதனைகளையும் எப்படி எதிர்கொள்ளப் போகிறாய், குதிரைகளோடு எப்படி ஓடப்போகிறாய், யோர்தானைப் போலப் பாடுகள் பிரவாகித்து வரும் போது என்ன செய்யப் போகிறாய் என்று ஆண்டவர் கேட்டார்.   பஸ்கூர்  அடித்து,   எரேமியாவை காவலறையிலே போடப்போகிறான், கயிறுகளினால் கட்டி அம்மெலேகின் குமாரனாகிய  மல்கியாவினுடைய தண்ணீர் இல்லாமல் உளையாயிருக்கிற  துரவிலே போட்டுப் போடப்போகிறார்கள், நீ பொய்யன் பொய்யாய் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்று ஜனங்கள் தூற்றப்போகிறார்கள். இப்படிப்பட்ட பலவிதமான பாடுகள் வரும்போது என்ன செய்வாய் என்று ஆண்டவர் கேட்டார்.

கர்த்தருடைய பிள்ளைகளே, இனிவருகிற நாட்கள் யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் இன்னும் அதிகமாய் கேள்விப்படுகிற நாட்களாய் காணப்படும், ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் இன்னும் அதிகமாய் எழும்புவார்கள், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் ஏற்படும்,  இவையெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம் என்று இயேசு கூறினார். அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக் கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்,  அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள், அக்கிரமம் மிகுதியாகும் என்றும் ஆண்டவர் எச்சரித்தார். ஆகையால் இப்போது கொஞ்சம் சமாதானம் இருக்கிற நாட்களில் ஆண்டவரைத் தேடுங்கள், அவருடைய பாதத்தில் அமருங்கள், அவர் சமூகத்தை வாஞ்சியுங்கள். ஆராதனைகளிலும், ஜெபக் கூட்டங்களிலும் ஓடிச்சென்று கலந்து கொள்ளுங்கள். அப்போது இனிவருகிற கடினமான நாட்களில் கர்த்தர் உங்களோடும், குடும்பத்தோடும், ஊழியங்களோடும் இருந்து உங்களை ஜெயமாய் நடத்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *