லேவி 19:16 உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் கர்த்தர்.
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/yDzmxz0GHBE
நியாயப்பிரமணத்தில் தேவனுடைய கட்டளைகளில் ஒன்று புறங்கூறுவது. புறங்கூறுவதற்கான காரணங்கள் என்ன? மற்றவர்கள் மீது அன்பு தனித்துப்போவதாலும், மற்றவர்களை புறங்கூறி தெரியும்போது, கர்த்தர் என்னை பார்க்கிறார் என்ற நினைவும் அல்லாமல் இருப்பவர்கள் தான் புறங்கூறி திரிவார்கள்.
புறங்கூறித்திரிவதால் அது இருதயத்தை புண்படுத்தும். நீதி 18 :8 கூறுகிறது, கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிருக்கும், ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும். அதுமாத்திரமல்ல அதினால் வரும் விளைவுகள், சண்டைகளை பிறப்பிக்க காரணமாய் மாறிவிடும். நீதி 25:23 கூறுகிறது புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும் என்பதாக. புறங்கூறுதல் ஆவிக்குரிய வாழ்க்கையும் பாழாக்கிவிடும், சரியாக ஜெபிக்க முடியாது, சரியாக ஆண்டவரோடு இணைந்திருக்கமுடியாது. சமாதானத்தை தொலைத்து, சண்டைகளோடு வாழும் வாழ்க்கை வாழாமல் இருக்க மற்றவர்களை பற்றி புறங்கூறுவதை தவிர்த்துவிடுங்கள்.
மிரியாமும் ஆரோனும் மோசேக்கு விரோதமாக புறங்கூறினார்கள். அவர்கள் புறங்கூறி பேசின வார்த்தைகளை மோசே அல்ல கர்த்தர் கேட்டார். ஆகையால் மிரியாம் ஆரோன் மீது கர்த்தருடைய கோபம் மூண்டது, தேவ மகிமை அவர்களை விட்டு விலகியது, மிரியாம் குஷ்டரோகியானாள், மிரியாம் ஐக்கியத்திலிருந்து விலக்கப்பட்டாள், என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். புறங்கூறித்திரிவதால் வரும் விளைவுகளை மிரியாமின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒருநாளும் சபையிலும், நீங்கள் வேலை செய்யும் இடங்களிலும் மற்றவர்களுக்கு விரோதமாக புறங்கூறிக்கொண்டு இருக்காதீர்கள். அதுபோல, மற்றவர்களை குறித்து உங்களிடம் ஒருவர் வந்து புறங்கூறினால், அதை தவிர்க்கவும் அதை கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருக்க பழகிக்கொள்ளுங்கள். இன்றைக்கு அநேகருக்கு மற்றவர்களை பற்றி குறைசொல்லி பேசுவதில் சுவாரசியம் இருக்கிறது என்று எண்ணி கேட்கிறவர்களாய் காணப்படுகிறார்கள்.
அதுபோல, மற்றவர்கள் ஒருவேளை உங்களை புறங்கூறலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கர்த்தர் அதை பார்க்கிறார் என்று அறிந்து, அதை தடுக்கவும் வேண்டாம், திரும்ப தாக்கவும் வேண்டாம். மாறாக, அவர்களை ஆசீர்வதியுங்கள். இது ஒரு கடினமான காரியம் போல தோன்றும். உங்களுக்கு விரோதமாக புறங்கூறுபவர்களை கர்த்தர் பார்ப்பார், அவர் உங்கள் நீதியை வெளிச்சத்திற்கு கொண்டுவருவார். ஆகையால் பிலி 4:8 ன்படி, கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

